பயனர்:TNSE PRAMILA CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னை கலாசாரம்

வங்கக் கடலின் கரையோரம் சின்னஞ்சிறு கிராமமாக இருந்த மதரச பட்டிணம் போர்த்துக்கீசியர்களின் வருகைக்குப் பிறகு வளர்ச்சி அடையத் தொடங்கியது.பின்பு ஆங்கிலேயர்கள் வர்த்தகம் பொருட்டு சென்னை வந்ததன் மூலம் இந்நகரம் படிப்படியாக வளர்ந்து சென்னை மாநகரமானது . இந்நகரத்தில் அனைத்து தர மக்களின் கலாசாரம் பிரதிபலிக்கின்றது.

இங்கு பழமையும் புதுமையும் கலந்த கலாசாரம் காணப்படுகிறது.மேற்கத்திய கலாசாரம்முதல் தமிழக பண்பாடுகள் வரை இங்கு பாரபட்சம் இன்றி காணமுடிகிறது.தமிழக கலாசாரத்தை ப்ரதிபலிக்கும் விதமாக சென்னையில் வருடந்தோறும் இசைக் கச்சேரிகளும்,கர்நாடக சங்கீத கச்சேரிகளும் நடத்தப்பட்டு வருகின்றது.சில வருடங்களுக்கு முன்பு சென்னை சங்கமம் என்னும் நிகழ்ச்சி சென்னையில் அநேக இடங்களில் நடத்தப்பட்டு தமிழக கலாசாரத்தை நிலைநாட்டினர்.

இங்கு தெற்காசிய உணவு வகைகளும் தென் இந்திய உணவு வகைகளும் பிரசித்திப்பெற்றது. தற்போது மேற்கத்திய உணவான பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகளும் பிரபலமாக உள்ளன. சென்னையில் அனைத்து மத வழிபாட்டு தலங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_PRAMILA_CHN/மணல்தொட்டி&oldid=2358720" இலிருந்து மீள்விக்கப்பட்டது