பயனர்:TNSE VANATHI DIET ERD/மணல்தொட்டி-2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டேன்டி கெய்பிரியல் ரோசட்டிஒரு ஆங்கில கவிஞர், ஓவியர் மற்றும் மொழி பெயர்ப்பாளர். அவர் 1848 ல்'ப்ரி-ரேப்பலைட் ப்ரதர்ஹுட்' இயக்கத்தை வில்லியம் ஹால்மேன் ஹன்ட் மற்றும் ஜான் எவரெட் மிலைஸ் போன்றோருடன் இணைந்து நிறுவினார்.அவர் அடுத்த தலைமுறை கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்தார். அவர்களில் வில்லியம் மோரிஸ் மற்றும் எட்வர்ட் புருன் ஜோன்ஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். அவருடைய படைப்புகள் சின்னங்கள் வாயிலாக கருத்துக்களை வெளிப்படுத்தும் ஐரோப்பிய கலைஞர்களை வெகுவாக ஈர்த்தது. அவருடைய படைப்புகள் அழகியல்சார் இயக்கத்திற்கு ஒரு முன்னோடியாக திகழ்ந்தன. மேலும் அவை புலனுணர்வு மற்றும் இடைக்கால புனருத்தாரணங்களை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளன.அவருடைய முற்கால கவிதைகளில் ஜான் கீட்ஸின் தாக்கத்தை உணர இயலும்.பிற்கால கவிதைகளானவை எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளன.குறிப்பாக அவருடைய'த ஹவுஸ் ஆப் லைஃப்' என்னும் கவிதைத் தொடரில் இப்பண்புகளை காண இயலும். அவருடைய படைப்புகளில் கவிதையும் உருவமும் பின்னிக்கொண்டு இருப்பதை உணர முடியும். அவர் தன்னுடைய ஓவியங்களை பிரதிபலிக்கும் வகையில் கவிதைகளை எழுதியுள்ளார்.உதாரணமாக அவருடைய கவிதையான'த கர்ள்ஹுட் ஆஃப் மேரி வெர்ஜின்(1849) ல் தொடங்கி 'அஸ்டார்ட் ஸிரியாகா(1877) வரையிலான கவிதைகள் இதில் அடங்கும். மேலும் கவிதைகளை விளக்கும் வகையில் ஓவியங்களையும் வரைந்துள்ளார்.அவருடைய தங்கை 'கிறிஸ்டினா ரோசட்டி' எழுதிய 'கோப்லின் மார்கெட்' என்ற கவிதைக்கு அவர் ஓவியம் வரைந்தது குறிப்பிடத்தக்கது.