பயனர்:Rajesh Krithika/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

                                                 பாசிர்  ரிஸ்         

பாசிர் ரிஸ் சிங்கப்பூரில் உள்ள கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.  அங்கே ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் உள்ளன. கடந்த காலத்தில், பாசிர் ரிஸ், 'Passier Reis' என பெயரிடப்பட்ட ஒரு கிராமமாக விளங்கியது. மேலும் இது உபின் கிராமத்திற்கு எதிரே  வெள்ளை கடலோரத்தில்  நீண்டநெடிய பாதையாக உள்ளது .பாசிர் ரிஸ் என்றால் மலாய் மொழியில் 'வெள்ளை மணல்' என்று பொருள். பாசிர் ரிஸ் கடந்த காலத்தில் பல்வேறு தோட்டங்களால்  நிறைந்து இருந்தது.   இப்போது, பாசிர் ரிஸ் மற்றும்   பாசிர் ரிஸின் கீழ் உள்ள பொங்கோல் சமூக மன்றம்  ஆகியவற்றின் மொத்த பரப்பளவு 15.02km2 உள்ளது. அது 3.18km மொத்த குடியிருப்பு பகுதிகளை  உள்ளடக்கியது. பாசிர் ரிஸ் மொத்த மக்கள் தொகை 139890 ஆக உள்ளது.

15 அக்கம்பக்க பள்ளிகள் மற்றும் ஒரு இளநிலைக் கல்லூரியும் உள்ளன. அதோடு  7 வழிபாடு இடங்கள் உள்ளன. பொழுதுபோக்குக்கு, 7 வணிக வளாகங்கள் மற்றும் 2 சமூக மன்றங்கள் உள்ளன. 7 வணிக வளாகங்கள் மத்தியில், மிகவும் பிரபலமான கடைத்தொகுதி டவுன்டவுன் ஈஸ்ட் ஆகும். அங்கு குழந்தைகளுக்கான நீர் சறுக்கு விளையாட்டு, பந்துவீச்சு, உணவகங்கள் மற்றும்  குழந்தைகள் விளையாட்டு கூடம் போன்றவற்றை கொண்டுள்ளது. அங்கு சுற்றுப்பயணிகள் தங்குவதற்கான இடமும் உள்ளது. டவுன்டவுன் ஈஸ்ட் கூடுதல் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக புதுப்பிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.   

நீர் சறுக்கு இடத்தில் பல புதிய  தண்ணீர் சரிவுகள் கொண்ட விளையாட்டு இடங்களை  அறிமுகப்படுத்தியுள்ளது.   இதனால் இங்கு வரும்   பார்வையாளர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஒயிட் சான்ட்ஸிலுள்ள தேசிய பொது நூலகம் புணரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.  

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajesh_Krithika/மணல்தொட்டி&oldid=2250858" இலிருந்து மீள்விக்கப்பட்டது