பயனர்:TNSE HARIKUMAR N CHN/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

'நற்றிணை பாடல்களும், அவற்றின் பொருள்களும்

இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தைய சங்கத் தமிழ் என்பது பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும்.

எட்டுத் தொகை என்பது பல்வேறு கவிஞர்கள், பல்வேறு காலகட்டங்களில் எழுதிய பாடல்களைத் தொகுத்து எட்டு நூல்கள் செய்திருக்கிறார்கள். 

அவற்றைப் பாடல் அடிகளாலோ, பாடல் பொருளாலோ ஒரு வரையறைக்குட்படுத்தித் தொகுத்திருக்கிறார்கள்.

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவை எட்டுத் தொகை நூல்கள்.

முதலில் எட்டுத்தொகை...

எட்டுதொகையுள் நாம் பார்க்க இருப்பது, நற்றிணை. 175 புலவர்களால் 400 பாடல்கள் பாடப் பெற்றது.

இதனைத் தொகுக்க வைத்தவன், பாண்டிய மன்னன் பன்னாடு தந்த மாறன் வழுதி. பாடல்கள் 9 - 12 அடிகள் கொண்டவை.

நற்றிணையின் கடவுள் வாழ்த்தை (மகா)பாரதம் பாடிய பெருந்தேவனார் எழுதியிருக்கிறார்.

கடவுள் வாழ்த்து[தொகு]

பாடல்:


மா நிலம் சேவடி ஆக, தூ நீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக,
விசும்பு மெய் ஆக, திசை கை ஆக,
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக,
இயன்ற எல்லாம் பயின்று; அகத்து அடக்கிய
வேத முதல்வன்’ - என்ப -
‘தீது அற விளங்கிய திகிரியோனே.’


பொருள்:[தொகு]

இப்பெருநிலம் அவன் சேவடி;
தூய நீருடன் சங்கொலிக்கும் கடல் அவன் ஆடை;
வானம் அவன் உடல்;
திசைகள் அவன் கரங்கள்;
குளிர் நிலாவும், சூரியனும் அவன் கண்கள்;
எல்லாவற்றிலும் பொருந்தியவன்,
எல்லாவற்றையும் தனக்குள் அடக்கியவன்,
வேத முதல்வன்,
குற்றமற்றவன்,
ஆழ்கடல் உடையவன் - அவனே!
சான்றோர் அவனை இறைவன் என்கிறார்கள்.