உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Simonprabua

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முருங்கைக்கீரை 
முருங்கைமரம்

கிராமங்களில் முருங்கை மரம் இல்லாத வீடு இல்லை என்று சொல்லும் அளவிற்கு முருங்கையும் புகழ் பெற்றது. கீரையும் காயும் தனி ருசி கொண்டன. எனவே வீட்டுக்கு வீடு முருங்கை மரம் இருப்பதால் முருங்கைக்கிரை துவரன் முருங்கைக்காய்க் குழம்பு வைத்துச் சாப்பிடுவதில் தனி ஆர்வம் தான்.

அடங்கியுள்ள சத்துகள்

இந்தக் கீரையில் வைட்டமின் ஏ .பி,சி ஆகியவையும் புரதம் இரும்பு , சுண்ணாம்புச் சத்துக்களும் நிறையவே உள்ளன.

முருங்கைக்கீரையின் நன்மைகள்

உடல் வளர்ச்கிக்கும் வலிமைக்கும் இந்தக் கீரை பெரிதும் துணை செய்கிறது. இந்தக் கீரை நரம்புகளுக்கும் வலுவூட்டுவதாகும். கீரையைப் பொரியல் செய்யும் பொது பூவையும் சேர்த்து பொரியல் செய்யும் பழக்கம் உண்டு. இவ்விதம் சேர்த்துச் செய்யும் பொரியல் தனி ருசி உண்டு.வைட்டமின் சி அதிகமுள்ளத்தால் சொறி சிரங்கு போன்ற நோய்கள் குணமாகும் .

முருங்கைக்கீரை பொரியல் செய்யும் பொது சிறிதளவு பசு நெய்யையும் சேர்த்துச் செய்வார்கள் . தொடர்ந்தற்போல நண்பகல் வேலையில் சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியடையும் மேலும் இரத்த அழுத்த நோய் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். பித்த சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இந்தக் கீரைக்கு உண்டு.

உண்ணும் விதம்

காலை வேலையில் முருங்கைக் கீரையைப் பறித்து அதனுடன் கலுப்பையும் சேர்த்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து அதை உட்கொண்டால் இரத்த அழுத்த நோய்க்கு நல்ல மருந்தாகும். பொதுவாக கீரைகள் அனைத்துமே மலச்சிக்கலைப் போக்கும் தன்மை கொண்டவை . முருங்கைக்கீரைகும் அத்தன்மை அதிகமாகவே உண்டு.

வெளி இணைப்புகள்

1. கீரை மருத்துவம், ஈசாத்திமங்கலம் முருகேசன் ரேவதி பிரிண்டரிஸ்,

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Simonprabua&oldid=1948646" இலிருந்து மீள்விக்கப்பட்டது