பயனர்:Shridevi/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தீபச்செல்வன் இலங்கையின் வடபகுதியான கிளிநொச்சி , இரத்தினபுரத்தை சேர்ந்தவர். போர்க்கால மகளின் உண்மைக் கதைகளைப் பதிவு செய்ததுடன் கட்டுரைகளின் வாயிலாக ஈழத்தின் நிலவரங்களை தொடர்ச்சியாக பல்வேறு ஊடங்களில் எழுதி வருகிறார். புகைப்படம், ஆவண்ப்படம் முதலியதுறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். பிறப்பு:அக்டோபர் 24, 1983 இரத்தினபுரம் , கிளிநொச்சி, இலங்கை கல்வி நிலையம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவர் எழுத தொடங்கிய ஆண்டு: 2005 இலக்கிய வகை: கவிதை கட்டுரை

இவர் மிக இளம் வயதிலேயே பரவலாக எல்லோரும் அறியும் வகையில் பேசப்பட்டவர். இவர் தனது கவிதைகளிலும் கட்டுரைகளிலும் மக்களின் வாழ்வை கண்ணீர்வுடன் அழுத்தமாக பதிவு செய்வதுடன் நேர்காணல்களின் ஈழத்து மக்களின் அரசியல் ஈழபோராட்டத்தை வலிமையாக தனது குரலில் பதிவு செய்திருக்கிறார்,. ஈழத்தின் பத்திரிக்கை சஞ்சிகைகள் மற்றும் தமி ழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவர் தனது பதிப்புகள் வெளியாகியுள்ளன. தமிழின் அதிகமான இணைய சஞ்சிகைகளில் எழுதி வருபவர் .தீவம் என்ற பெயரில் வலைப்பதிவு ஒன்றும் எழுதிவருகிறார். இலங்கை பத்திரிக்கை ஸ்தாபம் 2010 ஆண்டின் சிறந்த ஊடகவியாலர்களுக்கான விருது வழங்களில் தீபச்செல்வனுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கவிதைகளுக்கான கணையாழி விருது இவருக்கு 2013 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.

யாழ் பல்கலைகழத்தில் மாணவர் ஒன்றியத்தில் செயலாளாராக 2008/2009 இல் பதவி வகித்தார் இவர். தமிழ் துறையில் சிறப்பு பட்டம் பெற்றார்.

பொருளடக்கம்:

1. முக்கிய கவிதைகள் 2. வாழ்க்கைக் குறிப்பு 3. கல்வி 4. எழுத்துலகில் 5. ஊடகத்துறைப் பிரவேசம் 6. மாணவத் தலைவராக 7. இலங்கை அரசபடைகளின் எச்சரிக்கை 8. விருதுகள் 9. திரைப்படத்தில் பணி 10. எழுதிய நூல்கள் 11. பிறரது தொகுப்பு நூல்களில் அடங்குபவை 12. மேற்கோள்கள் 13. வெளி இணைப்புகள

முக்கிய கவிதைள்:

பதுங்குகுழியில் பிறந்த குழந்தை,” யாழ் நகரம்,” கிளிநொச்சி,” முற்றுகையிடப்பட்ட பதுங்குகுழி,” கிண்ற்றினுள் இறங்கிய கிராமம்.” குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள்.” கள்ளத்தோணி.’ பதுங்குகுழியில் கொல்லப்பட்ட குழந்தை.” மெரீனாக்கரை.’ போன்ற கவிதைகள் முக்கியமானவை ஆகும்.

