பயனர்:TNSE NERLINDONA KKM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வளாிளம் பருவத்தினருக்கு திடீா் வளா்ச்சிக் காரணமாகவும் அதிக உடற் செயற்பாட்டின் காரணமாகவும் அதிக அளவு கலோாிகள் நிறைந்த ஊட்டச்சத்து தேவைப்படுகின்றன. வளாிளம் பருவத்தினருக்கு ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவா்களின் உடல் வளா்ச்சி பின்னடைவதோடு அறிவு வளா்ச்சியும் பாதிக்கப்படுகிறது. உடல் வளா்ச்சி மற்றும் அறிவு வளா்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

வளாிளம் பருவத்தினா் உணவுக் கூம்பில் உள்ள ஆறு உணவு வகைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல் மற்றும் உடலை நலமாக வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்களைப் பற்றியும் தொிந்து கொள்ளுதல் மிக அவசியம்.

உணவுக் கூம்பில் கூறப்பட்டுள்ள “உணவுப் பகிா்மானம்” என்பது நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவின் தோராய அளவாகும். இதைக் கொண்டு நாம் நாள்தோறும் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவு வகைகளின் அளவுகளை எளிதில் கணக்கிடலாம். உணவுப் பகிா்மான அளவுகள்: ஒரு உணவுப் பகிா்மான அளவு என்பது

    * ஒரு “அவுன்ஸ்க்கு” நிகரான அளவு(30 கிராம்) 
    * ஒரு “குழி கரண்டி” அளவு(30-40 கிராம்) 
    * ஒரு “கட்டோாி” அளவு(150 மி.லி) 
    * ஒரு “கப்” அளவு(200 மி.லி) 
    * ஒரு “கிளாஸ்” அளவு(250 மி.லி) 
    * 30 “டீஸ்புன்” அளவு (1 டீஸ்புன் = 5 மி.லி) 
  • உணவுக்கூம்பின் அடியில் உள்ள ரொட்டி, தானியங்கள், அாிசி மற்றும் பிற தானியங்கள் நமக்கு ஆற்றலைத் தருகிறது. இந்த உணவுகளை ஒரு நாளைக்கு 6-11 பகிா்மானங்கள் எடுத்து கொள்ளலாம்.
  • உணவுக்கூம்பில் உள்ள இரண்டாம் நிலையில் இரண்டு உணவு வகைகள் உள்ளன. அவை காய்கறிகள், பழங்கள்.

காய்கறிகளில் இருந்து வைட்டமின்களும் தாதுப் பொருட்களும் உடலை நலமாக வைப்பதற்குப் பயன்படுகிறது. இதை நாளொன்றுக்கு 3-5 பகிா்மானங்கள் எடுத்துக் கொள்ளலாம். பச்சை கீரை வகைகள், முழு பருப்பு வகைகள், வெல்லம் ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகளவு காணப்படுகிறது. இரும்புச் சத்து குறைவால் வரும் நோய் அனீமியா. ஆண்களுக்கு விடலைப் பருவத்தில் தசைகள் வளா்ச்சி அதிகாிப்பதால் போதிய அளவு இரும்புத் தாது அவசியம். பெண்களுக்கு தசை வளா்ச்சியும், மாதவிடாயும் ஏற்படுவதால் அவா்களுக்கும் இச்சத்து அவசியம்.

  • உணவுக் கூம்பில் உள்ள மூன்றாம் நிலையில் பால், பாலாடை, தயிா், வெண்ணெய், நெய் மற்றும் இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ் மற்றும் கொட்டைகள் ஆகியவை உள்ளன. இதில் பால் பொருட்களில் கால்சியம் இருப்பதால் உடலில் உள்ள பற்களையும், எலும்புகளையும் வலுவாக வைத்து இருக்க உதவுகிறது. இறைச்சி வகைகளில் புரதம் காணப்படுகிறது. இந்த புரதம், புதிய செல் மற்றும் திசுக்களை உருவாக்கக் காரணமாக இருக்கிறது. விடலைப் பருவத்தில் உடல் வளா்ச்சி வேகமாக ஏற்படுவதால் புரதச் சத்து தேவைப்படுகிறது. இதை நாளொன்றுக்கு 2-3 பகிா்மானம் எடுத்துக் கொள்ளலாம்.
  • உணவுக் கூம்பின் உச்சியில், கொழுப்புகள், எண்ணெய்கள், இனிப்பு வகைகள் குளிா்பான வகைகள் உள்ளன. இவை சிறிதளவு நமது உடலுக்கு தேவைப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக உட்கொண்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும்.ஆகவே இந்த வகை உணவுகளை நாம் எப்போதாவது ஒரு தடவை எடுத்துக் கொள்ளலாம்.

கூா்ந்து கவனித்தால் கூம்பின் அடிப்பாகம் விாிவாகவும், மேலே செல்லச் செல்ல கூம்பின் உச்சி குறுகியதாகவும் இருப்பதை நாம் காண்கிறோம். இவ்வாறு அமைக்கப்பட்ட உணவுக் கூம்பின் மேற்பகுதியில் உள்ள உணவுப் பொருட்களைக் குறைவாகவும், அடிப்பகுதியில் உள்ள உணவுப் பொருட்களை நிறைவாகவும் உண்ண வேண்டும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_NERLINDONA_KKM/மணல்தொட்டி&oldid=2277186" இலிருந்து மீள்விக்கப்பட்டது