பயனர்:TNSE VANATHI DIET ERD/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாபானி பட்டாச்சாரியா
பிறப்பு(1906-11-10)10 நவம்பர் 1906
பகல்பூர், Bengal Presidency, British India
இறப்பு10 அக்டோபர் 1988(1988-10-10) (அகவை 81)
தொழில்எழுத்தாளர்
காலம்20 ஆம் நூற்றாண்டு

பாபானி பட்டாச்சாரியா வங்காள வம்சாவளியை சார்ந்த ஒரு இந்திய எழுத்தாளர். இவர் 1906 ஆம் வருடம் நவம்பர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். சமூக-யதார்த்தங்கள் சார்ந்த புனை கதைகளை எழுதியுள்ள இவர் வங்காள மாகாணத்தின் ஒரு பகுதியான பகல்பூரில் பிறந்தார். இவர் பாட்னா பல்கலைகழகத்தில் இளங்கலை பட்டமும் லண்டன் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.இந்தியா திரும்பிய அவர் வெளிநாட்டு தூதராக பணியாற்றினார்.பின்பு அமரிக்கா சென்ற அவர் இலக்கிய ஆய்வு சார்ந்த துறையில் ஆசிரியராக பணியாற்றினார்.அவர் ஹவாய் மற்றும் சியாட்டில் மொழிகளில் கற்பித்தார். அவர் தனது முப்பதுகளில் சமூக நடப்பியல் மற்றும் வரலாற்று பிண்ணனி கொண்ட புனை கதைகளை எழுத தொடங்கினார். இரண்டு பிரபல எழுத்தாளர்களின் அறிவுறையின் பேரில் தனது கதைகளை ஆங்கிலத்திலேயே எழுதினார்.

எழுத்து நடை[தொகு]

பாபானி பட்டாச்சாரியா இந்தோ-ஆங்லிகன் இலக்கியத்தில் சமூக நடப்பியல் பள்ளியை சார்ந்தவர் என்று வர்ணிக்கப்பட்டவர். அவருடைய எழுத்து இரவீந்திரனாத் தாகூர் மற்றும் மகாத்மா காந்தி அவர்களின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்ற சமூக நடைமுறை மெய்மையாளர்களாகிய 'பிரேம்சந்' போல் அல்லாமல் பாபானி பட்டாச்சாரியா மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனது புனை கதைகளை வாசிப்பவர் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் நையாண்டி கலந்த நடையில் நடைமுறை சூழலை அடிப்படையாக கொண்டதாக எழுதினார்.[1]


விருதுகள்[தொகு]

சாகித்யா அகடமி விருது,1967[2]

படைப்புகள்[தொகு]

  1. Some Memorable Yesterdays (Pustak Bhandar, 1941)
  2. So Many Hungers! (Hind Kitabs Limited, 1947)
  3. Indian Cavalcade (Nalanda Publications, 1948)
  4. He Who Rides a Tiger (Jaico Publishing House, 1955)
  5. The Golden Boat (Jaico Publishing House, 1956)
  6. Towards Universal Man (Visva Bharti Shantiniketan, 1961)
  7. Music for Mohini (Jaico Publishing House, 1964)
  8. Shadow from Ladakh (Hind Pocket Books Ltd., 1966)
  9. A Goddess Named Gold (Hind Pocket Books Ltd., 1967)
  10. Steel Hawk and Other Stories (Hind Pocket Books Ltd., 1968)
  11. Gandhi the Writer (National Book Trust, 1969)
  12. A Dream in Hawaii (The MacMillan Company of India Limited, 1978)
  13. Socio-Political Currents in Bengal: A Nineteenth Century Perspective (Vikas, 1980)

மேற்கோள்கள்[தொகு]

  1. Desai 1985, ப. 120.
  2. Gupta 2002, ப. 65.