பயனர்:Rajarajan1/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான விக்கிப்பீடியா பயிற்சியின்போது இக்கட்டுரை தொடங்கப்பட்டது

குருவரெட்டியூர்[தொகு]

அமைவிடம்[தொகு]

இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் அந்தியூர் வட்டத்தில் அமைந்துள்ளது. பெயர்க் காரணம்: பவானி சட்டமன்றத் தொகுதியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் குருமூர்த்தி அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் பெயர் குருவரெட்டியார் எனவும், அவரால் உருவாக்கப்பட்ட ஊர் என இவ்வூரில் வாழும் பெரியவர்கள் காரணம் கூறுவர். தொழில்: இப்பகுதி மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம், நெசவு, துணி வியாபாரம், மலைக் கனிகள் விற்பனை ஆகியன இருக்கின்றது. கல்விக்கூடங்கள்:இவ்வூரில் நூறாண்டுகளுக்கு முன்பே துவக்கப்பட்ட துவக்கப்பள்ளி உள்ளது.இப்பள்ளியானது 2015ஆம் ஆண்டில் மாவட்டத்தில் சிறந்த துவக்கப் பள்ளிக்கான சான்று மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெற்றுள்ளது.அரசினர் மேல்நிலைப் பள்ளியும் இங்கு ஆரம்ப காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றன. பிற சிறப்புகள்: இவ்வூரின் வடகிழக்கே பாலமலை அமைந்துள்ளது.அம்மலைகளின் தொடர்ச்சியில் ஏழாவது மலையின் உச்சியில் இந்து மதத் தெய்வங்களான சிவனும், பெருமாலும் சுயம்புவாக இருக்கும் சித்தேஸ்வரன் கோவில் உள்ளது.இக்கோவிலுக்குச் செல்ல ஆண்டுதோறும் 10000 மக்கள் குருவரெட்டியூர் வருகின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைக்கு கிழக்கு திசையில் 10மைல்க்கல் தொலைவில் உள்ளது. இவ்வூருக்கு அருகில் காவிரி ஆறு பாய்ந்தோடுகின்றது. பல மத,இன மக்கள் இணக்கமாக வாழும் இந்திய கிராமங்களில் இதுவும் ஒன்று. ஆரம்பக் கல்விக்கூடம்,அரசு மேல்நிலைப் பள்ளி,நூலகம்,வாரச்சந்தை,அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய அடிப்படை வசதிகள் அனைத்தும் பெற்றுள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajarajan1/மணல்தொட்டி&oldid=1945739" இலிருந்து மீள்விக்கப்பட்டது