பயனர்:TNSE DIET ANGRY BIRD KRR/மணல்தொட்டி2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருண் மஜும்தார்

அருண் மஜும்தார் ஒரு பொருளியல் விஞ்ஞானி, பொறியாளர் மற்றும் கலிபோர்னியா பல்கலைகழகத்தின் பெர்க்கெலே பட்டதாாி. இவர் நவம்பர் 30, 2011 முதல் மே-15, 2012 வரை ஆற்றலுக்கான நேருதவிச் செயலர் என்ற நிலைக்கு நியமிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டார். இதற்கு முன்னர் அவர் லாரன்ஸ் பெர்க்கெலே தேசிய ஆய்வகத்தின் (LBNL) இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் பதவிகளில் பணியாற்றினார். கலிபோர்னியா பல்கலைகழகத்தின் பெர்க்கெலே நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் துறை பேராசிாியராகப் பணியாற்றினார்.

அமொிக்க ஐக்கிய நாட்டின் ஆற்றலுக்கான துறையின் மேம்பட்ட ஆராய்ச்சி திட்டங்களுக்கான முகவாண்மைக்கு (ARPA-E) முதல் இயக்குநராக செப்டம்பர் 2009-ல் நியமிக்கப்பட்டார். 2012 ல் கூகுள் நிறுவனத்தில் இணைந்து கூகுள்.ஆர்கின் ஆற்றல் சார்ந்த முனைப்புகளில் ஈடுபட்டார். மேலும் அந்நிறுவனத்தின் அகன்ற ஆற்றல் சார் உத்திகளுக்கு அறிவுரை வழங்கி வழிகாட்டினார். இவர் தற்போது ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆற்றலுக்கான பிாிகோர்ட் நிறுவனத்தில் இயந்திரப் பொறியியல் துறையின் பல்கலைக் கழக ஆசிாியர் குழுவின் முதுநிலைப் பேராசிாியராக பணியாற்றுகிறார்.

இவரது அறிவியல் (ஆய்வு) வேலைகள் அணல்மின் பொருட்கள், வெப்பம் மற்றும் நிறை (பொருண்மை) இடமாற்றம், வெப்ப மேலாண்மை மற்றும் கழிவு வெப்ப மீட்பு போன்ற தளங்களில் அமைகிறது. இவர் பல நூறு அறிவியல் கட்டுரைகள், புத்தாக்கங்கள் மற்றும் கருத்தரங்கின் தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் நூல்களை பதிப்பித்துள்ளார். பொறியியலுக்கான தேசிய கழகத்தில் உறுப்பினராக இருக்கிறார். 2014 ல் அமொிக்க ஐக்கிய நாடுகளின் அறிவியல் தூதுவராக பணியாற்றினார்.