பயனர்:TNSE AGRI JANAKI MDU/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாய் நாற்றாங்கால்[தொகு]

எளிதில் சுருட்டி எடுத்துச் செல்லும் வகையில் பாய் போன்ற வைக்கோல் மண் பரப்பில் நாற்றுக்களை வளர்க்கும் முறை. நெல் சாகுபடியில் நவீன முறையில் நாற்றுக்களை வளர்ப்பதற்கு பாய் நாற்றங்கால் பயன்படும். ஒரு எக்டர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு 100 சதுர மீட்டர் பரப்பளவில் பாய் நாற்றங்கால் அமைத்தல் வேண்டும்.

அமைக்கும் முறை[தொகு]

                                 1 மீட்டர் அகலம் 100 மீட்டர் நீளம் 5 சென்டி மீட்டர் உயரம் கொண்ட மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் மேல் 300 காஜ் தடிமனுள்ள வெள்ளை பாலித்ன் தாளினை விரிக்க வேண்டும். நீளம் மற்றும் அகல வாக்கில் நான்கு கட்டங்களாக தடுக்கப்பட்ட 1 மீட்டர் நீளம் 0.5 மீட்டர் அகலம் 4 சென்டிமீட்டர் உயரம் கொண்ட விiப்பு சட்டம் தயார் செய்து அதனை விரிப்பதற்கு மேல் சரியாக வைக்க வேண்டும். ஒரு கிலோ வளமான வயல் மண்ணுடன் 0.5 கிராம் பொடியாக்கிய டை அம்மோனியம் பாஸ்பேட் உரத்தைச் சேர்த்து விதைப்புச் சட்டத்திற்குள் முக்hல் அளவிற்கு நிரப்புதல் வேண்டும். 8-9 கிலோ விதை நேர்த்தி செய்யப்பட்ட சட்டத்திற்கு 45 கிராம் விதை என்ற அளவில் விiத்து பின் மண்ணால் நன்கு மூடிவிட வேண்டும்.

நாற்றங்கால் நிர்வாகம்[தொகு]

                பூவாளியால் விதைப்புச்சட்டத்தின் அடிவரை நனையுமாறு தண்ணீர் தளித் விதைப்பு சட்டத்தை வெளியில் எடுக்க வேண்டும். பின்பு ஐந்து நாட்கள் வரை பூவாளியில் தண்ணீர் தெளித் பின் பாத்தி நனையும் வகையில் வாய்க்காலில் தண்ணீர் கட்ட வேண்டும். விதைத் ஒன்பதாவது நாள் 0.5 சதவீத யூரியா கரைசலை (150 கிராம் யூரியாவை 30 டிலட்டர் நீரில்) பூவாளி மூலம் மாலையில் தெதளிப்பதால் வாளிப்பான நாற்றுக்களைப் பெறலாம். பதினான்காம் நாள் சிறிய கட்டத்தில் உள்ள 12 முதல் 16 சென்டிமீட்டர் உயரமுள்ள நாற்றுகளை பிரித்து எடுத்து நடவு வயலுக்கு கொண்டு போகலாம்.

நன்மைகள்[தொகு]

1.            13-15 நா.க்ளில் நாற்றுகள் தயாராகின்றன.

2.            ஒரு ஹெக்டர் நடவு செய்ய 100 சதுர மீட்டர் அளவுள்ள குறைந்த நிலப்பரப்பு போதுமானது.

3.            நீர் தேக்க வேண்டிய அவசியம் இல்லை அனால் நீர் தேவை குறைவு.

4.            ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.

5.            நாற்றுக்களை எளிதாக பிரித்தெடுக்கலாம்.

6.            நடவு இயந்திரங்களில் நடவு செய்ய இந்நாற்றுக்கள் ஏற்றது.

[வேளாண் செயல்முறைகள் (கருத்தியல்) தமிழ்நாடு பாடநூல் கழகம் 1]
பிழை காட்டு: <ref> tags exist for a group named "வேளாண் செயல்முறைகள் (கருத்தியல்) தமிழ்நாடு பாடநூல் கழகம்", but no corresponding <references group="வேளாண் செயல்முறைகள் (கருத்தியல்) தமிழ்நாடு பாடநூல் கழகம்"/> tag was found