பயனர்:TNSE Kadampabala KRR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமைப்பின் கோட்பாடுகள்[தொகு]

அமைப்பின் கோட்பாடுகள்,ஒரு அமைப்பானது செம்மையாக செயல்பட அவசியம் ஆகும்.

நோக்கங்களின் ஒருமை[தொகு]

ஒரு அமைப்பின் நோக்கம் என்பது இலக்கினை அடையக்கூடியதாக இருக்க வேண்டும்.குறிக்கோள்களைத் தெளிவாக முடிவு செய்யவேண்டும்.குறிக்கோள்களை நிறைவேற்றும் வகையில் அதன் நடவடிக்கைகளை வடிவமைத்தல் வேண்டும்.

வேலைப்பகிர்வு[தொகு]

அமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிட்டு, மொத்த பணிசுமையை அறிதல் வேண்டும். பின்னர் மொத்த பணியை பல்வேறு துறைகளிடையே பகிர்வு செய்தல் வேண்டும். இதுவே துறைப்படுத்துதல் எனப்படும்.

கட்டுப்பாட்டு வீச்செல்லை[தொகு]

ஒரு அதிகாரி எத்தனை பணியாளர்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்பதே கட்டுப்பாட்டு வீச்செல்லை எனப்படும்.அதிக பணியாளர்களை நிர்வகிக்க இயலாது.எனவே நியாயமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருக்க வேண்டும்.

தரவரிசைக் கோட்பாடு[தொகு]

ஆணையுரிமையின் வரிசை உயர்மட்டத்திலுள்ள உயர் அலுவலரிடமிருந்து கீழ்மட்டத்திலுள்ள பணியாளர்கள் வரை படிப்படியாக கீழ்நோக்கி வரவேண்டும்.இதற்கு கட்டளை இணைப்பு என்று பெயர். உயர் அலுவலர் ஆணையுரிமை வழங்குகிறார்.கீழ்பணியாளர் பணியை செய்து முடிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.