பயனர்:Rmtry
மா ஒட்டு முறை பயிர் பெருக்கம்
மா ஓட்டுக்கட்டுதல்,
விதை மூலம் மா கன்று வளர்ப்பது எளிதாக இருந்தாலும் தாய் மரத்தின் பண்புகளை கன்று பெற்றிருக்காது. கன்றுகள் மூலம் வளர்க்கப்படுகிறபோது அது மகசூலுக்கு வர அதிக காலம் எடுத்துக்கொள்ளும் எனவே குறுகிய காலத்தில் அதிக மகசூலை பெற ஒட்டு கட்டுதல் மூலம் பயிர்பெருக்கம் செய்யப்படுகிறது.
வேர்க்கன்று உற்பத்தி செய்தல்,
மா வேர்க்கன்றுகளை உற்பத்தி செய்ய மா விதைகளை பழத்தில் இருந்து பிரித்து எடுத்தவுடன் மண்ணை நன்கு கொத்தி பாத்தி அமைத்து அதில் மா விதைகளை நடவு செய்ய வேண்டும். விதைகள் முளைத்தவுடன் அதை எடுத்து ஒரு பாலிதீன் பைகளில் நல்ல வளமான மண்(மண்+மணல் +எரு ) இட்டு மறு நடவு செய்ய வேண்டும் இதுபோல் நடவு செய்யப்பட்ட செடி 15முதல் 30 நாள் வயதை அடைந்தவுடன் ஒட்டு கட்ட பயன் படுத்தலாம்.
ஒட்டு கட்டுதல் , இரண்டு வேறுபட்ட செடிகளின் பாகங்களை ஒன்றாக சேர்த்து ஒட்டு கட்டி அவை இரண்டையும் சேர்த்து ஒரே செடியாக வளர்ப்பதுதான் ஓட்டுக்கட்டுதல் ஆகும் இதில் பலவகை உண்டு அதில்
முளைக்குருத்து ஒட்டு மா பயிர்பெருக்கம் செய்யும் போது ஓட்டுகள் இனைய அதிக நாட்டங்கள் மற்றும் வேலை எடுத்துக்கொள்ளும் . அனால் முளைக்குருத்து ஒட்டு விரைவில் ஓட்டுகள் இணைவதால் இம்முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது .
இதில் பயன்படுத்தக்கூடிய தண்டு குச்சியானது நமக்கு தேவையான ரகத்தின் குச்சியை பயன்படுத்தலாம், வேர்க்குச்சியானது எதாவது ஒரு ரகத்தின் விதையில் இருந்து முளைத்த செடியை பயன்படுத்தலாம் இந்த குச்சியின் தடிமன் 6mm அளவுக்கு குறையாமல் இருக்க வேண்டும் , வேர்க்குச்சியின் மைய பகுதியில் இருந்து கீழ்நோக்கி 3 அல்லது 4cm V வடிவில் இரண்டாக பிளக்க வேண்டும் பிறகு தண்டு குச்சியை வேர் குச்சியுடன் பொருந்தும்படி ஆப்பு போல் இருபுறமும் சீவி வேர் குச்சியுடன் சேர்த்து ஒரு பாலிதீன் நாடா கொண்டு இறுக்கமாக கட்டிவிட வேண்டும். இவ்வாறு ஒட்டு கட்டிய செடியை ஒரு நிழலான இடத்தில் வைத்து ஈரம் காயாமல் தண்ணீர் ஊற்றி வந்தால் ஒரு வாரத்திற்குள் தண்டு குச்சியில் புதிய தளிர் வந்துவிடும் இதை ஒரு மாத காலத்திற்கு நிழலிலேயே வைத்திருந்து பிறகு நடவிற்கு பயன்படுத்தலாம்
நன்றி