பயனர்:Rsenthilmaran/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செல்லையா இரத்தினம் S.Ratnam

ஈழத்திருநாட்டின் பெருமைமிகு யாழ்ப்பாணம் அதன் வடபால் சப்ததீவுகள்.இதன் வடபால் அமைந்த தீவின் துறைமுகப்பட்டினம் ஊர்காவற்றுறை.இப்பட்டினத்தின் முதன்மை விவசாய கிராமமாக திகழ்வதே புளியங்கூடல் கிராமம். இக்கிராமத்தின் திரு.திருமதி செல்லையா கண்ணம்மா தம்பதிகளுக்கு 4வதும் கடைசியுமான மகனாக் இரத்தினம் பிறந்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை வேலணை சைவப்பிரகாச வித்தியாலயத்தில் பயின்று ஆண்டு 5 புலைமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து.புளியங்கூடல் கிராமத்தில் புலமைப்பரிசில் பரீட்சை சித்தியடந்த முதல் மாணவனாக திகழ்ந்தார். உயர் கல்வியை வசாவிளான் மத்திய கல்லூரியில் தொடர்ந்தார். கல்லூரியின் உதைபந்தாட்டம்,கரப்பந்தாட்டம் மற்றும் துடுப்பாட்ட அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார்.

யாழ்ப்பாணத்தில் கல்வி கற்கும் காலத்தில் விடுதலைக்காலங்களில் ஊர்பற்று அழைத்துவிடும்.அவரது அறிவுப்பசிக்கு வாய்ப்பாக மகாமாரி சனசமூக நிலையத்தில் பத்திரிகைகள்,கல்கி,குமுதம் போன்ற புத்தகங்கள் மேலும் ஆங்கில் பத்ரிகைகளும் நீண்டநேர வாசிப்பு ஆர்வலர்களுக்கு தீனி போட்டதாக ஆக்கிகொள்வார்.கரப்பந்தாட்ட பாடசாலைக்குழு வீரனாக இருந்து தன் பெற்ற பயிற்சிகளை கிராம விளையாட்டு குழுக்களுக்கு கற்பிப்பார்.இவரின் பயிற்சியே புலியங்கூடல் கிராமத்தின் கரப்பந்தாட்ட 'செற்றப்' விளையாட்டு முறைக்கு ஆரம்பமாக அமைந்தது.அவ்வாறே துடுப்பாட்டம்,உதைபந்தாட்டம் ஆகியவற்றை ஒழுங்குமுறையில் விளையாட ஏற்பாடுகள் செய்தவரும் அவரேதான்.கிராமத்தில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தியவ்ரும் அவரே பிற்காலத்தில் சதுரங்க விற்பன்னராகவும்,யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளன தலைவராகவும் பெருமை பெற்றார்.யோகாசன பிரியராகவும் மாமிசம் புசியாத சைவநெறி சீலராகவும் விளங்கினார்.கோடைகால விடுமுறை கிராஞ்சி குளத்தில் நீச்சலடித்துத் தோழர்களுடன் மகிழும் வாய்ப்பை ஏற்றபடுத்தும். 1961ம் அண்டு தனது 20 வது வயதில் அரச சேவையில் தன்னை இணைத்துக்கொண்டார்.இவரது உத்தியோகத்தின் பெரும் பகுதிக்காலம் தென்பகுதிகளிலேயே கழிந்தது.தமிழ் ஆங்கிலம்,சிங்களம் ஆகிய மொழிப்பாண்டித்தியம், ரஷ;யன்இபிரஞ்ச் மொழிகளில் தேர்ச்சியும்,பொருளாதார,விஞ்ஞான,அரசியல் ஞானம்,உலக விவகாரங்கள் தெளிவு இவையாவும் எல்லாவகை நூல்களையும் சஞ்சிகைகளையும் கற்பதினாலேயே பெற்றுக்கொண்டார்.மாலை நேரங்களில் விளையாட்டு முடிந்த பின்னர் எல்லா நண்பர்களும் சூழ்ந்திருந்து பேசும்போது ஒரு கல்விக்கூடமாகவே ஆக்கிவிடுவார்.

