பயனர்:TNSE S.MUTHURENGAN DIET ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ தியாகராஜர்[தொகு]

ஸ்ரீ தியாகராஜர் ஒரு நல்ல கர்நாடக சங்கீத வித்துவான் ஆவார் .இவர் ஒரு சிறந்த ராம பக்தர் .இவர் பல கீர்த்தனைகள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும்இயற்றியுள்ளார்.பல புதிய ராகங்களை உருவாக்கி யுள்ளார். இவரது சமாதி திருவையாற்றில்உள்ள காவேரி நதிக்கரை அருகில் அமைந்துள்ளது.சங்கீத மும்மூர்த்திகளில் சிறந்தவராக கருதப்படுகிறார்.இவர் ஸ்ரீ ராம பிரான் மீது கொண்ட அளப்பரிய பக்தியால் ஸ்ரீ ராம பிரான் இவரது வீட்டிற்க்கு நேரில் வந்து தரிசனம் தந்துள்ளார்.இவர் தனது வாழ்நாளில் நமது வாழ்க்கையில் வருவதைப்போல பல் வேறு வகையான துன்பங்களை சந்தித்துள்ளார்.எவ்வளவு துன்பங்களை சந்தித்த போதும் ராம பக்தியை தனது உயிர்மூச்சாக கொண்டு பக்தி செய்துள்ளார்.இவர் இசையை இறைவனை அடையும் வழியாக கருதி பலகீர்த்தனைகளை அமைத்துள்ள்ளார்.இவர் காலத்தில்வாழ்தவர்கள்தான் முத்துஸ்வாமி தீட்சிதர்மற்றும் சியாமா சாஸ்திரிகளும் ஆவார்கள்.இவர் தனது வாழ்நாளில் நடந்த சம்பவங்களை பெரும்பாலும் கீர்த்தனைகளாக அமைத்துள்ளார்.வாழ்வில் எளிமையும் பொன் பொருளுக்கு ஆசைப்படாதவராகவே இருந்துள்ளார்.ஸ்ரீ ராமனை தனது இஷ்ட தெய்வமாக கருதியதோடு அவரை நேரில் காண மிகுந்த ஆவல் கொண்டு சதா சர்வ காலமும் ஸ்ரீ ராமனை நினைத்து ஸ்ரீ ராமநாமத்தை மனதில் உறுதியோடும் மிகுந்த நம்பிக்கையோடும் உச்சரித்து ராமபக்தி செய்துள்ளார்கள்.ஸ்வாமிகள் விக்ரக ஆராதனை மேற்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

http://thiruvaiyaruthyagarajaaradhana.org