பயனர்:TNSE N EZHILARASAN NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவலை இல்லை நிக்வொய்ச்சிக்

    ஆஸ்திரேலியாவின் நிக்வொய்ச்சிக், கைகள், கால்கள் இல்லாமல் பிறந்தவர்.  இன்று கவலை இல்லாமல் வாழ்கிறார்.  பிறர் கவலைகளை போக்க வாழ்கிறார்.  குழந்தைப் பருவத்தில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அருவெறுப்பாகவே பார்க்கப்பட்டார்.  இன்றோ உலகமே தன்னை திரும்பிப்பார்க்க வைத்தார். அவருடைய துயரங்கள், மற்றவர்கள் தம் துயரங்கள் மறக்க ஊக்கப்படுத்துகின்றன.  அடுத்தவர்கள் உதவியோடு வாழ வேண்டியவர் அடுத்தவர்கள் வாழ்வதற்கே பேருதவியாக இருக்கிறார்.
    
    நிக்வொய்ச்சிக் 1982 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் நாள் ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் என்னுமிடத்தில் பிறந்தார்.  ஆண் குழந்தை பிறக்கும் என்பதை முன்கூட்டியே மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால் பிறந்த குழந்தையைப் பார்த்த பின்னர் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அருவெருப்புற்று துயரடைந்தனர். காரணம், இரண்டு கைகளும் இரண்டு கால்களுமே இல்லாமல் பிறந்திருந்தது.  இவரது பிறந்த தினம் தன் பெற்றோருக்கு ஒரு  துக்க தினமாகவே இருந்தது.  தன் குழந்தையை நான்கு மாதங்கள் வரை தாய் துக்கவே இல்லை.  பிறகு மனம் மாறியது. அக்குழந்தையை வளர்க்க முடிவு செய்தார்.
    இன்றோ நிக்வொய்ச்சிக் கோடிக்கணக்கான மக்களுக்கு தன்னம்பிக்கையின் சின்னமாக உருவெடுத்துள்ளார்.  கைகள், கால்கள் இல்லாதததால் போட்டது போட்டது போல கிடக்க வேண்டிய இவர் விமானத்திலிருந்து பாராசூட்டில் குதித்து சாதனை செய்கிறார்.  ஒரு புழு போல நெளிந்து கிடக்க வேண்டியவர் நீச்சல் குளத்தில் டைவ் அடித்து சாதிக்கிறார்.  கோல்ஃப் விளையாட்டில் ஒரு சிறந்த வீரரைப் போல மட்டை வீச்சு செய்கிறார்.  கைகள் இல்லாமலே டென்னஸூம், கிரிக்கெட்டும் விளையாடுகிறார்.  கால்கள் இல்லாமலே கால்பந்து விளையாடுகிறார்.  கடல் அலை சறுக்கு விளையாட்டிலும் சாதனை புரிகிறார்.  நிக்வொய்ச்சிக் செய்யும் எந்த ஒரு செயலுமே பார்ப்பவருக்கு சாதனையாகவே தெரிந்தது.  அவர் சாதனைகள் செய்யும்போது மக்களுக்கு தன்னம்பிக்கை தானாக எழுச்சியடைகிறது.
    கைகள், கால்கள் இல்லை என்பது பெருங்குறையாக இருந்தாலும் அவருக்கு கிடைத்த கேலியும் கிண்டல்களும், நிக்வொய்ச்சிக்கை நிலைகுலையச் செய்தது. தாழ்வு மனப்பான்மை இவரை தனிமைப்படுத்த எண்ணியது.  மற்றவர் உதவியில்லாமல் வாழ இயலாத நிலையுள்ளதால் வெறுப்புற்றான்.  தற்கொலை செய்து கொள்ளவும் மற்றவரின் உதவியை கேட்டு ஏங்கினான்.  8 வயதாகும்போது குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கிச் சாக முயற்சித்தான்.  மேசை மீது ஏறி தலைகீழாய் அத்தொட்டியில் குதித்தும் தன் முயற்சி பலனளிக்கவில்லை.  இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.  நீ இறந்து விட்டால் உன்னைப்போல் ஒருவன் கிடைக்கமாட்டான் என்று கூறினார்கள். தனக்காக வாழும் தன் பெற்றோரின் பாசத்தை நினைத்தான்.  சாகக்கூடாது என முடிவெடுத்தான். எப்போதும் உயிருட்டும் நம்பிக்கை பிறந்தது.