பயனர்:S.Jasmine jeno/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி.சாய் குமார் (P. Sai Kumar)(பிறப்பு: ஜூலை 27, 1960) ஒரு இந்திய நடிகர், ஒலி மொழிமாற்ற கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் முதன்மையாக கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றுகிறார். [1][2] கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களுக்காக இவர் இரண்டு முறை ஆந்திர மாநில அரசு சார்பாக வழங்கப்படுகின்ற நந்தி விருதுகளையும் மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். [3][4] பிரஸ்தானத்தில் (2010) அவரது நடிப்பு திரைப்படத் தோழரின் "தசாப்தத்தின் 100 சிறந்த நிகழ்ச்சிகள்" பட்டியலில் இடம்பெற்றது [5]

ஆரம்பகால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாய் குமார் பி.ஜே.சர்மா மற்றும் கிருஷ்ணா ஜோதி ஆகியோருக்கு ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார். சர்மா ஆந்திராவின் விஜயநகரத்திலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்து தன்னை ஒரு நடிகராகவும், ஒலி மொழிமாற்ற கலைஞராகவும் நிலைநிறுத்திக் கொண்டார். [6][7] குமாரின் சகோதரர்கள் பி.ரவிசங்கர், அய்யப்பா சர்மா ஆகியோரும் நடிகர்கள் ஆவர். அவர்களுக்கு இரண்டு சகோதரிகள் உள்ளனர். [6] .[8] குமார் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் கலை பிரிவில் முதுகலைப் பட்டமும் ஆய்வியல் நிறைஞர் பட்டமும் முடித்தார். [9]சாய் குமாரின் மகன் "ஆடியும்" தெலுங்கு சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகர் ஆவார் . [10]

திரைப்பட வாழ்க்கை[தொகு]

சிறு வயதிலேயே ஒலி மொழி மாற்ற குழந்தை கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது தந்தை பி.ஜே.சர்மா ஒரு முன்னணி ஒலி மொழி மாற்ற கலைஞராக இருந்தார். சாய் குமார் தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, சுமன் மற்றும் ராஜசேகர் ஆகியோரின் பல படங்களுக்கு ஒலி மொழி மாற்றம் செய்தார். [11]1996 ஆம் ஆண்டில் வெளியான போலிஸ் கதை என்னும் கன்னடத் திரைப்படம் இவர் சிறந்த நடிகராக புகழ் பெற காரணமாக அமைந்தது. இது தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளிலும் ஒலி மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய திரைப்படமாக மாறியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Sagacious – Saikumar
  2. "'Dialogue King' on a roll". தி இந்து. 26 March 2011. Archived from the original on 2 April 2011. பார்க்கப்பட்ட நாள் 4 August 2012.
  3. "Telugu Cinema hero birthday function - Sai Kumar". www.idlebrain.com.
  4. "Great Andhra: Exclusive interview with Saikumar".
  5. "100 Greatest Performances of the Decade". Film Companion (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  6. 6.0 6.1 "Ravi Shankar: Dad was straightforward, mom encouraged creativity". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-06-12. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  7. Sarma, G. v Prasada (2011-03-26). "‘Dialogue King' on a roll" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/lsquoDialogue-King-on-a-roll/article14961519.ece. 
  8. "Sai Kumar interview - Telugu Cinema interview - Telugu film actor". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  9. "Sai Kumar interview - Cinema interview - Telugu film actor". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 2021-02-17.
  10. "Aadi is a producer's hero: Sai Kumar - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
  11. "Sai Kumar interview – Telugu Cinema interview – Telugu film actor". Idlebrain.com. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.Jasmine_jeno/மணல்தொட்டி&oldid=3315290" இலிருந்து மீள்விக்கப்பட்டது