பயனர்:TNSE REVATHIKANI TPR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்டம் அரசு உயர்நிலைப்பள்ளி என் சின்னையகவுண்டன் வலசு அமைவிடம் : அரசு உயர்நிலைப்பள்ளி என்.சின்னையகவுண்டன் வலசு,திருப்பூர் மாவட்ட எல்லையில் மூலனூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.ஊரின் எல்லைகளாக கிழக்கே கருடன் கோட்டையும்,வடக்கே தில்லைக்கவுண்டன் புதூரும்,தெற்கே கீரனூரும்,மேற்கே கரியாம்பட்டியும் அமைந்துள்ளது. பள்ளித்தோற்றம்: இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில், ஆகஸ்ட் பதினைந்தாம் நாள்,1979 ம் வருடம் தொடங்கப்பட்டது.நல்ல காற்றோட்டம் உள்ள வகுப்பறைகளும், தூய்மையான வளாகம்,சுத்தமான கழிப்பறை வசதிகளுடன் அமைந்துள்ளது.இப்பள்ளியில் தற்போது ஏழு பட்டதாரி ஆசிரியர்களும்,ஓர் உதவியாளரும் பணியாற்றி வருகின்றனர்.தற்போது பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியராக ப.நல்லதம்பி அவர்கள் உள்ளார். மாணவர் வருகை : தில்லைக்கவுண்டன் புதூர்,மூலக்கடை,கந்தசாமி புதூர், சிலுக்கநாயக்கன் பட்டி,கருடன் கோட்டை,கொ.கீரனுர் போன்ற அருகாமை பகுதியைச் சார்ந்த சுமார் 85 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சிறப்பு அம்சங்கள் : ஊரக திறனாய்வு தேர்வு,தேசிய திறனாய்வு தேர்வுகளில் இப்பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசின் ஊக்க தொகையினை பெற்று வருகின்றனர்.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த நான்கு வருடங்களாக தொடர்ந்து நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.பேச்சு ,கட்டுரை, ஓவியம்,விளையாட்டு போன்ற போட்டிகளிலும், மற்ற கலை நிகழ்ச்சிகளிலும் மாணவர்கள் பங்கு கொண்டு ஒன்றிய அளவிலும்,மாவட்ட அளவிலும் பல பரிசுகளை வாங்கி குவித்துள்ளனர். கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு காலை,மாலை வேளைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.தமிழ் மன்றம் ,ஆங்கில மன்றம் போன்ற மன்ற செயல்பாடுகளும்,சாரணர் இயக்கம்,செஞ்சிலுவைச் சங்கம்,பசுமைப்படை போன்ற இயக்கங்களும் சிறப்பாக நடைபெறுகின்றது.யோகா மற்றும் உடற்பயிற்சிகள் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படுகிறது.அரசின் அனைத்து நலத் திட்டங்களும் ,அனைத்து மாணவர்களுக்கும் விரைவில் பெற்றுத்தரப்படுகிறது. கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்களும்,நூலகமும் மிகச் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.பள்ளியிலேயே சிறிய காய்கறி தோட்டம் அமைத்து சத்துணவிற்கு தேவையான காய்கறிகளை மாணவர்களே உற்பத்தி செய்கின்றனர்.இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.