பயனர்:TNSE KAPILAN TVR/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
                                            உ
                                    பைரவர் வழிபாடு
                    திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
                	பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
                	ஆதலால் வானோடும் ஆனைமுகத்தானை
                               காதலால் கூப்புவார் தம்கை.

எந்த காரியமாக இருந்தாலும் விக்கினமின்றி செய்து வைப்பவர் விநாயக பெருமான் . அதனால் தான் அவரை விக்னேஸ்வரர் என்றும் குறிப்பிடுகின்றோம். இதனால்தான் ஆலயங்களில் விநாயகர் தரிசனம் முதலிடம் பெறுகிறது சிவாலயங்களில் விநாயகர் தரிசனத்துடன் ஆரம்பிக்கும் வழிபாடு பைரவ தரிசனத்துடன் நிறைவடையும். சிவபெருமானின் திருகோலங்களில் பைரவர் திருகோலமும் ஒன்று. ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே சூல ஸஸ்தயா தீமஹி தந்நோ பைரவ ப்ரசோதயாத் இந்த காயத்ரி மந்திரத்திற்கு உரிய கடவுள் பைரவர்

பைரவர் வரலாறு பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர் அடியார்களின் பாபத்தை நீக்குபவர் என்று பொருள் கூறப்படுகிறது. படைத்தல் காத்தல் அழித்தல் அதாவது ஒடுக்குதல் ஆகிய முக்கிய இறையருள் தொழில்களைச் செய்து பல லட்ச உயிர்களையும் காப்பதால் அவருக்குத் திரிசூலம் அதிகார ஆயுதமாக அளிக்கப்பட்டது. படைத்தல் தொழிலை உடுக்கையும் காத்தல் தொழிலை கையில் உள்ள கபாலமும் அழித்தல் தொழிலை உடலில் பூசிய விபூதியும் குறிக்கும். இந்த கடவுளே ஆனந்த பைரவராக உலகைப் படைக்கிறார். பின்னர் கால பைரவராக உலகை காக்கின்றார். அதன் பின்னர் காலாக்கினி பைரவராக பிரளய காலத்தில் ஒடுக்க வருகின்றார்

பைரவரின் சிறப்பு வடிவங்கள்

பைரவர் நீலநிற மேனியராய் சிலம்பொலிக்கும் திருவடிகளை உடையவராய் பாம்புகள் பொருந்திய திருஅரையும் தலை மாலைகள் புரளும் திருமார்பும் சூலம் மழு பாசம் உடுக்கை இவைகள் ஏந்திய திருக்கரங்களையும் சிவபெருமான் போன்றே மூன்று கண்களையும் இரண்டு கோரைப்பற்களை உடையவராய் செஞ்சடை உடையவராய் கோபச் சிரிப்பும் உக்கிர வடிவமும் உடையவராய் காட்சியளிப்பார் என்று பைரவரின் தோற்றத்தை புராணங்கள் கூறுகின்றன. உடற்பற்றை நீக்கியபடியால் பைரவர் நிர்வாண கோலத்துடன் காட்சியளிக்கின்றார். ஸ்ரீபைரவர் காவல் தெய்வமாகையால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். பைரவரின் திருவுருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடக்கமாகியுள்ளன. தலையில் மேஷ ராசியும் கழுத்துப் பகுதியில் ரிஷப ராசியும் தோள்புஜத்தில் மிதுனமும் மார்பில் கடகமும் வயிற்றுப் பகுதியில் சிம்மமும் குறியில் கன்னியும் தொடையில் துலாமும் முட்டியில் விருச்சிகமும் முட்டியின் கீழ்பகுதியில் தனுசும் மகரமும் கணுக்காலில் கும்பமும் பாதத்தில் மீன ராசியும் அமைந்துள்ளதாக ஜாதக நூல்கள் விவரிக்கின்றன.

கிழமைகளும் பைரவ வழிபாடும்

ஞாயிற்றுக்கிழமை

திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் அல்லது ருத்ராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி வழிபட வேண்டும்.