விவசாய திணைக்களம்,பேராதனை,கந்தளாய்,விவசாய அமைச்சு,பிரதமரது அலுவலகம் போன்ற அரச திணைக்கலங்களில் வேலை செய்தார்.அலுவலக வேலைகளில் மொழிபெயர்ப்பு,கடித விடயங்களை ஒழுங்கமைத்துத் தயாரித்தல் போன்ற எல்லாக்கடமைகளையும் கண்ணியமாக கட்டுப்பாட்டுடன் செய்து தனது உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற்றவராக தனது ஆன்ம திருப்தியாளனாக விளங்கினார்.இத்தகமைகள் காலப்போக்கில் பல பிரதேசங்களில் பிரதேச செயலாளராக பதவி பெறவும் அதில் நற்பெயர்,மக்கள் அபிமானம் உடையவராகவும் ஆக வழி அமைத்தது.

1970ல் பிரதமர் அலுவலகத்தில் கடமையாற்றும் போது இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் முதன்மையாக தேர்வாகி நேர்முகத்தேர்விற்கு தெரிவு செய்யப்பட்டார்.அரசியல் தயவை விரும்பாததால் அப்பதவிக்கு தெரிவாகமல் தவிர்க்கப்பட்டார். புளியங்கூடல் மகாமாரி அம்மன் ஆலயத்தில் வெளியே நின்று அம்பிகையை தரிசிப்பார்.தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் பிரவேசம் தடுக்கப்பட்டிருந்ததால் அவர்கள் எப்போது உள்ளே அனுமதிக்கப்படுவார்களோ அப்போதே தானும் வருவேன் என்பார்.இது கிட்டத்தட்ட 30 வருடங்கள் தொடர்ந்தது. 1978 ம் ஆண்டு வேலணைத்துறையூர் குடியேற்றத் திட்ட திறப்பு விழா நிகழ்விற்கு வருகை தந்த அமரரான அப்போதைய பிரதமரை புளியங்கூடல் சந்தியில் கிராம முன்னேற்றச் சங்கம் வரவேற்று கையளித்த கிராமத்தின் அபிவிருத்தித் திட்டங்கலான அணைக்கட்டு,பொதுச்சந்தை,வங்கி,மின்சாரம்,தபாற்கந்தோர் தரமுயர்த்தல்,விளையாட்டு மைதானம் ஆகியவற்றை மும்மொழிகழிலும் விளக்க தலையாய் விளங்கியவர்.அந்த வங்கிதான் ஊர்காவற்றுறை இலங்கை வங்கி.

தனது பதவிக்காலங்களில் அவருக்கிருந்த மதிப்பை திறமையை,அபரிமிதமான நினைவாற்றலை அவரிடம் பழகியவர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.முகமன்,சலுகை பெறுவது வேறு எவ்வகையிலும் உயர் பதவிகளுக்கு முயற்சிக்க விரும்பவில்லை.இதன் விளைவு 1985-1987 வரை மூன்று ஆண்டுகள் ஜேர்மனி செல்ல நேர்ந்தது.அங்கே மிகவிரைவில் 'டொச்' மொழியைக் கற்றுக்கொண்டார்.அந்நாட்டுச் சட்டத்தரணியின் கூட்டாளியானார்.இலங்கை தமிழர்களின் அவல நிலையால் அங்கு வந்த தமிழர்களுக்கு அகதி விண்ணப்பம்,மொழி பெயர்ப்பு போன்ற விடயங்களை உதவியாகவே செய்தார்.இதனால் அங்கு வாழ்ந்த பலரின் இதயங்களை கவர்ந்தவரானார்.மேலும் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இந்தியா,நேபாளம்,பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு சென்றதும் இலங்கையின் பல இடங்களை சென்றுபார்த்து உலக ஞானத்தை தன்னிடம் உயர்த்தினார்.

ஜரோப்பாவில் வாழ்ந்துவரும் புளியங்கூடல் உறவுகள் தமது கிராமத்தின் சிறுவர் நல்வாழ்வுக்கு வழி அமைக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவ்வமைப்பின் நிறவேற்றுக் குழுவின் தலைவராக இரத்தினம் அவர்களையே நியமித்தது.எத்தனையோ வேலைப்பழுவிலும் நிலையத்திற்கு வருகை தந்து பிள்ளைகளுடன் உலக விடயங்களையும் நற்பழக்க கருத்துக்களையும் எடுத்துக்கூறி அவ்வமைப்பை திறம்பட நடைபெற வழியமைத்தார்.

