பயனர்:Pupsck/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தந்தை பெரியார் அய்யா பெரியார் வாழ்க! அவர் இல்லை என்றால் அறிவில்லை ஆக்கமில்லை அவர் இல்லை என்றால் அறிஞர் பிறப்பே இல்லை! -கவிஞர் கண்ணதாசன். அவரால் மானமும் அறிவும் பெற்றோம். அவரால்தான் வேலை வாய்ப்பும் பெற்றோம்.!

அனைவருக்கும் அனைத்தும் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம். –புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். பெரியார் பேசுகிறார்:- என்னுடைய இயக்கம் மக்கள் இயக்கம். . மனிதநேய இயக்கம் ;பகுத்தறிவு இயக்கம் .அதற்கு பெயர்தான் சமதர்மம்;மனித தர்மம்; சுயமரியாதை. பிறவி பேதம் மனிதர்களை பிராமணன் ,சத்திரியன், வைசியன் ,சூத்திரன் என்று நான்கு வர்ணங்களாகப் பிரித்து பிராமணர்களுக்கு சலுகையும் , சூத்திரர்களுக்கு அநீதியும் வழங்குவது மனுதர்மம்.ஆண் எஜமான் என்றும் பெண் அடிமை என்றும் பிரித்து அநீதி வழங்குவதுதான் மனுநீதி.இப்படிப்பட்ட பிறவி பேதத்தை ஒழித்து வெற்றி கண்டவர்தான் பெரியார். பொதுத்தொண்டு தந்தை பெரியாரைப் பொறுத்தவரைப் பொதுவாழ்க்கைக்கு வருவோர்க்கு இருக்கவேண்டிய சூழல்களாக இரண்டைக் குறிப்பிடுகிறார். ஒன்று அவர்கள் செய்யும் பொதுநலப்பணியால் பிழைப்பவர்களாக இருக்கக்கூடாது . மற்றொன்று அவர்கள் செய்யும் பொதுப்பணியில் பதவி, பெருமை , இலாகம் ,தனி மரியாதை போன்ற எந்த பலனும் பெற நினைக்கக்கூடாது. மேலும் பொதுத் தொண்டர் என்பவர் நேரம் , காலம் , தனிப்பட்ட மான அவமானம் என்று எதையும் பார்க்கக்கூடாது. ஒழுக்கம் ஒழுக்கம் என்பது ஒருவர், “மற்றவர் தம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறரோ அது போலவே தாமும் மற்றவர்களிடம் நடந்துகொள்ள வேண்டும்.” கடவுள் ,மதம், பக்தி முதலியவை தனி நம்பிக்கைகள் , அவை இல்லாவிட்டால் நட்டமில்லை. ஒழுக்கம், நாணயம், உண்மை ஆகியவை பொதுச்சொத்துக்கள் . நாணயமும் , உண்மையும் அற்றவன் பிறரை ஏமாற்றித் தொல்லையும் வேதனையும் உண்டாக்குவான். நாகரீகம் நாகரீகம் என்பது மனிதநேயமே. தனக்கு என்னென்ன வசதிகள் , நன்மைகள், பெருமைகள் தேவை என்று கருதப்படுகிறதோ , அவற்றை சமூகத்திலுள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரீகமாகும்.


பெண்ணுரிமை பெண்கள் தனக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பதவி, சொத்து ஆகியவற்றில் சம உரிமை பெறுவதும், மணமகனைத் தேர்வு செய்யும் உரிமை, கருத்தடை செய்து கொள்ளுதல், மணவிலக்கு பெறும் உரிமை ,மறுமணம் செய்யும் உரிமை போன்றவையே பெண் விடுதலைக்கான வழிகள் ஆகும். கற்பு என்பது சுகாதாரம், உடல் நலம், பொதுஒழுக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இருபாலருக்குமானதாக இருக்கவேண்டும்.மேலும், பெண்களை படிக்க வைத்துவிட்டால் அவர்கள் தங்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்வதுடன் ஆண்களின் கற்பையும் காப்பாற்றுவார்கள். சுயமரியாதை தத்துவம் சுயமரியாதையை மக்கள் தங்கள் உயிருக்கு சமமானதாக இருக்கக் கருதவேண்டும். சுயமரியாதைக் கருத்துகள் உலகம் உள்ளவரை காக்கப்படவேண்டிய கருத்துப் பெட்டகமாகும். “எந்தக் காரியமானாலும் காரண காரியம் அறிந்து செய். சரியா, தவறா என்பதை அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் விட்டுவிடு.எந்த நிர்பந்த சமயத்திலும் அதன் முடிவுக்கு மரியாதை கொடு”என்பதே தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவு கருத்துகளாகும். -தா.கனகராசு ,தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, சின்னகண்ணாடி ,குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கடலூர் மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pupsck/மணல்தொட்டி&oldid=1975532" இலிருந்து மீள்விக்கப்பட்டது