பயனர்:Sowmiya kuppusamy/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேளாண்மை

முன்னுரை[தொகு]

   வேளாண்மை என்பது ஒரு கலை.இந்த க்லையைச் செய்யும் வல்லுநர்கள் விவசாயிகள். வேளாண்மை என்பது நாம் நம் தேவைக்காகத் தாவரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்து அவற்றிலிருந்து நமக்குத் தேவையானவற்றைப் பெறுவது. 

நிலம்[தொகு]

  வேளாண்மை செய்ய அடிப்படையாகத் தேவைப்படுவது நிலம். இந்த நிலம் பயிரிடப்படுவதன் அடிப்படை மற்றும் நீர் பயன்பாட்டின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன. அவையாவன
                    #வயல்
                     #தோட்டம்
                    #காடு
     வயல்  என்பது நீர் அதிகமாக உபயோகிக்கப்படுவது. இதன் முக்கியப் பயிர் நெல். மற்றும் அதைத் தொடர்ந்து பயறு வகைகள் பயிரப்படுகின்றன. இந்த பயறு வகைகள் மிதியடிப் பயறுகள் என அழைக்கப்படுகின்றன. 
      தோட்டம் என்பது நீர் குறைவாக உபயோகிக்கப்படுவது. இதில் குறிப்பிட்ட இடைவெளியில் நீர் பாய்ச்சப்படுகிறது. 
      காடு என்பது வானம் பார்த்த பூமி. இதில் பயிரிடப்படும் அனைத்துப் பயிர்களும் நீராதாரத்திற்காக மழைநீரையே எதிர்பார்த்துள்ளன. இதில் வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய சிறுதானிய வகைகள் பயிரிடப்படுகின்றன.

முக்கியத்துவம்[தொகு]

    விவசாயம் என்பது அனைத்திற்கும் அடிப்படையானது. இதிலிருந்துக் கிடைக்கக்கூடிய விளைபொருட்களையே பெரும்பாலான தொழிற்சாலைகள் மூலமாகக் கொண்டுள்ளன. நமது உணவுத் தேவை முக்கியமாக வேளா ண்விளைபொருட்களைக் கொண்டே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த மக்கள்தொகை அதிகரித்துவரும் காலகட்டத்தில் வேளாண்மை உற்பத்தி சிறப்பாக இருந்தால் மட்டுமே உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.
     சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் 
     உழந்தும் உழவே தலை 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sowmiya_kuppusamy/மணல்தொட்டி&oldid=2497958" இலிருந்து மீள்விக்கப்பட்டது