பயனர்:TNSE Shanthi CHN/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                         நன்னுால் கூறும் நல்லாசிரியரின் இலக்கணம்.

உயர் குடிப்பிறப்பும்,உயிர்களிடத்தில் அன்பும்,கடவுள் வழிபாட்டால் ஏற்படும் மேன்மை குணங்கள் பொருந்தியவராகவும்,பல நுால்களைக் கற்றதனால் ஏற்பட்ட தேற்றமும்,தான் கற்ற நுாற்பொருளை மாணவர்கள் எளிதில் உணருமபடி எடுத்துச் சொல்லும் ஆற்றலும், ஆசிரியர் அவர்தம் கல்வியறிவினால் மலையை ஒத்த ஒயர்வு காட்டி மாணவர்களிடத்தில் பிரமிப்பு ஊட்டலும்,அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல மாணவர்களிடத்தில் பொறுமை காட்டுபவராகவும்,மலரினையொத்த மென்மையான மனம் உடையவராகவும்,துலாக்கோல் போன்ற நடுவு நிலைமை உடையவராகவும் இருப்பவரே நல்லாசிரியர்.

                           ஆசிரியராகாதவர் இலக்கணம்:-
மொழிகுண யின்மையும் இழிகுண வியல்பும்
அழுக்கா றாவாவஞ்ச மச்ச மாடலுங்
கழற்குட மடற்பனை பருத்திக் குண்டிகை
முடத்தெங் கொப்பென முரண்கொள் சிந்தையும்
உடையோாிலரா சிாியரா குதலே.
                                       நன்னுால்.
 

ஆசிரியர் அல்லாதவர் பாடம் கற்பிக்கும் குணமில்லாமையும்,பிறர் கல்வியைக் குறித்து பொறாமையும்,அதிகப் பொருள் பற்றும், பிறரை வஞ்சிக்கும் தன்மையும்,கேட்போர்க்கு அச்சமூட்டும் பேச்சும் கொண்டவராய் இருப்பர். தாம் கற்ற நுாற்பொருளை முறைபிறழக் கற்பிப்பதால் கழற்காய் என்றும் அவரிடம் நெருங்கி சந்தேகங்களை கேட்க இயலாது என்பதால் (மடற்பனை) ஒழுங்கு செய்யப்படாத பனை என்றும், தமக்குள்ளே உள்ள கல்வியை எளிதில் எடுத்துக் கொடுக்க இயலாதவராய் இருப்பதால் பருத்திக்குடுக்கை என்றும் தமது கல்வியை பாரபட்சமின்றி எல்லோர்க்கும் வழங்கும் தன்மையற்றவராய் இருப்பதால் முடத்தெங்கு என்றும் கூறப்படுகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Shanthi_CHN/மணல்தொட்டி2&oldid=2340647" இலிருந்து மீள்விக்கப்பட்டது