பயனர்:Shan Sakthi

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை எனும் ஊரில் திரு. சண்முகவேல் மற்றும் திருமதி.பாப்பாத்தி ஆகியோருக்கு 1978ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி பிறந்த திரு.சக்திவேல் அவர்கள் படித்தது முதுகலை பட்டம். சிறுவயது முதல் ஆன்மீக நாட்டம் கொண்டதனால், முதன் முதலாக ஓஷோ வகுப்பு சென்று தன்னை அதில் இணைத்துக்கொண்டார். பின்னர், சூழ்நிலையின் காரணமாக தொடர இயலாமல், ஈஷாவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்து கலாசாரத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டதால் இயற்கையாகவே இந்து அமைப்புகளோடு தொடர்பு ஏற்பட்டு அதிலும் தன்னை வளர்த்து கொண்டார். அரசியல் ஆர்வம் பாரதிய ஜனதா கட்சியில் 2002 ஆம் ஆண்டு தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக பணியாற்றினார். சில தொழில் சார்ந்த காரணங்களால் அரசியல் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வரவேண்டிய சூழலில் 2013 வரை பொறுத்திருந்து, பின்னர் மீண்டும் அரசியல் பணியில் தீவிரம் காட்டினார். அதன்படி, அரசியலில் எந்த ஒரு பொறுப்பும் இல்லாமல் இருந்தாலும் தனது பணியில் தீவிரமாக செயலாற்றினார். 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பதவி  தேடி வந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shan_Sakthi&oldid=2456903" இலிருந்து மீள்விக்கப்பட்டது