பயனர்:TNSE Shanthi CHN/மணல்தொட்டி1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                       காரணப்பெயர் அறிவோமா!!!

இறைவன்-எல்லாப் பொருள்களிலும் தங்கியிருப்பவன். உலகம்-நீா் உலா்ந்ததால் ஏற்பட்டது உலகம். உடம்பு,உடல்-உயிருக்கு உடை போல இருப்பது. உள்ளம்,மனம்-உள்ளுவதற்கு இடமாய் இருப்பது. எருது- ஏர் உழுதற்கு உரியது. ஏமாற்றுதல்-ஏமம்- காவல்,மாற்றுதல்-நீங்கச் செய்தல் கடல்-கடப்பதற்கு அரியது (முன்பு கருதப்பட்டதால்) கண்-எல்லாவற்றையும் காணும் இடமாக இருப்பது. காது-உயிரைக் காப்பதற்கு உரியது. காலம்-பருவக் காற்றால் ஏற்படுவது. (கால்-காற்று). கிளி-கிள்ளித்தின்பது கிழக்கு-பள்ளமாய் இருக்கும் திசை. குரங்கு-முதுகு எலும்பு வளைந்து இருப்பது. குதிரை-குதித்து ஓடுவது. குடல்-வளைந்து இருப்பது. கை-செய்வதற்குாியதுத. கொப்புழ்-கொய்புழ் (கொய்யப்பட்டதால் உள்ள துவாரம்.) தொப்புள் என தவறாக வழங்கப்படுகிறது. கோயில் (கோ+இல்)-தலைவன் அல்லது கடவுள் இருக்கும் இடம். சகோதரா்-சக+உதரா் (ஒரே வயிற்றில் இருந்து பிறந்தவா்.) தாய்-தன்னைத் தந்தவள். தந்தை-தன்னைத் தந்தவன். தமயன்-தம்+ஐயன் (தமக்கு தலைவன்) தம்பி-தனக்குப் பின் பிறந்தவன். தங்கை-தனக்குப் பின் பிறந்தவள். பெண்-பேணுதற்கு உாியவள். நாய்-நாவைத் தொங்கவிட்டு ஓடுவது. பொம்மை-பொய்மை வடிவம் உள்ளது. மரம்-தரையோடு மருவி நிற்பது. பள்ளிக்கூடம்-சமண உறைந்த இடம் பள்ளி. தெய்வத் தன்மை பொருந்திய இடமும் பள்ளி எனப்பட்டது. அங்கு சமண முனிவா்கள் கல்வி கற்பித்து வந்ததால் அது பள்ளிக் கூடம் எனப்பட்டது. பின் அப்பெயா் கல்வி கற்கும் இடத்திற்கு பொது பெயராயிற்று. மருந்து-சாவைத் தராமல் இருப்பது. வாய்-உணவு செல்வதற்குரிய வழி. வயிறு-வாயின் இறுதி. மேற்கு-மேடாய் இருப்பது. விநாயகா்-தனக்கு மேல் தலைவன் இல்லாதவா். விழா-விழைந்து (விரும்பி) நடத்துவது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_Shanthi_CHN/மணல்தொட்டி1&oldid=2339872" இலிருந்து மீள்விக்கப்பட்டது