பயனர்:S.mohan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குச்சிப்பூச்சி

குச்சிப்பூச்சி போன்றவற்றுக்கும் தலை, தொண்டை, வயிறு என்ற மூன்று பகுதிகள் உண்டு. எல்லாப் பூச்சிகளைப் போலவும் முட்டையில் இருந்தே இந்தப் பூச்சிகள் பிறக்கின்றன.

பூச்சிகளுக்கு நுரையீரல், இதயம் போன்ற உறுப்புகள் இல்லை. குச்சிப்பூச்சிகளுக்கு பார்வைத்திறன் மங்கலாகவே இருக்கும். காதுகள் இல்லை என்றாலும், காற்றில் ஏற்படும் அதிர்வுகளைக் கொண்டு சிலவற்றை உணரும். இவற்றின் முக்கிய உணர்வு அமைப்பு, வேதி உணர்வு அமைப்பு. பல்வேறு வாசனைகளைப் பிரித்து அறியும் திறனை மூக்கு கொண்டிருப்பது போல, இந்த வகைப் பூச்சிகள் பொருட்கள் வெளியிடும் வேதிப்பொருளை முகர்ந்து அறிந்துகொள்ளும்.

போர்னியோ தீவுகளில் வாழும் போபேடிகஸ் சானி (Phobaeticus chani) எனப்படும் குச்சிப்பூச்சியின் உடல் மட்டும் 14 அங்குல நீளம் கொண்டது. அதன் கால்களோடு அளந்தால், அதன் நீளம் சுமார் 22 அங்குலம். இதுவே உலகிலேயே மிக நீளமான குச்சிப்பூச்சி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.mohan&oldid=2510694" இலிருந்து மீள்விக்கப்பட்டது