திங்கட்கிழமை திங்கட்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அல்லிமலர் மாலை சூட்டி, புனுகு சாற்றி, பாகற்காய் கலந்த சாதம் படைத்து அர்ச்சனை செய்தால் கண்டச் சனியின் துன்பம் நீங்கும். செவ்வாய்க்கிழமை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு செவ்வரளி மலர் மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் படைத்து, செம்மாதுளம் கனிகளை நிவேதித்து அர்ச்சித்து வழிபட்டால் குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை வலுப்படும். புதன்கிழமை புதன்கிழமை ராகு காலத்தில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, பயத்தம் பருப்பு சாதம் படைத்து அர்ச்சனை செய்ய, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம்; தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெறலாம். வியாழக்கிழமை வியாழக்கிழமையில் பைரவருக்கு சந்தனக்காப்பு அணிவித்து, மஞ்சள் நிற மலர்களால் மாலை சூட்டி, பால் பாயசம், சுண்டல், நெல்லிக்கனி, ஆரஞ்சு, புளிசாதம் படைத்து அர்ச்சனை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சந்தனக் காப்பு அணிவித்து, புனுகு பூசி, தாமரை மலர் சூட்டி, அவல், கேசரி, பானகம், சர்க்கரைப் பொங்கல் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் திருமணத் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சனிக்கிழமை சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் பைரவருக்கு நாகலிங்கப்பூ மாலையைச் சாற்றி, எள் கலந்த அன்னம், பால் பாயசம், கருப்பு திராட்சை நிவேதனம் செய்து அர்ச்சித்தால் சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்கும். சனி பகவானின் ஆசிரியர் பைரவர் என்று சொல்லபடுவதால் சனியின் பாதிப்பு இருக்காது.


அஷ்ட பைரவர்களும் வாகனங்களும்


பைரவர் வாகனம் அசிதாங்க பைரவர் அன்னம் குரு பைரவர் ரிஷபம் சண்ட பைரவர் மயில் குரோதன பைரவர் கருடன் உன்மத்த பைரவர் குதிரை கபால பைரவர் யானை

பீஷண பைரவர் 				சிம்மம்

சம்ஹார பைரவர் நாய் நட்சத்திரங்களுக்குரிய பைரவர்களும் வழிபட வேண்டிய இடங்களும் 1 அசுவினி ஞான பைரவர் போரூர் 2. பரணி மகா பைரவர் பெரிச்சியூர் 3. கார்த்திகை அண்ணாமலைபைரவர் திருவண்ணாமலை 4. ரோகிணி பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர் 5. மிருகசீரிஷம் ஷேத்திரபால் பைரவர் ஷேத்திரபால புரம் 6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர் 7. புனர்பூசம் விஜயபைரவர் பழனி 8. பூசம் ஆவின பைரவர் ஸ்ரீவாஞ்சியம் 9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி 10. மகம் நர்த்தன பைரவர் வேலூர் 11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம் 12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மாதேவி 13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர் 14. சித்திரை சக்கர பைரவர் தர்மபுரி 15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை 16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம் 17. அனுஷம் ஸ்வர்ண பைரவர் சிதம்பரம், ஆடுதுறை, 18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி, 19. மூலம் சட்டைநாதர் சீர்காழி 20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகுமங்கலம் 21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர் 22. திருவோணம் மாரித்தாண்டபைரவர் வயிரவன்பட்டி 23. அவிட்டம் பலிபீட மூர்த்தி சீர்காழி, ஆறகளூர்(அஷ்டபைரவர்கள் உறையும் பலிபீடம்) 24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில் 25. பூரட்டாதி அஷ்டபுஜ பைரவர் கொக்கரையான்பேட்டை 26. உத்திரட்டாதி வெண்கல ஓசை பைரவர் சேஞ்ஞலூர் 27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையங்கார்பேட்டை

