பயனர்:TNSE NIRMALA DIET NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓங்குதன்மை எதிர் அதீதஓங்குதன்மை ஓங்குதன்மை எதிர் அதீதஓங்குதன்மை என்ற கருத்தானது மரபியலில் விவாதத்திற்குரிய களமாக பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்தது. மரபியல் ரீதியான காரணம்:

     உயிரினங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் மரபு சார்ந்த பன்முக தன்மையை இழந்து விடுகின்ற காரணத்தால் அவ்வுயிரினங்களின் சந்ததின் உருவாக்கமும் குறைந்து விடும்.
     ஒத்த இயல்புடைய ஒடுங்கு தன்மை அல்லீல்கள் மற்றும் கலப்பின வீரியதன்மை வாய்ந்த உயிரினங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரம் மற்றும் கலப்பின தன்மை வந்த உயிரினங்களின் சந்ததி உருவாவதற்கு பல மரபியல் ரீதியான அறிவியல் கோட்பாடுகளை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் மேன்டலின் கோட்பாடுகள் புரிந்து கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளபடது. 
     கலப்பின தொழில்நுட்பமானது  வீரியதன்மை வாய்ந்த உயிரினங்களை உருவாக்குவதற்கு கீழ்க்கண்ட  இரு கருதுகோள்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

உயிரினங்களின் வீரிய தன்மைக்கான மரபியல் காரணம் : 1. ஓங்குதன்மை கருதுகோள்:

        ஒத்த இயல்புடைய  உயிரினங்களில்  சில ஒடுங்கு ஜீன்கள் அதற்கான பண்புகளை மிக குறைவாகவே வெளிப்படுத்துகிறது . சந்ததியில் காணப்படும் ஜீன்களின் வெளிப்பாடு அவர்களின் பெற்றோர் மரபியல் பண்பை ஒத்தே உள்ளது. 

2. அதீதஓங்குதன்மை கருதுகோள்:

வேற்று இயல்புடைய ஓங்குதன்மையுடைய அல்லீல்களின் கலப்பு , வீரிய தன்மை வாய்ந்த உயிரினங்களை உருவாக்கும் அதே சமயத்தில் ஒத்தை இயல்புடைய ஓங்கு தன்மையுடைய அல்லீல்களின் கலப்பு மரபியல் குறைபாடுயுடைய உயிரினங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக உள்ளது.

      இக்கருதுகோள் எட்வர்ட் ஈஸ்ட்  (1908) மற்றும் ஜார்ஜ் (1908) ஆகியோர்களால்முன்மொழியப்பட்டது .
      உயிரினங்களின் மரபியல் வெளிப்பாடு  பற்றிய ஆய்வுகளில் ஓங்குதன்மை மற்றும் அதீதஓங்குதன்மை கருதுகோள்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.