பயனர்:TNSE JENNIFER CARDOZA DIET ERD/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'டு சர் வித் லவ்' லண்டன் மாநகர பள்ளியொன்றில் நடைபெறும் சமூக மற்றும் இனப் பிரச்சனைகளை மையமாகக் கொண்டு 1967ஆம் வருடம் வெளிவந்த ஆங்கில திரைப்படம். சிட்னி பொய்டியர் கதாநாயகனாக நடித்த இத்திரைப்படம் 1959ல் ஈ. ஆர். ப்ரெய்த்வெய்ட்டால் இதே பெயரில் எழுதப்பட்ட அவரது சுயசரிதை நாவலை அடிப்படையாகக் கொண்டது. ஜேம்ஸ் க்ளேவெல் இத் திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார். இதில் நடிகையாக அறிமுகமான பாடகி லுலு பாடிய 'டு சர் வித் லவ்' என்ற தலைப்பு பாடல் 1967 ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பாப் பாடல் தர வரிசையில் முதலிடத்தை 5 வாரங்களுக்கு தக்க வைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது. இத் திரைப்படம் 'Entertainment List' ன் 50 சிறந்த உயர்நிலைப்பள்ளியை மையமாகக் கொண்ட திரைப்பட வரிசையில் 27 வது இடத்தை பிடித்தது. இதன் இரண்டாம் பாகம் 'டு சர் வித் லவ்-II தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்டு முதல் பாகம் வெளியாகி 29 வருடங்களுக்கு பிறகு 1996-ல் திரைக்கு வந்தது. இதிலும் சிட்னி பொய்டியர் அவர் ஏற்ற அதே மார்க் தாக்கரே என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.