உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Saeyon/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அடிச்சட்டம் (FRAME)

[தொகு]

மனித உடலில் எலும்புகள் எவ்வளவு முக்கியமோ அதுபோல் மகிழுந்தில் அடிச்சட்டம் அவ்வளவு முக்கியமான ஒரு பகுதியாகும். நாம் இங்கு SUVமற்றும் LCVஅடிச்சட்டம் வடிவமைக்கும் போது பின்பற்றவேண்டிய சில அடிப்படை விடயங்களை பார்ப்போம். பொதுவாக SUV,LCVகளில் பயன்படுத்தப்படும் அடிச்சட்டமானது ஏணி வடிவத்தில் பரவலாக அமைத்திருப்பார்கள். இவை பெரும்பாலும் LOW CARBON STEEL உலோகத்தால் உருவாக்கபடுகிறது, இதன் தடிமன் 1.8mm இருந்து 5 mm வரை இருக்கும். இதன் எடையானது 200 kg இருந்து 220kg வரை இருக்கக்கூடும், நீளம் 4.5 மீட்டர் மற்றும் அகலம் 1.2மீட்டர் வரையிலும் இருக்கக்கூடும். நீள வாக்கில் நீண்ட ஒரே வடிவத்தை உடைய இரண்டு பாகங்களை SIDE MEMBER என்றும், இவற்றை குறுக்கு வாக்கில் இணைக்கக்கூடிய பாகத்தை CROSS MEMBERS என்றும் கூறுவர்.பெரும்பாலும் இவற்றை இணைக்க வெல்டிங் முறையே பின்பற்றபடுகிறது. (RIVIT,BOLTடை விட வெல்டிங் வலிமையானது என்பதால்)

அடிச்சட்டம் (FRAME)


அடிச்சட்டதின் CROSS MEMBERSஆனது C வடிவிலும் SIDE MEMBERஆனது இரண்டு C பாகங்களை இணைத்து வெல்டிங் செய்வதன் மூலம் செவ்வகமாக வடிவமைக்கப்படுகிறது.அடிச்சட்டமானது ,இலகுவாக ASSEMBLE செய்யவும், முன்சக்கரத்திற்கும் பின்சக்கரத்திற்கும் இடையிலான நீள அளவை கூட்டவும் குறைக்கவும் ஏதுவாக அ,ஆ மற்றும் இ என 3 பகுதிகளாகப் பிரிக்கபடுகிறது. பகுதி-ஆ வின் நீள அளவை கூட்டி குறைப்பதன் மூலம், நீள அளவுகளின் வித்தியாசத்தின் அடிப்டையில் 3 விதமான அடிச்சட்டம் உருவாக்கப்படுகிறது.

  1. REGULER
  2. CREW
  3. EXTENDED

அடிச்சட்டம் வடிவமைக்கும் போது கவனிக்கவேண்டியவை

[தொகு]

இடித்துக்கொள்ளுதல்

[தொகு]

பாகங்களை ASSEMBLE செய்யும்போது பக்கவாட்டில் உள்ள பாகங்களில், ஒன்றுடன் ஒன்றோ அல்லது RIVET,BOLT, WELD BEADகளுடன் இடித்துக்கொள்ளாமல் அல்லது இவைகளுக்கு இடையே குறுக்கீடு ஏதும் இல்லை என்பதை உறுதிபடுத்தவும்.

ஆரம் தேர்ந்தெடுப்பது

[தொகு]

இரண்டு பாகங்களை இணைக்கும்போது அதன் ஆரம் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது போல் அமையுமாறு பார்த்துகொள்ளுதல் அவசியம்.

ஆரம் தேர்ந்தெடுப்பது









பாகங்களை இணைக்கும்போது

[தொகு]

இரண்டு பாகங்களை இணைக்கும்போது அவைகளுக்கிடையுள்ளான இடைவெளி 0.25mm (வடிவமைப்பை பொருத்து இடைவெளியின் அளவு மாறலாம்) இருக்குமாறு வடிவமைக்க வேண்டும்.

பாகங்களை இணைக்கும்போது







பாகங்களை இணைக்கும்போது

[தொகு]

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பாகங்களை இணைக்கும்போது அவைகளை எந்த வரிசையில் இணைக்கவேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

பாகங்களை இணைக்கும்போது






CROSS MEMBERஇன் உயரம் கணக்கிடுதல்

[தொகு]

CROSS MEMBER மற்றும் SIDE MEMBER இணையும் இடத்தில் CROSS MEMBERஇன் உயரம் SIDE MEMBER உயரத்தில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு இருந்தால் உறுதித் தன்மை அதிகரிக்கும் (வடிவமைப்பை பொருத்தது )

குறுக்கு வெட்டுத்தோற்றம்







துல்லியம் பாதுகாப்பது

[தொகு]

இரண்டு பாகங்களை, மூடிய ஒரு பாகமாக இணைக்கும்போது, மிக துல்லியமாகவும் எளிதாகவும் இணையும் படி வடிவமைக்க வேண்டும்(எ.கா--துளை இடுதல்,LANCEஅமைதல்)

வளைவுப்பகுதில் ஆரம்

[தொகு]

தகடின் வளைவுகளில் உட்பகுதியின் ஆரம் ≧ 2t (t= தகடின் தடிமன்) மேல் இருக்குமாறு வடிவமைக்கவேண்டும்.


