பயனர்:SUBRAMANIYAN007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவிஞர் அமிர்தன்

கவிஞர் அமிர்தன்  தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவரது இயற்பெயர் கா.சுப்ரமணியன் ஆகும். 2019 ஆம் ஆண்டுக்கான ‘கவிமாமணி’ விருதை  சிறந்த பக்தி  பாடலாசிரியருக்கான  தனது ‘அன்னையே அங்காளி’ என்ற ஆல்பத்துக்காக  Global Peace University இவருக்கு வழங்கியுள்ளது..

கவிஞர் அமிர்தன் 1982 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் நாள் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்கரிப்பூர் என்ற கிராமத்தில்  பிறந்தார். இவர் பெற்றோர் காந்தி & வள்ளியம்மாள் ஆவர்.

இவர் 1986 முதல் 1991 வரை கீழ்கரிப்பூர் அரசு நடுநிலை பள்ளியிலும்  1992 முதல் 1998 வரை வேட்டவலம் அரசு ஆண்கள் பள்ளியிலும்  கல்வி கற்றார். 1999 முதல்  2004 வரை சென்னை அரசு அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும்  2005 முதல்  2007 வரை முதுகலை சட்ட படிப்பும் கற்றார். மேலும் பெங்களூரு நேஷனல் லா ஸ்கூல் ஆப் இந்தியா யுனிவேர்சிட்டி, டெல்லி யுனிவேர்சிட்டி, மதுரை காமராஜர் பல்கலை கழகம் , தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் பல்கலைகழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  அஞ்சல் வழியில் எம்.எ, எம்.பி.எ மற்றும் பட்டய படிப்புகளை முடித்து பல்வேறு  பட்டம் பெற்றுள்ளார்.

இயக்குனர் மாதேஸ்வராவின் ‘சாதனை பயணம் ‘ என்ற  படத்தில் முதலில் ‘வானம் வசப்படும்’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 13 திரைப்பட பாடல்கள் எழுதியுள்ளார்.

மேலும் ‘மலையே மகேசா’ மற்றும் ‘பஞ்சபூதன்’ என்ற பக்தி ஆல்பத்தையும் வெளியிட்டுள்ளார். இதுவரை 50 க்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2011 ஆம்  ஆண்டு ‘ கனவுகள் விற்பவன் என்ற கவிதை நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் தொடர்ந்து இசையமைப்பாளர் பரத்வாஜ் , இசையரசர் தஷி , இசையமைப்பாளர் காந்திதாசன், இசையமைப்பாளர் ராம்ஜி ஆகியோரது இசையில்  தமிழ்த் திரைப்படங்கள், ஆல்பம் என  தொடர்ந்து பாடல்களை எழுதி வருகிறார்..

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SUBRAMANIYAN007&oldid=2785345" இலிருந்து மீள்விக்கப்பட்டது