பயனர்:TNSE MALATHI NGP/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூவரசு மருத்துவ குணம்

வகைகள் 1.கொட்டைப்பூவரசு,-இதன் விதைகள் பருத்துக் காணப்படும் 2.சாதாரணப் பூவரசு-இதன் விதைகள் தட்டையாகக் காணப்படும்

அமைப்பு இதன் பூ மொட்டு சிறிய பம்பரம் போல் இருக்கும். பூக்கள் மஞ்சள் நிறமுடையதாக மலரும்.

மருத்துவ பயன்கள் படர்தாமரை, விஷக்கடி, செதில் படை சிரங்கு, தொழுநோய், கரப்பான், ஊரல் அரிப்பு, மேகநோய், எச்சில் தழும்பு சோகை, பெருவயிறு போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.

விஷக்கடி மற்றும் படர்தாமரை பூவரசம் பூவின் காய்களை உடைத்தால் மஞ்சள் நிற திரவம் கசியும். இதனை அடிப்பட்ட காயங்களுக்கு தடவலாம் மற்றும் விஷக்கடி, படர்தாமரை, செதில் படை சிரங்கு இவற்றிற்கு தடவலாம்.

தொழுநோய்: பூவரசு பட்டையை எடுத்துப் பாலில் அவித்து உலர்த்தி அதனுடன் சமஅளவு பரங்கிப்பட்டை சேர்த்து நன்கு இடித்து சூரணம் செய்து கொள்ள வேண்டும். இதனை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து தேவையான அளவு பசு வெண்ணெயில் கலந்து காலை மாலை உண்டு வந்தால் நாள்பட்ட தொழுநோய் நீங்கும். இதை உட்கொள்ளும் போது உப்பை நீக்க வேண்டும். நுறு வருடமான பூவரச மரத்தின் வேரை நன்கு உலர்த்தி பொடி செய்து உண்டு வந்தால் தொழுநோய் நீங்கும்.

சொரிசிரங்கு கரப்பான் பூவரசின் பழுப்பு இலையை உலர்த்தி கருக்கி தேங்காய் எண்ணெயில் கலந்து போட்டால் சொறிசிரங்கு கரப்பான் மற்றும் ஊரல் அரிப்பு குணமாகும்.

காணாக்கடி உடம்பில் என்ன பூச்சி கடித்ததென்று தெரியாத காணாக்கடிகளுக்கு பூவரசம் மரப்பட்டையை 210 கிராம் எடுத்து இடித்து ஒரு சட்டியிலிட்டு 1400 மில்லி நீர் விட்டு காய்ச்சி மூன்றில் ஒரு பங்காக வற்றியபின் வடிகட்டி தினமும் இரண்டு வேளை (காலை, மாலை) அருந்தி வந்தால் காணாக்கடி விஷம் மற்றும் சோகை பெருவயிறு முதலிய நோய்கள் குணமாகும்.

மருத்துவ குணம் மிகுந்த இப்பூவரசு ஒரு காயகல்ப மரமாகும். இவ்விரண்டு வகைகளுமே மேற்கூறப்பட்ட நோய்கைள குணமாக்கும் தன்னம்பிக்கைக் கொண்டதாக உள்ளது.

சான்று: thamil.co.uk.,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_MALATHI_NGP/மணல்தொட்டி&oldid=2744410" இலிருந்து மீள்விக்கப்பட்டது