பயனர்:Soundarya Uppili/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதிதி அசோக் - குழிப்பந்து வீராங்கனை[தொகு]

அதிதி அசோக் (பிறப்பு: 29 மார்ச் 1998) 2016-ல் நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்கில் பங்கு பெற்று, முதல் இடத்தை தட்டிச்சென்ற இந்திய குழிப்பந்து வீராங்கனை ஆவார்.

2016-ல் நடைபெற்ற பெண்கள் ஐரோப்பிய சுற்றுப்பயணப் போட்டிகளில்,  உலகெங்கிலும் இருந்து பங்கேற்ற 114 பெண்களுடன் போட்டியிட்டு வெ‌ன்ற முதல் இந்தியப் பெண் இவர். இதுதான் தொழில்முறை குழிப்பந்து  வீராங்கனையாகத் தொடங்கிய அவரது முதல் பயணம். [1]

தனது 18ஆவது வயதில் அதிதி அசோக் இந்திய விளையாட்டுத்துறையில் தனது அடையாளத்தைப் பதித்தார். 2016-ல் நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக பங்கேற்ற ஒரே குழிப்பந்து வீராங்கனை இவர்தான். [3]

2006ல் டில்லியில் நடந்த முதலாவது தொழில்முறைப் பெண்கள் குழிப்பந்து  போட்டிக்குப் பிறகே, இந்தியப் பெண்கள் பலரும் தொழில்முறை குழிப்பந்து போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினர். [1]

வாழ்வும் குடும்பப் பின்னணியும்[தொகு]

பெங்களூரில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த அதிதி, தனது 6 வயதில் குழிப்பந்து விளையாட்டால் ஈர்க்கப்பட்டார்.  கர்நாடக குழிப்பந்து  கழகத்திற்குச் சொந்தமான பச்சைப் பசேல் என காட்சியளிக்கும் மைதானத்தில் இவர் பயிற்சி செய்து வந்தார். தனது தந்தை பண்டிதர் குட்லமணி அஷோக் அவர்களுடன் சென்று, இளம் வயதிலேயே விளையாட்டின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார் அதிதி. குழிப்பந்து  விளையாட்டைப் பொறுத்தவரையில் அதிதியின் தந்தையே, அவருக்குப் பந்துகளை எடுத்துப் போடும் உதவியாளராகவும் இருந்தார். [4]

ஃப்ராங்க் ஆண்டனி பள்ளியில் படித்துக் கொண்டே தொடர்ந்து அதிதி விளையாட்டின் மீதும் ஆர்வம் காட்டினார். தினசரி பயிற்சியை மேற்கொண்ட அதே நேரத்தில், உள்ளூர் போட்டிகளிலும் அவர் விளையாடத் தொடங்கினார்.

தனது பெற்றோர்தான் தனக்கு மிகப்பெரிய ஈர்ப்பு சக்தியாக இருந்து ஆதரவு அளித்ததாக அவர் குறிப்பிடுகிறார். லேபல் பின்களைச் சேகரிப்பது அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு ஆகும். [6]

அவருக்கு பிடித்த குழிப்பந்து வீரர் சீவ் பலஸ்ட்ரோஸ். ‌‌பிடித்த மைதானம் செயிண்ட் ஆண்ட்ரூசில் உள்ள ஓல்ட் கோர்ஸ் மைதானம் ஆகும். [4]

தொழில்முறை சாதனைகள்[தொகு]

அதிதி தனது முதல் மாநில அளவிலான கோப்பையை, 2011ஆம் ஆண்டு அவரது 13 வயதில் கர்நாடகா ஜுனியர் மற்றும் தென்னிந்திய இளையோர் சாம்பியன் பட்ட‌ போட்டிகளில் வென்றார். அதே ஆண்டு, நேஷனல் அமெச்சூர் என்ற பட்டத்தையும் அவர் தட்டிச் சென்றார்.