வாழ்க்கைக் குறிப்பு:

கிளிநொச்சி இரத்தினபுரத்தில் வசித்து மூன்றாம் கட்ட ஈழப் போரினால் இடம் பெயர்ந்து அக்கராயன் பிரதேசத்தில் மணியங்குளத்தில் வசித்தார். பின்னர் கிளிநொச்சி திரும்பிரனார்.2001 இல் இவரது சகோதரன் பிரசன்னா (வீரவேங்கை வெள்ளையான்).முகமாலையில் நடைபெற்ற போரினால் மரணம் அடைந்தார். அக்காலத்தில் கிளிநொச்சி விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டிருந்தது , மீண்டும் கிளிநொச்சிக்குத் திரும்பி கிளிநொச்சி மத்திய பல்கலைகழத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.பல்கலைகழத்தில் மாணவர் ஒன்றியத்தில் தலைமைப் பதவி வகித்தார்.

இவரது தயார் மற்றும் தங்கை வன்னி இறுதி யுத்தக்களத்தில் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் இவரை ஈழப்போராட்டத்திற்க்காக இயங்கிய தன் காரணமாக இலங்கை இராணுவம் கடுமையாக எச்சரித்து வந்தது. இறுதி எச்சரிக்கை.” என்ற சுவரொட்டி வாயிலாக யாழ் பல்கலைகழக சமுகத்தைச் சேர்ந்த தீபச்செல்வனுடன் 14 பேருக்கு கொலை அச்சுறுத்தலை இலங்கை இலங்கை இராணுவம் விடுத்தது,. பின்னர் சுற்றி வளைளப்புகளில் விசாரணை செய்யப்பட்டும் இராணுவ முகாங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டார். தடுப்பு முகாமில் இருந்து திரும்பிய தனது தாய் தங்கையுடன் தற்பொழுது தனது சொந்த ஊரான் இரத்தினபுரம் கிளிநொச்சியில் மீள்குடியேறி வசித்து வருகிறார். தீபச்செல்வன் தமிழ்நாட்டிற்கு 2011 இல் இடம் பெயர்ந்தார். தமிழ்நாட்டில் சென்னை மெரீனாவில் வாந்தார். பிறகு சென்னை பல்கலைகழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் முதுகலை படித்து முடித்தார் . அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு திருநெல்வேலில் அமைந்து இருக்கும் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழத்தில் தொடர்பியல் துறையில் படிப்பை படித்து வருகிறார். ஆரம்பக்கல்வியை கிளிநொச்சி மத்தியா கல்லூரில் தொடங்கி ,1996 இல் ஈழப்போர் காரணமாக இடம் பெயர்ந்து கிளிநொச்சி அக்கராயன் பிரதேசத்தில் மணியங்குளத்தில் இடம்பெயர்ந்திருந்து வந்திருந்த பாடசாலையான உருத்திரபுரம் மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து படித்தார்.போரின் காரணமாகவும் வறுமை காரணமாகவும் அவ்வப்போது கல்வியை கைவிட்டிருந்த போதும் மீண்டும் கல்விக்கு இணைக்கும் திட்டத்தில் பாடசாலை சென்றார். பின்னர் கிளிநொச்சி மத்திய கல்லூரில் உயர்தரக் கலைப்பிரிவில் படித்தார், யாழ்ப்பாண பல்கலைகழத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் தமிழ் சிறப்புக் கலையில் பட்டம் (B.A) பெற்றார். பின்னர் இந்தியா சென்று த்மிழத்தின் சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைகழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் படித்து முதுகலைப் பட்டம் ( M.A) பெற்றார். தற்போது திருநெல்வேலி மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைகழத்தில் தொடர்பியல் துறையில் (M,Phil) படித்து வருகிறார். எழுத்துலகில்- 2005 ஆம் ஆண்டு “ சுடரொளி “ பத்திரிகையில் இவரது முதல் கவிதை வெளியாகியிருந்தது. இவர் எழுதிய முதல் கவிதை 2006 ஆம் ஆண்டு ஈழநாதம் பத்திரிக்கையில் வெளியாகியிருந்தது. அந்த ஆண்டில் எழுதப்பட்ட கீறல்பட்ட முகங்காள், யாழ் நகரம் முதலிய கவிதைகள் மிகவும் முக்கியமானவை. 2007இல் ஆண்டில் எழுதப்பட்ட கவிதைகளில் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை கிளிநொச்சி முதலிய கவிதைகளும் வன்னிப்போர்கள வாழ்வைப் பற்றி அமைந்திருந்தன. 2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதைகளில் பதுங்குகுழியில் பிறந்த குழந்தை நூலை காலச்சுவடு வெளியிட்டிருந்தது.

