உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ssrworld talkies

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

S.S.இராமச்சந்திரன்

கடலுார் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பூண்டி குச்சிபாளையம் என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவர் . தற்போது சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2006 முதல் சினிமா துறையில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமா துறையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். YouTube - இல் ஒரு சேனல் ஐ தொடங்கி அதில் உலக சினிமா தொடர்பான காணொளிகள் பதிவிட்டு வருகிறார்.. அது மட்டுமில்லாமல் வலைதளத்தில் உலக சினிமா தொடர்பாகவும், திரைக்கதை தொடர்பாகவும் எழுதி வருகிறார் .. இது புதிதாக சினிமா துறைக்கு வரும் பலருக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இவர் மிக எளிமையாக திரைக்கதை தொடர்பாக எழுதுகிறார் ... ஸிட் ஃபீல்டு அவர்களை மேற்கோள் காட்டி புதிதாக வருபவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும்படி எழுதுகிறார் .இவரது திரைக்கதை என்னும் மாய வலை என்ற பகுதியில் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் திரைக்கதையின் பிதாமகன் களையும் திரைக்கதை எழுதும் முறையையும் விளக்குகிறார்.

இவர் தொலைநோக்கு படைப்பகம் என்ற அமைப்பில் ஒருங்கிணைப்பாளராக இருந்து 2019ஆம் ஆண்டு நடத்திய "திரை உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்ற நிகழ்ச்சியை 500க்கும் மேற்பட்ட உதவி இயக்குனர்களை வரவழைத்து அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது சினிமா துறையில் பிரபலமாக விளங்கும் தயாரிப்பாளர் D. தனஞ்செயன், நடிகர் & ஒளிப்பதிவாளர் நடராஜ், இயக்குனர் பரத் நீலகண்டன் மற்றும் சில இயக்குனர்களையும் பங்குகொள்ள செய்து உதவி இயக்குனர்களுக்கு எப்படி சினிமாவில் இருக்க வேண்டும்? எப்படி தயாரிப்பாளர்களை அணுகவேண்டும் ?போன்றவற்றை விலக்கி உதவி இயக்குனர்களுக்கு சினிமாவைப் பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தினார். இதன்மூலம் பல உதவி இயக்குனர்கள் பயன் அடைந்ததாக கூறுகிறார்கள் .R.V.உடையப்பா எனும் நாடக கலைஞரின்் வாழ்க்கையை ஆவணப்்படமாக இயக்கியுள்ளார். தற்போது தான் இயக்கவிருக்கும் முழு நீள திரைப்படத்திற்கான திரைக்கதையை எழுதிக் கொண்டிருக்கிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ssrworld_talkies&oldid=3046888" இலிருந்து மீள்விக்கப்பட்டது