பயனர்:TNSE MATHIALAGAN TVM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிளகாய் மிளகாய் என்பது காய்கறிகளில் ஒன்றாகும்.இப்பயிர் நாடுமுழுவதும் சாகுபடி செய்யப்படுகிறது.இது சொலனேசியே

குடும்பத்தைச் சார்ந்ததாகும். இவற்றில் கேப்சிகன் என்கிற வேதிப்பொருள் உள்ளதால் காரத்தன்மையுடன் உள்ளது.

இவை இரண்டு முறையில் பயன்படுகிறது

  1. பச்சை மிளகாய் காய்கறியாக பயன்படுகிறது.
  2. மிளகாய் பழுத்தப்பின் உலரைவைத்து பொடி செய்து அவற்றை உணவு பொருளில் சுவை ஊட்டியாக பயன்படுகிறது.

வகை : பி.கே.எம்1 , பி.கே.எம் 2 , கோ 1, வீரிய ஒட்டு

விதை அளவு 500 கிராம் - 900 கிராம் / ஒரு எக்டர்

விதை மற்றும் நாற்று நடவு ஒரு எக்டர் நடவு செய்ய 100 ச.மீ மேட்டு நாற்றங்கால் தயார் செய்து விதைக்க வேண்டும். விதைப்பு செய்த 5 அல்லது 6

வாரங்களில் மாற்று நடவு முறையில் 45 x 60 செ.மீ இடைவெளியில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.

உரமேலாண்மை மண் பரிசோதனை செய்து பின் பரிந்துரையின் அடிப்படையில் உரம் இட வேண்டும். தொழுஉரம் 12.5 டன் / ஒரு எக்டர் இட வேண்டும்.மண் பரிசோதைன செய்ய இயலாத நிலையில் ஒரு எக்டருக்கு 100 : 80 : 50 என்ற அளவில் தழை , மணி மற்றும் சாம்பல் சத்துக்களை இட வேண்டும்.

பயிர்பாதுகாப்பு மிளகாய் பயிரை பொதுவாக பாதிக்கககூடிய இலைபேன், வெள்ளை ஈ போன்ற சாறு உறிஞ்சும் பூச்சிவிரட்டியான கிள்ளிகுளம் வசம்புத்துாள் எக்டருக்கு 25 கிலோ துாவி விட வேண்டும்.

இலை புழு மற்றும் காய் புழுக்களை விளக்கு பொறி, இனக்கவர்ச்சி பொறி இவற்றை பயன்படுத்தி கண்காணிக்க வேண்டும். மேலும் ஒருங்கினைந்த பயிர்பாதுகாப்பு முறையில் பின்பற்ற வேண்டும்.

அறுவடை மற்றும் மகசூல் மிளகாய் அறுவடைைய இரண்டு நிலையில் அறுவடை செய்ய வேண்டும்.

  • பச்சை மிளகாய் .
  • பழுத்தமிளகாய்

இவற்றை தேவைக்கு ஏற்றவாறு அறுவடை செய்ய வேண்டும். ஒரு எக்டருக்கு 75 -90 குவிண்டால் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கும்: 8 -9 குவிண்டால் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும்