பயனர்:TNSE SARAVANAN NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Arial view karur city.
Panaroma view of Karur Pasupateeswarar temple in side

கருர் வரலாறு

பெயர்க்காரணம்

    கருவுர், வாஞ்சி இரு பெயர்களாக இருந்தன என்று இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இது மேலும் பல பெயர்களைக் கொண்டது.  ஆதிபுரம், திருவாணி, பாப்புதெச்சரம், கருவிபிடினம், வஞ்சுலணியம், கர்பபுரம், திருவீட்டு வட்டம், பாஸ்கரபுரம் , முடிவழிந்து விராச்சலபுரம், கரபுரம்,ஆடகமடம், சேரமா நகர் மற்றும் ஷான் மங்கலா கேசரம்.  இது முன்னணி நகரமாக கருதப்படுவதைக் குறிக்கும்.
    வஞ்சி பண்டைய நகரம் வஞ்சி மியுட்டூர் என்று அழைக்கப்பட்டது. பண்டைய குறிப்பில் கருரா என்று அழைக்கப்பட்டது.  சேரர்களின் உட்புற தலைநகரம் ஆகும்.
    தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்று கருர்.  தமிழர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பாத்திரத்தை வகித்துள்ளது. அமராவதி ஆற்றின் கரையில் கருர் அமைந்துள்ளது. இந்து மதப்படி பிரம்மா இங்கே படைப்பு வேலை தொடங்கப்பட்ட இடமாகும்.  கருர் அருகிலுள்ள ஆறு நட்டார் மயிலின் பாறை கல்வெட்டுகளில் சேர மன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன.  சேர மன்னன் செங்குட்டுவன் கருர் ஆட்சியில் இருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.  கருர் சேரர்களின் தலைநகரம் ஆகும்.

தொல்பொருள் அகழாய்வு

    வடிவமைக்கப்பட்ட மண்பாண்டங்கள், செங்கல், மண்பொம்மைகள், ரோமானிய நாணயங்கள், பல்லவ நாணயங்கள், முலாம் புசிய அரிதான மோதிரங்கள் தோண்டி எடுக்கப்பட்டது.

தொழில்:

    நகைகள் தயாரித்தல், இரத்தினக்கல் அமைப்பிற்கான மையமாக இருந்திருக்கின்றது.  ரோம் நகரிலிருந்து தங்கங்கள் இறக்குமதி செய்யப்பட்டது.  கி.மு.150 ல் கிரேக்க அறிஞர் டோல்மி உள்நாட்டு வணிக மையமான கருரை ' கோரேவேரா என குறிப்பிட்டுள்ளார்.

நகராட்சி உருவாக்கம்:

    1874 ஆம் ஆண்டில் கருர் நகராட்சி அமைக்கப்பட்டது.  24-10-1969 ல் இருந்து முதல் தரம் நகராட்சிக்கு மேம்படுத்தப்பட்டது.[1]

கோவில்கள்:

Sri Balasubramania swamy temple, Vennaimalai

1.ஸ்ரீகல்யாண பசுபதீஸ்வரர் ஆலயம் 2. தாந்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம், 3. ஸ்ரீ பாலசுப்ரமணியசுவாமி , வெண்ணமலை.

  1. "About Karur municipality". Karur Municipality. பார்க்கப்பட்ட நாள் 2013-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_SARAVANAN_NGP/மணல்தொட்டி&oldid=2314167" இலிருந்து மீள்விக்கப்பட்டது