பயனர்:TNSE RSN MCTM CHN/மணல்தொட்டி1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சர் மு.சித.முத்தையா செட்டியார் ஆண்கள் மேனிலைப்பள்ளி,சென்னை 84. இப்பள்ளி சென்னை புரசைவாக்கத்தில் 23,ராஜா அண்ணாமலை சாலை என்ற முகவரியில் அமைந்துள்ளது.இப்பள்ளி சுமார் நூற்று முப்பது ஆண்டுகளூக்கு முன்னர் சிதம்பரம் செட்டியார் அவர்களால் தொடங்கப்பட்டது.மிகவும்பாரம்பரியம் மிகுந்த இப்பள்ளியில் ஏழை மாணவர்கள் ஆயிரக்கணக்காணோர் படிக்கின்றனர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட் ஆசிரியர்களூம் பத்திற்கும் மேற்பட்ட் அலுவலகப்பணியாளர்களும் இப்பள்ளியில் பணிபுரிகின்றனர்.இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பலர் சமுதாயத்தில் உயரிய பதவிகளீல் உள்ளனர்.இப்பள்ளி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிக்கும் பள்ளியாக இப்பகுதியில் விளங்குகின்றது.இப்பள்ளில் காற்றோட்ட வசதியன வகுப்பறைகள்,பெரிய விளையாட்டு மைதானம்,மரங்கள் நிறைந்த சுற்றுச்சூழல் சிறப்பு அம்சங்களாகும்.இப்பள்ளியின் மாணவர்கள் கூடைப்பந்து விளை யாட்டில் மாநில அளவில் மட்டுமன்றி தேசிய அளவிலும் சாதனை படைத்து வருகின்றனர் என்பது சிறப்புத் தகவலாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_RSN_MCTM_CHN/மணல்தொட்டி1&oldid=2339004" இலிருந்து மீள்விக்கப்பட்டது