பயனர்:Sai160221/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுயுகன் (கவிஞர்) (Puthuyugan) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கவிஞர் ஆவார். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதி வருகிறார். கல்வியாளர் என்றும் கணிப்பொறியாளர் என்றும் அறியப்படுகிறார். இலண்டனில் உள்ள உயர்கல்வி ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனராகப் பணியாற்றி வருகிறார்.[1] [2]

வாழ்க்கைக் குறிப்பு:[தொகு]

திருநெல்வேலி, இந்தியாவில் பிறந்த புதுயுகன் (ஏப்ரல் 5, 1972) கணிப்பொறி பொறியாளராக பட்டம் பெற்றார். இங்கிலாந்து கிரீன்விச் பல்கலைக்கழகத்தில், கணிப்பொறியிலும், உயர்கல்வியிலும் முதுகலை பட்டங்கள் பெற்றார்.

தமிழ் இலக்கிய பங்களிப்பு:[தொகு]

புதுயுகன் தமிழ் இலக்கியத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். சிறுகதை, புதினம், கட்டுரை, ஆய்வு, மரபு மற்றும் புதுக்கவிதை முதலிய இலக்கிய வகைகளில் எழுதி வருகிறார்.

தமிழ்நாடு அரசு அயலகத்தமிழர் தினம் 2024ல் இவர் எழுதிய ‘மிஞிலி, பிராட்டி, மூகுள்’ என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டது. ‘ஒளி உறுமும் கான்’ கவிதை நூலும் அறிமுகமானது. படைப்புத்திறனைப் பாராட்டி தமிழ்நாடு அரசு பாராட்டுச்சான்றுகள் வழங்கியது. ‘மின்தமிழ்’ என்ற ஆய்வு நூல் உலகத்தமிழ் சங்கத்தால் வெளியிடப்பட்டது.[3]

இலண்டன் நேரு சென்டரில் வெளியாகி, ப்ளெமிஷ் மொழியில் பெயர்க்கப்பட்டு, லண்டன் பிரித்தானிய நூலகத்தில் இடம் பெற்றிருக்கிறது இவரது ‘Air, Fire & Water’ [On Vedaranyam Salt March] என்ற நூல்.

2019ல் ‘கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை’ என்ற கல்வி உளவியல் சார்ந்த தன்முன்னேற்ற நூல் மதுரையில் வெளியானது.

'தனித்துவமான கவிமொழி' என்று புகழப்பெற்ற இவரது கவிதைகள் "கதவு இல்லாத கருவூலம்", "மடித்து வைத்த வானம்", "மழையின் மனதிலே", "ஒளி உறுமும் கான்" என்ற நான்கு கவிதைத் தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.[4]

உயர்கல்வித்துறையில் பங்களிப்பு:[தொகு]

புதுயுகன் கல்வித்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளார். இவர் பல்லாண்டுகளாக இங்கிலாந்து உயர்கல்விச் சாலைகள் பலவற்றில் கல்லூரி துணை முதல்வர், பதிவாளர் முதலான தலைமைப் பதவிகள் வகித்து சர்வதேச மாணவர்களின் உயர்கல்வி வளர்ச்சிக்கு குறிப்பிடத்தகுந்த பங்களித்துள்ளார். [5]

கல்வி தரமேலாண்மை நிபுணத்துவம் பெற்றவர் மற்றும் இங்கிலாந்து உயர்கல்வி அகாதெமியின் சான்றோன் (Senior Fellow of Higher Education Academy, UK) ஆவார். மேலும், இவரது 'ஆளுமைக்குமிழ்' என்ற கற்றல், கற்பித்தல், கல்வி உளவியல் சார்ந்த கண்டுபிடிப்பு மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு இங்கிலாந்து உயர்கல்வித்துறை அமைப்பான Advance HE-யால் வெளியிடப்பட்டது.

சமூக விழிப்புணர்வும், விளைவுகளும்:[தொகு]

  • புதுயுகன் நவீனயுகத்தின் பொருண்மைகள், பேதமற்ற சமூகம் போன்ற கருத்துகளை தன் எழுத்துகளில் வலியுறுத்துகிறார். காட்டாக, தமிழ்த் தேனீ இரா. மோகன், தனது "அயலகக் கவிதைக் குயில்கள்" நூலில் "புதுயுகன்:பாரதியமும் பாவேந்தமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்களி" என்ற கட்டுரையில், புதுயுகனின் கவிதை பாணி பாரதியார் மற்றும் பாவேந்தர் கவிதைகளின் கலவையாக இருப்பதாகக் குறிப்பிடுகிறார்
  • தனது பன்முகத்தன்மை மற்றும் உலகளாவிய பார்வையின் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்புகளை உருவாக்கியுள்ளார்.[6]
  • உலகின் அறிவுத்தலைமையை இந்தியா ஏற்கவேண்டும் என்ற நீள்கனவை தன் எழுத்துகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