அடுத்த 3 வருடங்களில்  - 2012, 2013, 2014 - நேஷனல் ஜூனியர் சாம்பியன் பட்ட‌ வென்றார். 2014-ல் அவர் ஜூனியர் மற்றும் முதியோர்பட்டங்களை பெற்றார்.

2014ஆம் ஆண்டில் யூத் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்  மற்றும் ஆசியா யூத் போட்டியில் (2013) விளையாடிய ஒரே இந்திய குழிப்பந்து வீராங்கனை என்ற பெருமையை அடைந்தார்.

அதிதி அஷோக், இளம் போட்டியாளராக விளையாட்டு வாழ்வின் உச்சத்தில் இருந்த போது, 2013ல் பெண்கள் பிரிட்டிஷ் அமெச்சூர் ஸ்ட்ரோக் பிளே சாம்பியன்ஷிப்பை வென்றார். 2016 ஜனவரி 1 அன்று அவர் ப்ரோ நிலையை எட்டினார். அதாவது துறை சார்ந்த வீராங்கனையாக மாறினார்.

ஆகஸ்ட் 2016 ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டபோது அதிதிக்கு வயது 18 மட்டுமே. ஒலிம்பிக்கில் குழிப்பந்து போட்டிகளில் கலந்து கொள்ளும் இளம் விளையாட்டு வீரர் (ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும்) என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார். சர்வதேச குழிப்பந்து போட்டிகளில் பங்கேற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையும் பெற்றார் அதிதி. [1] [3].

வெற்றியின் சுவையை மீண்டும் அந்த வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற பெண்களுக்கான முதல் ஐரோப்பிய சுற்றுப்பயணப் போட்டியில் வென்று மகிழ்ந்தார். [3]

பிறகு கத்தார் பெண்கள் போட்டியை வென்று, " LET  ரூக்கீ ஆஃப் த இயர்” விருதை வென்றார். 2017 அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, LPGA  கார்ட் பெற்ற முதல் இந்தியர் என்ற புகழை அடைந்தார். [5]

அதிதி 2018ல் 24 போட்டிகளிலும், 2019ல்  22 போட்டிகளிலும் விளையாடியபோது,  அமெரிக்க தன்னார்வலர்களின் LPGA  டெக்சாஸ் கிளாசிக் உள்ளிட்ட போட்டிகளில், முதல் 10 இடங்களை இருமுறை பதிவு செய்தார். [6]

மேற்சான்றுகள்[தொகு]

18 की उम्र में कामयाबी जिसके कदम चूमती है (1)

Aditi Ashok profile-women’s golf (2)

Aditi ASHOK- Olympic channel (3)

Olympics 2016: 5 Things To Know About Indian Golfer Aditi Ashok (4)

https://www.olympicchannel.com/en/stories/features/detail/india-golf-top-women-aditi-ashok-sharmila-nicollet-diksha-dagar-tvesa-malik/ (5)

https://www.lpga.com/players/aditi-ashok/98652/bio (6)

தகவல்

பிறந்த தேதி: 29 மார்ச் 1998

பிறந்த இடம்: பெங்களூரூ

உயரம்: 1.73 மீ

தேசியம்:  இந்தியர்

தொழில்

குழிப்பந்து வீர‌ர்

தொழில்முறை விளையாட்டு வீரராகப் பரிணமித்த ஆண்டு:  2016

தற்பொழுதைய சுற்றுப் பயணங்கள்:

பெண்களுக்கான ஐரோப்பிய சுற்றுப் பயணம்

LPGA  சுற்றுப் பயணம்

தொழில்முறை வெற்றிகள்: 5

சுற்றுப் பயணம் வாரியான வெற்றிகள்

பெண்கள் ஐரோப்பிய போட்டி- 3

பிற போட்டிகள் - 2

சாதனைகள் மற்றும் விருதுகள்

LET ரூக்கீ ஆஃப் த இய‌ர் 2016

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Soundarya_Uppili/மணல்தொட்டி&oldid=3108402" இலிருந்து மீள்விக்கப்பட்டது