2007இல் தீபம் என்ற வலைப்பதிவில் இவர் எழுதத் தொடங்கினார். திண்ணை , வார்ப்பு ஏனைய மின்னிதழ்களிலும் எழுதி வந்தார். இணையத்தில் பரவலாக இவரது கவிதைகள் வந்தன. பின்னர் தமிழக சிற்றிதழ்கள், புலம்பெயர் இதழ்கள் போன்றவற்றிலும் வன்னிப் போர் தொடர்பியல் எழுதி வந்தார். வன்னிப் போர் பற்றிய ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம் என்ற நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டது. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போது யாழ் நகரத்தின் பொழுது’ என்ற கவிதை எழுதினார். இவரது போருக்கு பிந்திய ஈழம் தொடர்பான உரையாடல்களும் கதைகளும் அடங்கிய ஈழம் மக்களின் கனவு என்றால் நூலை தோழமை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் தீபச்செல்வனுடன் ஷோபாசக்தி நடத்திய நேர்காணல் இடம் பெற்றிருந்தது. கொளதமசித்தார்தன் நடத்திய நேர்காணலுடன் வன்னியின் சமகால நிலமைகள் தொடர்பிலான பல்வேறு பதிவுகளும் அந்த நூலில் அடங்குகின்றன.

ஊடகத்துறைப் பிரவேசம்:

