பயனர்:Sivanesan143

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழ்வார்தோப்பு வரலாறு :- ஆழ்வார்தோப்பு என்ற பெயர் இடப்பட்ட பெயர் அல்ல. தானாகவே அமைந்த பெயராகும்.பன்னிரெண்டு ஆழ்வார்களில் முதன்மையான ஆழ்வாரான சுவாமி நம்மாழ்வார் பெருமாளின் அம்சமாகத் தோன்றியவர். ஸ்ரீவைகுண்டதிலிருந்து ஏரல் வரையான பகுதி திருவழுதி நாடு என அழைக்கபட்டது.அதனை காரிமாறன் என்ற அரசர் ஆண்டு வந்தார்.அவருக்கு திருமணமானது நாகர்கோவிலுக்கு வடக்கை உள்ள திருவேன்பதிசாரம் என்ற ஊராகும். இப்போது திருபதிசாரம் என்று அழைக்கபடுகிறது. காரிமாறன் தம்பதினருக்கு அவர்தம் அருள்தவதால் சடகோபன் என்ற நம்மாழ்வார் அவதரித்தார்.அவரது காலம் கி.பி எட்டாம் நுட்ரு ஆண்டு என ஆரசியாளர் கணிக்கின்றனர். தமது தாய் ஊரான திருபதிசரத்தில் அவதரித்த நம்மாழ்வார் தனது தந்தை ஊரான திருவழுதி நாட்டில் வளர்ந்து வந்தார்.

தான் பிறந்த பயனான ஆதினாதபெருமனை அடையும் நோக்கில் திருக்குருகூர் என அன்று அழைக்கப்பட்ட தற்போதைய ஆழ்வார்திருநகரிக்கு செல்லும் வழியில் ஆற்றின் வடபகுதியில் இருந்த தோப்பில் நம்மாழ்வார் தங்கி சென்றனர். அன்று முதல் இந்தபகுதி ஆழ்வார்தோப்பு என அழைக்கப்பட்டது. அதாவது 1200 ஆண்டுகளாக இப்பகுதி இப்பெயருடன் வழங்கி வருகிறது. அதே காலகட்டத்தில் திருக்குருகூர் ஆழ்வார்திருநகரி எனப் பெயர் மாற்றம் பெற்றது. ஆக 1200 ஆண்டு பழமையான வரலாறு ஆழ்வார்தோப்புக்கு உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivanesan143&oldid=1405682" இலிருந்து மீள்விக்கப்பட்டது