மாதங்களும் வழிபடவேண்டிய பைரவர்களும் சித்திரை - சண்ட பைரவர் வைகாசி - குரு பைரவர் ஆனி - உன்மத்த பைரவர் ஆடி - கபால பைரவர் ஆவணி - ஸ்வர்ணகர்ஷண பைரவர் புரட்டாசி - வடுக பைரவர் ஐப்பசி - க்ஷேத்ர பாலபைரவர் கார்த்திகை - பீஷண பைரவர் மார்கழி - அசிதாங்க பைரவர் தை - குரோதன பைரவர் மாசி - ஸம்ஹார பைரவர் தேய்பிறை அஷ்டமி வழிபாடு

இழந்த செல்வங்களை மீண்டும் பெறவும் தொழிலில் வளர்ச்சி காணவும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும் செல்வ செழிப்போடு வாழவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு செய்ய வேண்டும். தற்போதைய கால கட்டத்தில் நமக்கு செல்வவளங்களை வழங்குவதற்கும் நம்மை நல்லவிதமாக வழிகாட்டி வாழவைப்பதற்கும் பைரவர் வழிபாடு மிக முக்கியமானது.

ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி திதி பைரவருக்கு உகந்த நாள். கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி ருத்ராஷ்டமி என்றும் காலபைரவாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

நாம் ஏன் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வணங்க வேண்டும் என்றால் அஷ்ட லட்சுமிகளும் அஷ்டமி அன்று தான் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு மற்ற எல்லாநாட்களும் செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்பது ஆன்றோர்கள் மற்றும் சித்தர்களின் நம்பிக்கை. நாமும் அதே தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபட,அஷ்ட லட்சுமிகளின் ஆசியும், பைரவரின் வரங்களும் ஒருங்கிணைந்து கிடைத்துவிடும். நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே பைரவர் வழிபாடு ஆகும்

பலன்கள்

வர வேண்டிய பணம் வந்துவிடும் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும் நோய்கள் தீரூம். சனியின் தாக்கம்(ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும். வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்; தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும் பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும் தலை குனியா வாழ்க்கை தீயவினைகள் முற்றிலும் அழிவு. இறைவனை எளிதாக உணர்தல் பின் வரும் பைரவர் ஸ்லோகங்களை சொல்லி வாழ்வில் வளம் பெறலாம்

கால பைரவர் ஸ்லோகம்

ஓம் கால காலாயா வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தந்நோ கால பைரவ ப்ரசோதயாத் ஸ்ரீ பைரவர் காயத்ரி மந்திரம் ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீ கால பைரவாய நமஹ


ஸ்வர்ணாகர்ஷன பைரவ காயத்ரி

ஓம் பைரவாய வித்மஹே ஹரிஹரப்ரம் ஹாத்மகாய தீமஹி தந்நோ ஸ்வர்ணாகர்ஷன பைரவ ப்ரசோதாயத்

இந்த காயத்ரியை 21 முறை சொல்லி கீழ்க்கண்ட 12 நாமாக்களைக் கூறி பைரவரை வழிபடுவர்களுக்கு பைரவர் பொற்குவியலைக் கொடுப்பார். ஓம் ஸ்வர்ணப்ரத நமஹ ஓம் ஸ்வர்ணவர்ஷீ நமஹ ஓம் ஸ்வர்ணாகர்ஷண பைரவ நமஹ ஓம் பக்தப்ரிய நமஹ ஓம் பக்த வச்யபக்தாபீஷ்ட பலப்ரத நமஹ ஓம் ஸித்தித நமஹ ஓம் கருணாமூர்த்தி நமஹ ஓம் பக்தாபீஷ்ட ப்ரபூரக நமஹ ஓம் நிதிஸித்திப்ரத நமஹ ஓம் ஸ்வர்ணா ஸித்தித நமஹ ஓம் ரசஸித்தித நமஹ

ஆதாரங்கள் :

              www.saalaram.com/tamil/11272/பைரவர் -ஒரு கண்ணோட்டம்.html

http://temple.dinamalar.com/news_detail.php?id=2701


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_KAPILAN_TVR/மணல்தொட்டி&oldid=2395956" இலிருந்து மீள்விக்கப்பட்டது