பயனர்:Robert Arutco James/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எசு.கலைவாணி

     எசு.கலைவாணி (பிறப்பு - 25 நவம்பர் 1999) ஒரு இந்திய குத்துச்சண்டை வீரர்  .      [1] 

எசு.கலைவாணி ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனையாவார். 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 அன்று இவர் பிறந்தார். நேபாளநாட்டின் தலைநகரமான காத்மாண்டுவில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப்போட்டிகளில் இந்தியாவிற்காகத் தங்கப் பதக்கம் வென்றார்.  (5)

தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பின்னணி:

     எசு.கலைவாணி 25 நவம்பர் 1999 அன்று தமிழ்நாட்டின் சென்னை வண்ணார்பேட்டையில் பிறந்தவர்.[2]  [1][3]  அவரது தந்தை எம். சீனிவாசன் ஒரு குத்துச்சண்டை வீரர். மற்றும் அவரது சகோதரர் ரஞ்சித் ஒரு தேசிய அளவிலான குத்துச்சண்டை வீரர் ஆவார்.      தந்தையின் விளையாட்டு நாட்களில் எவ்வளவு எதிர்ப்புகளை அவர் சந்தித்தார் என்பது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்தார் கலைவாணி. குழந்தைப்பருவத்தில், தந்தை சகோதரருக்கு வீட்டில் பயிற்சியளிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த கலைவாணிக்கும் குத்துச்சண்டை விளையாட்டில் ஆர்வம் வளர்ந்தது. அவரது குடும்பமும் நிதி சிக்கல்களை எதிர்கொண்டது மற்றும் அவரது தந்தை குடும்பத்தின் வருமானத்தை ஈடுசெய்யவும், கலைவாணியின் லட்சியங்களை ஆதரிக்கவும் விவசாயம் செய்யத் தொடங்க வேண்டியிருந்தது.[4]  [2]

    கலைவாணியின் தந்தை அவரை ஊக்குவித்து, பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். ஆனால் கலைவாணியின் பள்ளி ஆசிரியர்கள் குத்துச்சண்டையில் அவருக்கு இருக்கும் வாய்ப்பு மற்றும் எதிர்காலத்தை பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை, அவர் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். கலைவாணி  4 ஆம் வகுப்பில் குத்துச்சண்டையைத் தொடங்கினார். [3] ஆனால் அவர் துணை இளையோர் போட்டிகளில் பதக்கங்களை வெல்லத் தொடங்கியபின் அவர்களின் கருத்து மாறியது, திடீரென்று அவர் தனது பள்ளியில் 'தங்கப் பெண்ணாக' காணப்பட்டார், அது அவரை மிகவும் ஊக்குவித்தது. [2]

அவரது உறவினர்கள் பலரும் அவர் குத்துச்சண்டை விளையாடுவதைப் பார்த்து கோபமடைந்தனர், ஏனென்றால் விளையாட்டு என்பது பெண்களுக்கு பொருந்தாது என்று அவர்கள் நம்பினர். அவரது உறவினர்கள் சிலர் அவரது தந்தையிடம் குத்துச்சண்டையைத் தொடர்ந்தால் யாரும் அவரைத் திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள் என்று கூறினர்.[5]  [3]

ஆனால் அவருடைய தந்தை அவர்களின் எதிர்ப்பால் கலக்கமடையவில்லை, மகனைப் போலவே மகளுக்கும் பயிற்சியும் ஊக்கமும் அளித்தார். குத்துச்சண்டை வீரராக வளர்ந்ததற்காக தனது தந்தை மற்றும் சகோதரருக்கு அவர் பெருமை சேர்த்துள்ளார். இருப்பினும்,      கலைவாணியின் சகோதரரும் குத்துச்சண்டை வீர்ர் என்றாலும், குடும்ப நிதி காரணமாக, கலைவாணியின் அப்பா, சகோதரருக்கு செலவிடுவதை நிறுத்தி விட்டு, கலைவாணிக்குச் செலவிட்டு பயிறசி அளித்தார்..[6] [7]  [3]

தொழில்முறை சாதனைகள்:

கலைவாணி  தனது ஒன்பது வயதில் முதல் முறையாக கையுறைகளை அணிந்தார். 2012 இல் துணை [8]  இளநிலை பெண்கள் தேசிய குத்துச் சண்டைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். [1] அவர் 2019 இல் மூத்த பெண்கள் தேசிய குத்துச்சண்டைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். [2]

காத்மாண்டுவில் 2019 ஆம் ஆண்டு நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேபாளத்தின் மகர்ஜன் லலிதாவை 48 கிலோ எடை பிரிவில் வீழ்த்தி இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் வென்றார். [4]

    இந்த இளம் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை தனது நாட்டிற்காக 2024 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளார். கலைவாணி[9]  தற்போது 48 கிலோ பிரிவில் போட்டியிடுகிறார்,  இந்த எடைப்பிரிவு, ஒலிம்பிக் போட்டிகளில் இல்லை. எனவே அவர் ஒலிம்பிக்கில் போட்டியிட கூடுதல் எடை பிரிவிற்கு முன்னேற வேண்டும்.

