பயனர்:TNSE Shanthi CHN/மணல்தொட்டி3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
 நல்ல மாணாக்கரின் இலக்கணம்.
அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யாி
அன்னா் தலையிடை கடைமா ணாக்கா்.
                                     நன்னுால்.

மாணவர்களின் கற்றல் திறனுக்கேற்ப அவர்களை முதல்,இடை,கடை என மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். முதல்நிலை மாணவர்கள்:- அன்னம் மற்றும் பசு போன்றவர்கள். அன்னப்பறவை பாலையும்,நீரையும் பிரித்து பாலை மட்டும் அருந்துதல் போல இம்மாணவர்களும் குணங்களையும்,குற்றங்களையும் பிரித்து குணங்களை மட்டும் கொள்வர். பசு மிகுந்த புல்லை உடைய இடத்தைக் கண்டால் அப்புல்லை வயிறு நிறைய மேய்ந்த பின்பு ஓரிடத்தில் சென்று அசைபோடுதல் போல இம்மாணவர்கள் மிகுந்த கல்வி உடைய ஆசிரியர் கருத்துகளை நிறையக் கேட்டுப் பின் தான் கேட்ட கருத்துகளை சிந்தித்துப் பாா்ப்பர். இடைநிலை மாணவர்கள்:- மண் மற்றும் கிளி போன்றவர்கள். மண் உழவரின் முயற்சிக்கேற்பப் பயன்தருதல் போல ஆசிரியர் வருந்தித் கற்பிக்கும் முயற்சிக்கேற்ப இம்மாணவர்கள் கற்பர். கிளி தனக்குக் கற்பிக்கப்பட்ட சொல்லை ம்டடுமே கூறவல்லது போல இம்மாணவர்களும் தான் கற்றவற்றை மட்டுமே கூறுவர். கடைநிலை மாணவர்கள்:- பழுதான குடம், ஆடு மற்றும் எருமை போன்றவகள். பழுதான குடம் நீரைத் தக்கவைக்காது. ஆடு செழிப்பான செடி ஒன்று இருப்பினும் செடிகள் தோறும் சென்று மேய்தல் போல இம்மாணவர்கள் கல்வியிற் சிறந்த ஆசிரியரிடம் பாடம் கேட்டுப் பயன் பெறமாட்டார். எருமை குளத்து நீரைக் கலக்கி பின் அருந்துதல் போல ஆசிரியர் வருந்திக் கற்பித்தும் (சல்லடை) பன்னாடை நல்லனவற்றைக் கீழே விட்டு குற்றங்களைத் தக்க வைத்துக் கொள்வது போல இம்மாணவர்கள் நல்லனவற்றை மறந்து விடுவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Shanthi_CHN/மணல்தொட்டி3&oldid=2340541" இலிருந்து மீள்விக்கப்பட்டது