பயனர்:Sivayogi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வணக்கம் அன்புள்ளங்களே! [1] நான் பத்மாவதி கங்காதரன்( ஆறுமுகம் ) தம்பதிகளின் முதல் மகன். ௧௭/௫/௧௯௬௮ இல் பிறந்துள்ளேன். மாதனன்குப்பம் அரசினர் ஆரம்ப பள்ளியில் ஒன்று முதல் ஐதாவது வரையிலும். சிங்காரம் பிள்ளை மேல்நிலைப் பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் படித்தேன். ௧௯௮௪ ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது முடிந்தது. அதன் பின் வறுமையின் பொருட்டு மேற்கொண்டு படிக்க வாய்ப்பு இன்றி மின்சாரப் பணிக்கும், கட்டிட வேலைக்கும் சென்றுக்கொண்டே ரேடியோ டிவி மெக்கானிக் படித்தேன். மேலும் பன்னிரெண்டாம் வகுப்பை தனியாக முயற்சித்து முடித்தேன். ௧௯௮௬ - ௧௯௮௯ ICF Act /App படித்துக்கொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் இளம்கலை பட்டம் பெற்றேன்.

தமிழ் மொழி புலமையும் கவி ஆற்றலும் வளர்த்துக் கொண்டு சினிமா கதை எழுத ஆர்வம் கொண்டு முயற்சித்து பின் பின்வாக்கி விட்டேன். வறுமை பிடியில் இருப்பதால் தினச் சாப்பாட்டிற்கு முக்கியத்துவம் கருதி வேலைகள் பல செய்தேன்.௧௯௯௨ மார்ச் மாதம் ICF இல் வகை கிடைத்தது. இறை அச்சமும் தேடுதலும் எனது நிளைவு தெரிந்த நாட்களில் இருந்தே எனக்குள் இருந்தது. ஒன்பதாவது படிக்கும் காலத்தில் தியானம் குறித்து அறிந்து முயற்சித்தேன். பைபிள், குரான் போன்ற நூல்களையும், சித்தர்கள் பாடல்களையும் படித்து இறைமையை அடைய முயற்சிகள் செய்த வண்ணம் இருந்தேன்.

௧௯௮௪ க்கு பிறகு ஆன்மிகம் தியானம் என்ற பகுதியும் எனக்குள் வளர்ந்தது. பல குருமார்களை சந்தித்தேன். நான் கடவுள் என்ற நூல் படித்து மேலும் ஆர்வம் தூண்டப்பட்டு சித்தர்கள் படைப்பில் ஆர்வம் மிகுந்தது.

௧௭-௦௧-௨௦௦௨ (17 -01-2002) ஞானம் அடைந்ததேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivayogi&oldid=3385502" இலிருந்து மீள்விக்கப்பட்டது