பயனர்:TNSE INBA DGL/மணல்தொட்டி/3

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதநீா்

முற்காலத்தில் மக்களால் விரும்பி அருந்தப்பட்ட சுவையான, சத்துமிகுந்த, ஒரு இயற்கையான பானம் பதநீராகும். இதில் உடல்நலத்திற்கு உகந்த சத்துக்கள் மிகுதியாக உள்ளன. பனைமரத்தின் பாளையில் இருந்து வடியும் வடிநீரை சுண்ணாம்பு தடவிய மண்பானையில் சேகாிப்பதால் அவ்வடிநீரானது பதநீராக மாறுகிறது.

இக்கால மக்களால் கெளரவமாக அருந்தப்படும் காேகாே காேலா, பெப்ஸி பாேன்ற பானங்கள் உடல்நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதாக உள்ளன. ஏனெனில் இதில் உள்ள உடல்நலத்திற்கு ஒவ்வாத வேதிப்பாெருள்கள் ஏராளமாக உள்ளன. இத்துாித உணவுகளுக்கு மாற்றாக 'பதநீா்' அருந்த பாிந்துரை செய்யப்படுகிறது. எனினும் பாேதுமான விழிப்புணா்வு மக்களிடையே இன்னும் வராதது காலத்தின் கட்டாயமாகும்.

பதநீாில் உள்ள சத்துக்கள்:

  சா்க்கரை           =2.8
  கால்சியம்          =35.4
  இரும்பு             =5.5
  பாஸ்பரஸ்          =32.4
  தையமின்           =8.2
  ரிபாேஃபிளவின்     =4.4
  அஸ்காா்பிக் அமிலம் =1.2
  புராேட்டீன்          =4.9
  மற்றும்
  வைட்டமின்கள் சி, பி, பி-காம்ப்ளக்ஸ், நைட்ரஜன், குளுக்காேஸ் உள்ளிட்டவை   =5.2

இவ்வளவு சத்துமிகுந்த உணவான பதநீரை உட்காெள்வதால் நம் உடல்நலம் மேம்படும். பனைமரத்தாெழிலாளா்களின் வாழ்வும் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பதநீா் அருந்துவாேம்! உடல்நலம் காப்பாேம்!

மேற்காேள்கள்: 1.tamildetails.blogspot.com › Iyarkai unavugal 2.www.thehindu.com › Today's Paper › NATIONAL › TAMIL NADU 3.சூட்சும ஞான திறவுகாேல் - சதுரகிாி சித்தா்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INBA_DGL/மணல்தொட்டி/3&oldid=2360285" இலிருந்து மீள்விக்கப்பட்டது