பயனர்:TNSE MALA DIET ARY/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழுப்பு வளர்சிதை மாற்றம்[தொகு]

கார்போ ஹைட்ரேட்டுக்கு அடுத்த நிலையில் அதிக ஆற்றல் தரும் பொருள் கொழுப்பு. இது ஆக்ஸிகரனம் அடையும் பொழுது அதிக அளவில் நீரை கொடுக்கிறது. வறண்ட நிலையில் வாழும் விலங்குகள் தங்களது நீர் தேவையை கொழுப்பு ஆக்ஸிகரனத்தின் மூலம் பெறுகிறது. எ.கா. ஒட்டகம், கங்காரு கொழுப்புகள் மாற்றம் அடைந்து கொழுப்பு அமிலமாக மாறுவதும் சேமித்து வைக்கப்படுவதும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தில் அடங்கும்.

      உணவு செறிக்கும் பொழுது சிறு குடலில் கொழுப்பு, கொழுப்பு அமிலமாகவும் கிளிசரால்களாகவும் பிரிகின்றன. இவை குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு நிணநீர் நாளங்கள் மூலம் சுற்றோட்ட மண்டலத்தில் கலக்கின்றன. மேலும் இவை தோலுக்கு அடியில் கொழுப்பு திசுக்களில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆக்ஸிகரணமடைந்து கார்பன்டை ஆக்ஸைடு மற்றும் நீராகவும் மாறுகிறது.இவை நுறையீரல் மற்றும் தோல் மூலம் வெளியேற்றப்படுகிறது. 

கொழுப்பில் மூலக்கூறுகள் நீண்ட சங்கிலியாக அமைந்துள்ளது. இரட்டைப் படை கரிமக் கூறுகளைப் பெற்ற கொழுப்பு ஆக்ஸிகரணமடைந்து அசிட்டிக் அமிலம் உருவாகிறது. ஒற்றைப்படை கரிமக் கூறுகளைப் பெற்ற கொழுப்புகள் ஆக்ஸிகரணம் அடைந்து பைரூவிக் அமிலமாக மாறுகிறது. இவற்றின் மூலம் அதிக ஆற்றல் உருவாகி உயிர்ச் செயலுக்கு உதவுகிறது. மேலும் கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அட்ரினல், தைராக்ஸின், குளுக்கோ காட்டிகாயிடுகள், அட்ரினோகாட்டிகாயிடுகள், மற்றும் இன்சுலின் போன்ற ஹார்மோன்கள் வளர்சிதை மாற்றத்தை ஒழுக்கமைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

உடல் செயலியல் பேரா. டி.எஸ் வரதராசன் 1988

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MALA_DIET_ARY/மணல்தொட்டி&oldid=2344821" இலிருந்து மீள்விக்கப்பட்டது