பிற குறிப்பிடத்தக்க விவரங்கள்:[தொகு]

  • இவர் "கவிதை உறவு" இலக்கிய இதழ் பரிசு (2019) மற்றும் காரைக்குடி கம்பன் கழக சிறந்த கட்டுரைப் பரிசு (2013) உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார்.
  • 'எழுத்து' தளத்தில் இவரது கவிதைகள் முதற்பரிசுகள் வென்றன.[7]
  • புதுயுகனின் படைப்புகள் பல்வேறு தமிழ் இலக்கிய இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளன.
  • இவர் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கம்பன் விழாக்கள் போன்ற பல்வேறு இலக்கிய நிகழ்வுகளிலும் மற்றும் சர்வதேச மாநாடுகளிலும் ஆய்வுகளைச் சமர்ப்பித்துள்ளார்.

கவிஞர் புதுயுகன் குறித்து வெளிவந்துள்ள படைப்புகள்..[தொகு]

  • வேரும் விழுதும் - பேராசிரியர் இரா. மோகன், பேராசிரியர் நிர்மலா மோகன் (2019)
  • அயலகக் கவிதைக் குயில்கள் - பேராசிரியர் இரா. மோகன் (2016)
  • படித்தாலே இனிக்கும் - பேராசிரியர் நிர்மலா மோகன் (2018)
  • யாவரும் கேளிர் - கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன் (2023)

ஊடகங்களில்:

  • பல பத்திரிகைகளில் நூல் விமர்சனங்கள் மற்றும் நேர்காணல்கள்.[8][9]

சர்வதேச கவனம்:[தொகு]

2024ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற எஜூகேஷன் 2.0 சர்வதேச மாநாட்டில் இவரது உயர்கல்வி சாதனைக்காக, "ஆளுமைக்குமிழ்” போன்ற கண்டுபிடிப்புகளுக்காக “அவுட்ஸ்டாண்டிங் லீடர்ஷிப் விருது” வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. கவிஞர் புதுயுகன். "மடித்து வைத்த வானம்". புதிய திசைகள். https://puthiyathisaigal.com/%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9e%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%81%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a9/. பார்த்த நாள்: 10 April 2024. 
  2. இலக்கியன். "தேம்ஸ் நதிக்கரையில் வீசும் ஒரு குற்றாலச் சாரல்". கவித்திறம். https://kavithiram.blogspot.com/p/blog-page.html?m=1. பார்த்த நாள்: 13 April 2024. 
  3. கவிஞர் புதுயுகன். "மின்தமிழ் ஆய்வரங்கம்". உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. https://utsmdu.org/2017/09/01/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/. பார்த்த நாள்: 13 April 2024. 
  4. முனைவர் இரா. மோகன். "பாரதியமும் பாவேந்தமும் சரிவிகிதத்தில் சேர்ந்தமைந்த கூட்டுக்களி". TamilAuthors.com. https://www.tamilauthors.com/01/471.html. பார்த்த நாள்: 13 April 2024. 
  5. Golding Jo. "Edtech: the future of education?". Independent Education Today. https://ie-today.co.uk/news/edtech-the-future-of-education/. பார்த்த நாள்: 13 April 2024. 
  6. தினமலர். "இணையத்தில் தமிழ் காலத்தின் கட்டாயம் இங்கிலாந்து பொறியாளர் பேச்சு". தினமலர். https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-madurai/news/1847301. பார்த்த நாள்: 13 April 2024. 
  7. எழுத்து. "பரிசு பெற்ற கவிதை". Eluthu.com. https://eluthu.com/view-ennam/27640. பார்த்த நாள்: 13 April 2024. 
  8. தினமலர். "கனவும் வெற்றியும் பேசிக் கொண்டவை". தினமலர். https://books.dinamalar.com/details.asp?id=25472. பார்த்த நாள்: 13 April 2024. 
  9. தினமலர் சண்டே ஸ்பெஷல். "வெற்றியின் இரகசியம். புதுயுகனின் புதுமந்திரம்!". தினமலர். https://eluthu.com/kavithai/434846.html. பார்த்த நாள்: 13 April 2024. 

உசாத்துணை:[தொகு]

Kallapiran, Ram (July 16, 2018). "Usage of personality bubbles in learning teaching assessing and educational research". Advance HE Teaching & Learning Conference 2018. AdvanceHE. பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச்சு 2024.

பேராசிரியர் இரா.மோகன், 2016, அயலகக் கவிதைக் குயில்கள், வானதி பதிப்பகம், இந்தியா   

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sai160221/மணல்தொட்டி&oldid=3934394" இலிருந்து மீள்விக்கப்பட்டது