பயனர்:TNSE MURALI TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

 வில்லியம் தாமஸ் அஸ்ட்பரி (மற்றொருபெயர் பில் அஸ்ட்பரி), இவர் 1898 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி பிறந்தார். இவர் ஓர் உயிரியல் மூலக்கூறுகளின் முன்னோடி, X- கதிர் மாறுபாடு பற்றி ஆய்வுகள் செய்த ஒரு ஆங்கில இயற்பியலாளர் மற்றும் மூலக்கூறு உயிரியலாளர் ஆவார். கெரோட்டின் என்ற புரதம் மீது அவரது பணிக்கு லீனுஸ் பவுலிங் என்ற அமைப்பு ஆல்பா ஹெலிக்ஸ் கான கண்டுபிடித்ததற்கான ஆதாரத்தை வழங்கியது. 1937 ஆம் ஆண்டு டி.என்.ஏ பற்றி அவர் ஆய்வு செய்தார், அதன் கட்டமைப்பின் தெளிவுபடுத்தலில் முன்னோடியாக ஆய்வு செய்தார். இவர் லண்டனில் உள்ள லீட்ஸ் என்னும் இடத்தில் ஜூன் மாதம் 4-ஆம் தேதி 1961-ஆம் ஆண்டு இறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை

   அஸ்ட்பரி உடன் பிறந்த ஏழு பேரில் நான்காவது குழந்தை, இவர் இங்கிலாந்திலுள்ள லாங்க்டன்- ஸ்டேஃபோர்ஷெயரில் பிறந்தார். அவரது தந்தை, வில்லியம் எட்வின் அஸ்ட்பரி, ஒரு குயவன் மற்றும் இவரது தந்தை குடும்பத்திற்கு தேவையான வசதிகளை வழங்கினார். அஸ்ட்பரிக்கு ஒரு இளைய சகோதரர் நார்மன் என்பவர் இருந்தார், அவருடன் இவர் இசையை நேசித்தார்.
 அஸ்ட்பரி ஒரு குயவன் ஆக இருக்கலாம், ஆனால் அதிர்ஷ்டவசமாக, லண்டன் உயர்நிலைப் பள்ளிக்கான ஒரு உதவித்தொகையைப் பெற்றார், அங்கு அவரது ஆர்வங்கள் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் உதவி தலைமையாசிரியர் ஆகிய இரு வேதியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டன. இவர் தலைமை மாணவனாக மாறி, சதுர்லண்டின் தங்க பதக்கம் பெற்ற பிறகு, அஸ்ட்பரி மட்டுமே உள்ளூர் உதவித்தொகை பெற்றார், இதனால் கேம்பிரிட்ஜ்-ல்உள்ள இயேசு கல்லூரிக்கு மேற்படிப்பிற்காக சென்றார்.
   கேம்பிரிட்ஜ்-ல்  இரண்டு பருவ காலங்களுக்குப் பிறகு, அவருடைய படிப்புகள் முதல் உலகப் போரின் போது  குறுக்கிட்டன. 1917 ஆம் ஆண்டில் ராயல் ராணுவ மருத்துவக் கழகங்களுடன் அயர்லாந்தில் உள்ள கார்க் என்ற இடத்திற்கு அனுப்பப்பட்டார். அவர் பின்னர் கேம்பிரிட்ஜ் திரும்பி, இயற்பியல் என்ற சிறப்பு கொண்டு தனது கடைசி  ஆண்டு படிப்பை முடித்தார்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MURALI_TVM/மணல்தொட்டி&oldid=2309602" இலிருந்து மீள்விக்கப்பட்டது