உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Sunkoduvai/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
    • கோவர்தனாம்பிகை உடனமர் நாககேசஸ்வரர் ஆலயம்**

பழங்காலத்தில் கொங்குநாடு காங்கேயம்நாடு,பொங்கலூர் நாடு விடலாபரம்(தாராபுரம்) நாடு என பெயர்கள் கொண்ட பல்வேறு சிறுசிறு நாடுகளாக பிரிக்கப்பட்டு குறுமன்னர்கள் ஆட்சி புரிந்தனர்.தாராபுரம் நாட்டின் நுழைவாயில் குடவாய் எனப்பட்டது.அப்பெயர் மருவி கொடுவாய் என தற்போது அழைக்கப்பட்டு வருகிறது.சைவம் வைணவ ஒற்றுமைமை பறைசாற்றும் வகையில் சிவ ஆலயமும்,பெருமாள் ஆலயமும் அமைந்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோவர்தனாம்பிகை உடனமர் நாககேசஸ்வரர் ஆலயம்: சோழமன்னர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்ட 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான ஆலயம்.ஆலயத்திலுள்ள வன்னிமரம் பாண்டவர்கள் காலத்துடன் தொடர்புடையது.பெரும்பாலான சிவலாயங்களில் அம்பிகையின் ஆலயம் வலதுபுறம் அமைந்து இருக்கும்.ஆனால் இங்கு அம்பிகை சிவன் ஆலயத்திற்கு இடதுபுறம் அமைந்து அருள் தருகிறார்.ஆலய வளாகத்திலேயே புற்று அமைந்துள்ளது.காஞ்சிமாநகரில் கண்ணிழந்த அந்தகன் ஒரு கண்ணின் பார்வையை திருநாகேசஸ்வரத்தில் சிவனை வேண்டி பெற்றதாகவும்,மற்றொரு கண்ணின் பார்வையை ஈசனிடம் வேண்டி நின்ற பொழுது ,இறைவன் கொடுவாய் நகரில் தன்னை வேண்டி பெற்று கொள்ளுமாறு கூறினார். அவ்வாறு அந்தகன் கொடுவாயை நாகஸ்வரரை வேண்டி வழிபட்டு பார்வை பெற்றதாகவும் கூறப்படுகிறது.கொடுவாய் நாகேஸ்வரர் இரண்டாம் திருநாகேஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறார்.நாக தோஷத்திற்கு கண்கண்ட பரிகாரதலம்.திருப்பூரிலிருந்து தாராபுரம் செல்லும் சாலையில் ஆலயம் அமைந்துள்ளது.பழனி மதுரை தேனி செல்லும் அனைத்து பேருந்துகளும் நிற்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sunkoduvai/மணல்தொட்டி&oldid=1967557" இலிருந்து மீள்விக்கப்பட்டது