BRACKETகள் வடிவமைப்பு (BRACKETகள் PRESSஇல் வடிவமைக்கும் போது)

[தொகு]

அபிவிருத்தி வடிவத்தின் போது FLANGEஆனது மற்ற இடங்களில் குறுக்கீடு செய்யாதது போல் இருக்கவேண்டும் FLANGEஇன் ஆரம் முடியும் இடத்திலிருந்து 3t ( t- தகட்டின் தடிமன் )நீளம் இருந்தால் போதுமானது (நீளம் தேவையை பொறுத்தது)

BRACKETகள் வடிவமைப்பு




BRACKETகள் வடிவமைப்பு

[தொகு]

மொத்த எடையில், நிகர எடையானது 70% மேல் இருக்கவேண்டும். முடிந்த அளவு கழிவு எடையை குறைக்கவேண்டும்

நிகர எடை / மொத்த எடை=(1.5 / 2)*100 =75%

BRACKETகள் வடிவமைப்பு




நீர் தேங்காமல்

[தொகு]

S/MBR,C/MBR,BRKT வடிவமைக்கும் போது நீர் தேங்காதவாறு அமைத்தல் அவசியம், இதன் மூலம் துருப்பிடித்தல் மற்றும் மண் சேருவதை தவிர்த்து உறுதித்தன்மையை அதிகரிக்கலாம்.

பொதுவான வடிவமைப்பு

[தொகு]

பாகங்கள் வடிவமைக்கும் போது, எல்லா இடங்களிலும் பயன்படும்படி பொதுவான வடிவமாக இருத்தல் அவசியம் (செலவை குறைக்கும் ) தவிர்க்கமுடியாத காரணம் இருப்பின் மாறுபட்ட வடிவ பாகங்களை வடிவமைக்கலாம்.

கூர்மையான வடிவமைப்பு

[தொகு]

பாகங்கள் வடிவமைக்கும் போது கூர்மையான முனைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும், கூர்மையான முனைகள் ASSEMBLE செய்யும் போது காயத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

கூர்மையான வடிவமைப்பு





WELD NUT பயன்படுத்தும்போது கவனிக்கவேண்டியவை

[தொகு]
WELD NUT







வெல்டிங்

[தொகு]

வெல்டிங் செய்யும் போது வெல்டிங் டோர்ச் ஆனது மற்ற பாகங்குளுடன் எந்தவித குறுக்கீடும் செய்யவில்லை என்பதை உறுதிபடுத்தவும்.

வெல்டிங் டோர்ச்






வெல்டிங் செய்யும் போது கடைபிடிக்கவேண்டிய சில விதிமுறைகள்

[தொகு]

(கட்டாயம் அல்ல தேவைக்கேற்ப மாறுபடலாம்)

S/MBRஇன் ஆரம் பகுதியல் வெல்டிங் செய்வதை தவிர்க்கலாம், ஒருவேளை வலிமை குறைவாக உள்ளது என கண்டறியப்பட்டால்,ஆரம் பகுதிலும் வெல்டிங் செய்யலாம்.

வெல்டிங்கின் நீளம் 30mm குறைவில்லாமல் இருக்குமாறு பாகங்கள் வடிவமைக்கவேண்டும் (வலிமையை அதிகரிக்க வேண்டிய பட்சத்தில் மாறுதலுக்குட்பட்டது)

வெல்டிங் செய்யும் போது






பகுப்பாய்வு

[தொகு]

அடிச்சட்டம் முழுவதுமாக உருவாக்கப்பட்ட பிறகு கீழ்காணும் பல்வேறு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

  1. நிலைமத் திருப்புத்திறன்(MOMENT OF INERTIA)
  2. இயற்கை அதிர்வு(NATURAL VIBRATION)
  3. தகைவு(STRESS ANALYSIS)
  4. மாறாநிலை ஆய்வு(STATIC ANALYSIS)
  5. முறுக்குகின்ற பகுப்பாய்வு(TORSIONAL ANALYSIS)
  6. பக்கவாட்டு பகுப்பாய்வு(LATERAL ANALYSIS)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saeyon/மணல்தொட்டி&oldid=1749010" இலிருந்து மீள்விக்கப்பட்டது