2006 ஆம் ஆண்டு தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் விவரணப்படத் தயாரிப்பாளராக் இணைந்தார். வன்னியில் போர்ச் சூழலில் இயங்கிய பாடசாலைகள், பதுங்குகுழிகளில் கல்வி கற்கும் மாணவர்களது எண்ணங்களையும் கல்வி நிலையையும் இவரது விவரணப்படங்கள் சித்திரிக்கின்றன. அதே வேளை தழிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் சிறப்பு நிகழ்ச்சிகள் ,,கவிதை நிகழ்ச்சிகளையும் தயாரித்துள்ளார். தேசிய தொலைக்காட்சியில் செஞ்சோலை வடு என்ற ஆவணப்படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். தழிழீழத் தேசிய தொலைக்காட்சியில் செய்திப் பிரிவிலும் பணியாற்றினார். 2005 முதல் ஈழநாதம் பத்திரிகையில் கவிதைகளுடன் ஈழத்துச் சினிமா தொடர்பில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். தொடர்ச்சியாக கவிதைகளை எழுதி வந்த தீபச்செல்வன் 2009 இல் கிளிநொச்சி இலங்கைப்படைகளால் கைப்பற்றப்பட்ட போது கிளிநொச்சியின் கதை என்ற கட்டுரையை எழுதினார். அதன் பின்னர் உன்னதம் இதழில் ஈழம் தடுப்பு முகாங்கள் நேரடி ரிப்போர்ட் என்ற கட்டுரையை எழுதினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக ஈழ மக்களின் கதைகளை சொல்லும் கட்டுரைகளை எழுதியுள்ளார். 2009 இல் பல்கலைகழக கல்வியை முடித்துக் கொண்டு சுயாதீன ஊடகவியலாளராக இயங்க தொடங்கினார் . போரின் பின்னரான ஈழமும் மக்களின் மீள்குடியமர்வு. தடுப்புமுகாம் மக்களின் வாழ்வை , வன்னிப்பெருநிலத்தின் இருப்பு நில அபகரிப்பு , சிங்கள பெளத்த ஆதிக்கம் , இராணுவத்தன்மையின் திணிப்பு போன்ற விடயங்கள் தொடர்பாக களத்திலிருந்து தொடர்ச்சியாக பல்வேறு ஊடங்களில் எழுதி வருகிறார். குளோபல் தமிழ் செய்திகள் இணையத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பெயர்களில் வன்னி மக்களின் வாழ்க்கை நிலைகள் தொடர்பிலும் ஈழத்தின் நிலமைகள் தொடர்பிலும் எழுதி வருகிறார். கட்டுரை, புகைப்படம் , வீடியோ ஆவணம் முதலிய துறைகளில் இயங்கி வருகிறார். பெருநிலத்தின் கதைகள் என்ற தலைப்பில் வன்னியில் வாழ்க்கையை தொடராக எழுதுகிறார் . தமிழ்வின் போன்ற ஏனைய இணைங்களிலும் இவரது கட்டுரைகள். புகைப்படங்கள் , செய்திகள் வெளியாகியுள்ளன. இவர் எழுதிய செய்திகள், செய்திக்கட்டுரைகள் , விவரணக்கட்டுரைகள் , கதைகள் என்பன உள்நாட்டில் உள்ள தினக்குரல் ,உதயன் , சுடரொளி , முதிலிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. சாந்தபுரம் பொன்னகர். இரத்தினபுரம் போன்ற கிராமங்களை அபகரிக்க முற்பட்ட பொழுது இவர் எழுதிய நேரடியான மக்கள் கதைகள் அதிர்வுகளை உருவாக்கி மக்களுக்கு நிலங்களைக் கிடைக்கச் செய்துள்ளன. ஊடகத்துறையில் இவர் புகைப்படம் , செய்திகள், செய்திக்கட்டுரைகள் நேரடி அறிக்கைகள், , ,மக்கள் கதைகள், வீடியோ விவரங்கள் , வானொலிப்பெட்டகங்கள் போன்ற பல்வேறு துறையில் இயங்குகிறார். மாணவத் தலைவராக - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் போர் கடந்த காலபபகுதியில் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். 2008 ஆம் ஆண்டியிலிருந்து 2009 ஆண்டின் இறுதிவரை மாணவர் ஒன்றியத்தின் முக்கிய பதவியான செயலாளர் பதவியை வகித்தார். இலங்கை அரச படைகளின் கடுமையான எச்சர்க்கைகளின் மத்தியில் போருக்கு எதிராக குரல் எழுப்பினார். போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குரிய தேவைகளை பூர்த்தி செய்ய உழைத்தார். இலங்கை அரசின் அடக்குமுறைக்கு எதிராகச் செயற்பட்டதோடு மாணவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் பல்கலைகழகத்திற்குள் அவர்களின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதிலும் முன்நின்றார்,

இலங்கை அரசபடைகளின் எச்சரிக்கை:

யாழ்ப்பாணப் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் போர் கடந்த காலப்பகுதியில் பொதுச்செயலாளராக பதவி வகித்த பொழுது இலங்கை அரச படைகள் இவருக்கு கொலை எச்சரிக்கை விடுத்தது. இவருடன் 14 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று இலங்கை இராணுவத்தினர் விடுத்த நோட்டீஸ் ஒன்றில் இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தில் இயங்கிய கால கட்டத்தில் இலங்கை இராணுவத்தினர் தொடர்ச்சியாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். சுற்றிவளைப்புகளிலும் இராணுவமுகாம்ங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டும் விசாரணை செய்யப்பட்டார்.ஈழக் கனத்திவிலிருந்து விடுபட வேண்டும் ,மாணவர்களை வழிநடத்தக்கூடாது. மாணவர் ஒன்றியப் பதிவியை துறக்க வேண்டும் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு தொடர்ந்து இராணுவத்தினர் எச்சரித்துள்ளனர்.போரை நிறுத்துமாறு கோரி மெளனப் போராட்டம் நடத்தியமை , முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் பல்கலைகழக்கை மூடி துக்க வாரமாக அறிவித்தமை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரர் ரவீந்திரன் கடத்தப்பட்டமைக்கு எதிராக போராட்டம் செய்தமை போன்றவற்றுக்காக இராணுவத்தினர் மரண எச்சரிக்கைகளை விடுத்திருந்தனர்.