    குறிப்புகள் :[10]

http://www.indiaboxing.in/boxerdetails.php?regno=11803 [1]

https://scroll.in/field/909398/tamil-nadus-kalaivani-is-emerging-as-the-surprise-package-in-indian-womens-boxing [2]

https://www.deccanchronicle.com/sports/in-other-news/010220/packing-a-punch-3.html [3]

https://www.bbc.com/tamil/sport-55782296 (5)

https://www.fistosports.com/interview-skalaivani-boxing-keeps-my-head-straight-inspire-institute-for-sport-iis-ronald-simms-indian-boxing-talent [4]


வலது கை பெட்டித் தகவல்:

முழு பெயர்: எஸ்.கலைவாணி

விளையாட்டு: குத்துச்சண்டை (48 கிலோ) வகை

பிறந்த தேதி: 25 நவம்பர் 1999

பிறந்த இடம்: சென்னை, தமிழ்நாடு, இந்தியா

குடியுரிமை: இந்தியா

பிரதிநிதித்துவம்: இந்தியா

பதக்கங்கள்:

2012 இல்[11] , துணை இளையோர் பெண்கள் குத்துச்சண்டை வகையகத்தில் 1 வெண்கல பதக்கம்

2019 இல்[12]  ,மூத்த பெண்களின் தேசிய குத்துச்சண்டை வகையகத்தில் 1 வெள்ளிப் பதக்கம்

2019இல்[13] , காத்மாண்டு தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 1 தங்கப் பதக்கம்.[14]




[1]இவர்

[2]பிறந்தவர்

[3]பிறப்பைப் பற்றி இங்கு சொல்வதாக் இருந்தால் முதல் பத்தியில் சொல்லியிருக்கக் கூடாது. இரண்டும் ஒரே கருத்து என்பதால் ஏதாவது ஒன்றை நீக்கி விடலாம்.

[4]கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு அவசியமில்லாத செய்திகள்

[5]கட்டுரை எழுதியவரின் பார்வை போல இருக்கிறது. நடுநிலையாகத்தான் நாம் எழுத வேண்டும். அனைத்தையும் சுருக்கி இரண்டே வரியில் எழுதிச் செல்லலாம்.

[6]தெளிவில்லை

[7]கலைவாணியின் சகோதரரும் குத்துச்சண்டை வீர்ர் என்றாலும், குடும்ப நிதி காரணமாக, கலைவாணியின் அப்பா, சகோதரருக்கு செலவிடுவதை நிறுத்தி விட்டு, கலைவாணிக்குச் செலவிட்டு பயிறசி அளித்தார்.

[8]இளநிலை

[9]அவசியமில்லத வரிகள். பங்கேற்பவர்கள் அனைவருமே தங்கப்பதக்கத்திற்காகவே விளையாடுகிறார்கள்.

இந்த பேட்டியில் அல்லது இந்த செய்தித்தாளில் கலைவாணி கூறியுள்ளார் என்று ஆதாரத்தை இணைப்பதாக இருந்தால் இதைக்கூறலாம்.

[10]மதிப்புரை

பத்திரிகைகளுக்கு எழுதுவது என்றால் இக்கட்டுரை சரியே. ஆனால் விக்கிப்பீடியாவுக்கு எனில் நான் குறிப்பிட்டுள்ள நீக்கல்கள் அவசியமே.

[11]2012 ஆம் ஆண்டில்

[12]2019 ஆம் ஆண்டில்

[13]2019 ஆம் ஆண்டில்

[14]மதிப்புரை:

கட்டுரை நன்றாக எழுதப்பட்டுள்ளது. ஆங்கில வார்த்தைகளை தவிர்த்து  எழுதலாம்.  பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்களை கவனத்திற் கொள்க.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Robert_Arutco_James/மணல்தொட்டி&oldid=3108247" இலிருந்து மீள்விக்கப்பட்டது