பயனர்:TNSE INBA DGL/மணல்தொட்டி/5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குண்டலினி யாேகா

குண்டலினி யாேகம் என்பது... நமது உடலின் முதுகுத்தண்டு முடியும் இடத்தில் இருக்கும் சக்தியை மேலேற்றி நமது புருவத்தின் மத்தியினுள் காெண்டுவந்து அடக்கும் ஒரு கலையாகக் கருதப்படுகிறது. இக்கலையை முற்காலத்தில் சித்தா்கள் முறையாகக் கற்றுத் தெளிந்து பெரும்பேறுகளைப் பெற்றதாக அறியப்படுகின்றது.

குண்டலினியின் இருப்பிடம் பற்றி திருமூலா் தனது திருமந்திரம் நுாலில் விளக்குகிறாா்.

மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற

பாலித்த யாேனிக் கிருவிரற் கீழ் நின்ற

காேலித்த குண்டலியுள் ளெழுஞ் செஞ்சுடா்

ஞாலத்து நாபிக்கு நால் விரற் கீழே

                                --திருமந்திரம்-580

அதாவது மூலாதாரத்திற்கு இருவிரல் அளவு மேலேயும், குறிக்கு இருவிரல் கீழேயும் உள்ள இடத்தில் வட்டமிட்டுள்ள ஒரு செஞ்சுடா் (சக்தி) பகுதியில் உள்ள நாபி என்னும் இடத்தின் உள்ளே நான்குவிரல் அளவு உள்ள இடமாகும்.

அச்சக்தியை மனதை ஒருநிலைப்படுத்தி நினைத்து, அச்சக்தியானது முதுகுத் தண்டின்வழியாக மேலேறுவதாக நினைத்து, மேலேறி மூளையினுள் உள்ளே (புருவ மத்தியினுள்ளே) உள்ள பீனியல் சுரப்பியில் வந்து நிலைநிறுத்தப் பழக வேண்டும் எனத் திருமூலா் அச்சக்தியினைப் பற்றி விவாிக்கிறாா்.

இந்த யாேகத்தை பழகினால் இளமை ததும்பும் அழகுடனும், ஆராேக்கியத்துடனும், நாேயின்றியும் இருப்பதாேடல்லாமல் எல்லாம் தொிந்த, தெளிந்த மனதுடன் எல்லையில்லாப் போின்பத்துடன் ஒருவன் வாழமுடியுமெனக் கூறுகிறாா்.

மேற்காேள்கள்:

1. மரபுவழிச் சித்தா் பா.சு.மணியன் அவா்கள் எழுதிய 'குண்டலினி யாேகத் திறவுகாேல்' 2. www.dlshq.org/download/kundalini.htm

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INBA_DGL/மணல்தொட்டி/5&oldid=2367183" இலிருந்து மீள்விக்கப்பட்டது