விருதுகள்:

2010 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியாலர் என்ற இரண்டு விருதுகளை பெற்றுள்ளார். நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்காக 2010 ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியளாலர் என்ற விருதையும் 2010 ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியளாலர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.

வன்னியில் ஏற்ப்பட்ட நிலப்பிரச்சனை சார்ந்த பதிவுகளை நெருக்கடிகளன் மத்தியில் எழுதியமைக்காகவே இந்த விருதுகள் வழங்கபட்டுள்ளன. இலங்கை பத்திகை ஸ்தாபனம் இந்த் விருதுகளை வழங்கியிருக்கிறது. 2011 ஆம் ஆண்டு மீண்டும் ஊடகவியலாளர் விருதை இலங்கை பத்திக்கை ஸ்தாபனம் வழங்கியது. 2012ஆம் ஆண்டின் சிறந்த கவிஞருக்கான கணையாழி விருது வழங்கப்பட்டது. திரைப்பட பணி - விக்ரம், அனுஷ்கா , சந்தானம் ,நாசர் போன்ற நடிகர்களுக்கு இலங்கை தமிழை மிகவும் அழகாக கற்று கொடுத்திருக்கார் ஈழத்து மைந்தன் தீபச்செல்வன். யாவும் வசப்படும் என்ற தென்னிந்திய திரைப்படத்திற்காக பாடல் ஒன்றை எழுதியுள்ளார். முயன்றால் முடியும் என் தொடங்கும் இந்தப் பாடல் மனதில் நம்பிகையை ஊட்டுகின்ற பாடலாக வரவேற்பைப்பெற்று ள்ளது. புதியவன் ராசய்யா திரைப்படத்தை இயக்கியுள்ளார் , இந்தத் திரைப்படத்தின் டைட்டில் சோங்கை ( எழுத்தோட்டப்பாடல்) தீபச்செல்வன் எழுதியுள்ளார். இப்திரைப்படத்தில் விஜித் , தில்பிகா, பாலா , ரமேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். ஏஏஏ புரடக்சன் தயாரிப்பில் யாவும் வசப்படும் திரைப்படத்திற்கு ஆர்கே சுந்தர் இசையமைத்தார்.

தீபச்செல்வன் எழுதிய நூல்கள்:

1. பதுங்குகுழியில் பிறந்த குழந்தை வெளியீடு.2008:காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில்

2. ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம். வெளியீடு 2009:உயிர்மை பதிப்பகம் சென்னை20

3. பாழ் நகரத்தின் பொழுது வெளியீடு.2010:காலச்சுவடு பதிப்பகம் நாகர்கோவில்

4. ஈழம் மக்களின் கனவு. வெளியீடு 2010:தோழமை பதிப்பகம் , தமிழ்நாடு

5. பெருநிலம் வெளியீடு.2011;காலச்சுவடு பதிப்பகம் தமிழ்நாடு

6. ஈழம் போர்நிலம் வெளியீடு.2011:தோழமை பதிப்பகம் தமிழ்நாடு

7. மரணத்தில் துளிர்க்கும் வாழ்வு வெளியீடு.2011:ஆழி பதிப்பகம்.தமிழ் நாடு

8. கூடார நிழல் வெளியீடு.2012:உயிர்மை பதிப்பகம் சென்னை தமிழ் நாடு

9. கிளிநொச்சி போர்தின்ற நகர்ம்.வெளியீடு:2013 எழுவா வெளியீடு

10. எதற்கு ஈழம்? வெளியீடு: 2013 தோழமை பதிப்பகம் தமிழ் நாடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shridevi/மணல்தொட்டி&oldid=1654246" இலிருந்து மீள்விக்கப்பட்டது