பயனர்:TNSC AGRI G SWAPNA KPM/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூனா அந்துப்பூச்சி

லூனா அந்துப்பூச்சி (Actias selene). இது Saturnidae குடும்பத்தைச் சேர்ந்த பெரிய பட்டுப்புழு அந்துப்பூச்சியாகும். லூனா என்றால் நிலவையும், அதன் இறக்கைகளில் பிறை போன்ற பெரிய கண் வடிவ புள்ளிகள் உள்ளதால் மேலும் இவ்வகை அந்துப்பூச்சிகள் இரவில் மட்டுமே பறப்பதால் இவை Luna moth என்று அழைக்கப்படுகின்றன. காண்பதற்கு மிகவும் அரியதான இந்த அழகிய அந்துப்பூச்சி 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்புட்குழி அரசு மேல்நிலைப்பள்ளியில் (காஞ்சிபுரம் மாவட்டம்) புங்க மரத்தில் இருந்தது மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இது இந்தியா, ஜப்பான், இலங்கை, நேபால், போர்னியோ போன்ற நாடுகளில் மற்றும் வட அமெரிக்கா, கிழக்கு கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளிலும் பரவலாக காணப்படுகிறது. இது இந்தியாவில் அஸ்ஸாமில் சில பகுதிகளில் காணப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

விளக்கம் இளம் பச்சை நிறத்தில் பெரிய கண் போன்ற புள்ளிகளை இறக்கைகளில் கொண்ட இந்த பூச்சியைப் பார்த்தால் நம் கண்கள் விரிந்து ஆச்சர்யம் அடையும். இவற்றின் இறக்கைகள் பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாக உள்ளன. இதன் இறக்கையின் நீட்டம் (அ) 114 மி.மீ, இறக்கை மாடம் 8-11.5 சென்டிமீட்டர் ஆகும் (3.1-4.5 இன்ச்). அதன் நீளம் 17.78 சென்டிமீட்டர் வரை கூட இருக்கும். இதன் முன் மற்றும் பின் இறக்கைகளின் விளிம்புகள் அடர் சிவந்த வண்ணத்தில் காணப்படுகின்றன. இவ்வகை அந்துப்பூச்சிகள் பெரும்பாலும் இரண்டு பிறப்பித்தல் முறையை கொண்டது. பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும்.

புழு பருவம் ஒவ்வொரு இடைஉயிரியும் (instar)முழுமை அடைய 5 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும். முட்டையில் இருந்து சிறு புழுக்கள் பொரித்தவுடன் புழுக்கள் அங்கும் இங்கும் அலைந்து அது உண்ணும் இலைகளைக் கொண்ட மரத்தில் தங்கி விடும். அவை பிர்ச், வால்நட், பெர்சிம்மன், ஸ்வீட் கம்,புங்கம் போன்ற மரங்களின் இலைகளை உண்ணும். இந்த புழுக்கள் 2-3 இடைஉயிரிகள் வரை கூடி வாழ்கின்ற தன்மை உடையதாக இருக்கும். பின்னர் தனியே வாழத்தொடங்கிவிடும். இவை (5 இடைஉயிரிகள் கடந்த பிறகே கூடு கட்டத் தொடங்கும். ஒவ்வொரு இடைஉயிரியின் முடிவிலும் சிறிய அளவிலான பட்டு இலையின் மேற்பாகத்தில் (vein) வைக்கப்படும். கடைசி இடைஉயிரி (instar) 9 cm நீளம் வரை வளரும்.

கூட்டுப்புழு பருவம் லூனா அந்துப்பூச்சி கூடு கட்டிய பின் கூட்டுப்புழுவாக மாறும். கூட்டுப்புழு பருவத்தில் இப்பூச்சி மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். ஏதேனும் ஆபத்து வரும் போது கூட்டிற்குள் வினோத சப்தத்தை எழுப்பும். கூட்டுப்புழு பருவம் பொதுவாக 2 வாரங்கள் வரை நீடிக்கும்.

முதிர்ந்த பருவம் கூட்டுப்புழுவில் இருந்து அந்துப்பூச்சி வெளிவரும் போது அதன் சிறகுகள் மிகவும் சிறியதாக இருக்கும். அதன் இறக்கைகளில்உள்ள கண் வடிவ புள்ளிகள் இவற்றை எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளவும் குழப்பமடைய செய்யவும் பயன்படுகிறது. முதிர்பருவம் அடைந்தவுடன் அந்துப்பூச்சிகள் உணவு உட்கொள்ளாது. மேலும் இதற்கு உணவு உட்கொள்ள வாய்ப்பகுதியும் இல்லை. அதனால் ஒரு வாரம் மட்டுமே உயிர் வாழும். அச்சமயத்தில் தன இணையுடன் சேரும். பெண் அந்துப்பூச்சி சுமார் 200 முட்டைகள் வரை இலையின் அடிப்பாகத்தில் இடும். இவை 8 முதல் 13 நாட்களுக்கு அடைகாக்கப்படும். நல்ல தட்பவெப்பநிலையில் அந்துப்பூச்சிகள் அதிகமான முட்டைகளை இடும். ஆண் அந்துப்பூச்சிகளுக்கு பெண் அந்துப்பூச்சிகளை விட உணர்கொம்புகள் சற்று பெரியதாகவும் அகன்றதாகவும் இருக்கும்.