ஜேர்மனிய மொழி வளத்தால் (டொச்) ஜேர்மனியிலுள்ள பல சட்ட அறிஞர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒரு காலத்தில் உலகறியச்செய்தார்.சிங்கள மொழியை தமிழ் மொழி போல கையாளக்கூடியதாக இருந்தார்.இதனால் லங்காதீப பத்த்ரிகையில் தனது எண்ணக்கருக்களை பிரசுரித்தார்.ஆங்கில மொழிகளை பலவடிவங்களில் கையாளக்கூடிய திறமையை வளர்த்துக்கொண்டார்.

"A glitter which appeared from the sky made three of us orphans within few seconds" வானத்திலிருந்து தோன்றிய ஒரு வெளிச்சம் சில நிமிடங்களில் எங்கள் மூவரையும் அநாதையாக்கிவிட்டது இது 1990ம் ஆண்டு வேலணை மேற்கில் விமானக்குண்டு வீச்சில் பலர் கொல்லப்பட்டபோது அதில் அநாதையான குழந்தைகளுக்கு இவர் எழுதிக்குடுத்த ஒரு கடிதத்தில் எவர் மீதும் குற்றம் சுமத்தாமல் இறைவன் மீது நொந்து எழுதிய இக்கடிதத்தின் பெறுமதியால் அப்பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். ஜேர்மனிய மொழியிலிருந்து இவர் மொழி பெயர்த்து உதயனில் வெளிவந்த அம்மா என்ற கதையும் ஈழநாட்டில் வெளிவந்த ஒரு ஜனாதிபதியின் உண்மைக்கதையும் (சுவிஸ் ஜனாதிபதி தொடர்பானது) இவர் ரசித்து மொழிபெயர்த்தவை.சிங்கள நாடகங்கள் சிங்களவர்களின் பண்பாட்டை அப்படியே கட்டுக்குலையாமல் சித்த்தரிப்பதைப் பார்த்து பாராட்டி ரசிப்பார்.தொலைக்காட்சி தமிழ் நாடகங்களின் தற்போதைய போக்கை இவர் வெறுத்தார்.ஆங்கில ஜேர்மனிய நாவலகளை அதிகம் வாசித்தவர்.அவற்றில் நல்லவற்றை நினைவுபடுத்தி மற்றவர்களுக்கும் கூறுவதில் அலாதிப்பிரியம்.

தீவகத்தின் மூன்று (நெடுந்தீவு,வேலணை,ஊர்காவற்றுறை) பிரதேச செயலகங்களிலும் கடமையாற்றினார்.தீவகத்தின் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு அங்கிருந்து மண் அகழ்ந்து கொண்டு செல்வதைத் தடுப்பதிலும் கால்நடைகள் கடத்தப்படுவதனை தடுப்பதிலும்,பனை மரங்கள் மற்றும் மரங்கள் வெட்டப்படுவதை தடுப்பதிலும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டார். வேலணை,சங்கானை பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது இடம்பெயர்ந்த மக்களை மீளவும் குடியமர்த்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.அதற்கு வேலணை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினை ஒழுங்காக செயல்படச் செய்வதும் வேலணை மத்திய கல்லூரியை சொந்த இடத்தில் மீள இயங்க வைப்பதும் இன்றியமையாததாக் இருந்தது.இதற்காக இவர் அரும்பாடுபட்டார். அறுபத்தி மூன்று வயதில் டிப்ளோமா கற்கை நெறியில் First semester இல் Batch top வழி ஆக வந்தார.(Peace Studies Programe,University Of Bradford UK)

இரத்தினம் அவர்கள் எப்படியும் வாழலாம் என்ற வாழ்க்கை முறைமையை வெறுத்து இப்படித்தான் வாழவேண்டும் என்று தான் வகுத்துக்கொண்ட வாழ்வாங்கு வாழும் நெறிமுறையிலிருந்து இம்மியளவும் தடம் புரளாமல் வாழ்வின் இறுதிவரை ஓர் இலட்சிய வாழ்வு வாழ்ந்தார்.மண்ணில் நல்லவண்ணம் வாழ்ந்து காட்டியதுடன் மற்றவர்களையும் அவ்வண்ணமே வாழ வழி காட்டினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rsenthilmaran/மணல்தொட்டி&oldid=1812532" இலிருந்து மீள்விக்கப்பட்டது