பயனர்:PUVI M.I. Rahmathullah/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியாரின் வரலாற்று நூலில் வரலாற்றுத் தவறு![தொகு]

பொறுப்பு வாய்ந்தவர்களை பகிரங்கமாகத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகும்[தொகு]

காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை ஹாஜியார் வாழ்வும் பணியும் என்ற அன்னாரது வாழ்க்கை வரலாற்று நூல் கடந்த 2014 மார்ச் மாதம் 28ம் திகதி காத்தான்குடியில் மிகவும் சிறப்பாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்நூல் வெளியீட்டுக்குழுவின் ஆலோசகராக சம்மேளனத்தின் பிரதித் தலைவரும், மூத்த பட்டதாரியுமாகிய சட்டத்தரணி அல்ஹாஜ் ஏ.எல்.அப்துல் ஜவாத் பி.ஏ., எல்.எல்.பி அவர்களும், தலைவராக 'கவிமணி' அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி) அவர்களும், செயலாளராக மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபர் ஜனாப் எஸ்.எல்.ஏ. கபூர் பி.காம், பொருளாளராக பிரதேசக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் எஸ்.எம்.எம். சுபைர் பி.ஏ ஆகியோருடன் பின்வரும் பிரமுகர்களும் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

காத்தான்குடி பிரதேசத்தின் மூத்த பிரஜையாக மதிக்கப்படும் அல்ஹாஜ் எம்.ஐ.ஏ. முகிதீன் ஜே.பி, சம்மேளனப் பிரமுகர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ. பஷீர் ஜே.பி (அஷ்ஹாபியா), அல்ஹாஜ் மௌலவி ஏ.எம். அப்துல் காதர் (பலாஹி) ஜே.பி, வார உரைகல்லில் தனது பெயர் பிரசுரிக்கப்படுவதற்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெற்றுள்ள ஒருவர், சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.ரி.எம். காலித் ஜே.பி, காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். உசனார் ஜே.பி, ஓய்வு பெற்ற ஆசிரியர் அல்ஹாஜ் எம்.எச். முகம்மத் ஜே.பி, சம்மேளனச் செயலாளர் அல்ஹாஜ் மௌலவி எஸ்.எச்.எம். றமீஸ் (ஜமாலீ) பி.ஏ, அல்ஹாஜ் எம்.ஐ.எம். முஸ்தபா, முதலாம் குறிச்சி பெரிய மீரா ஜும்ஆப்பள்ளிவாசலின் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் (CC), ப.நோ.கூ. சங்கத் தலைவர் ஜனாப் எம்.ஐ.எம். தையூப் ஜே.பி ஆகியோரே இந்நூலாக்கக் குழுவில் இடம்பெற்ற பிரதேசத்தின் பிரமுகர்களும், புத்திஜீவிகளுமாகும்.

இந்நூலிற்கு, அஷ்ஷஹீத் அஹ்மத் லெப்பை அவர்களது அரசியல், சமூகப் பணிகள் குறித்து தகவல் வழங்கியவராக காத்தான்குடி பட்டின ஆட்சி மன்றத்தின் முன்னாள் உப தலைவர் அல்ஹாஜ் எம்.பீ. அப்துல் மஜீத் (7ம் வாட்) அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்போது விடயத்திற்கு வரலாம். இந்த நூலானதுஅஷ்ஷஹீத் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூல் மாத்திரமன்றி நமது பிரதேசத்தினதும், மட்டக்களப்பு மாவட்டத்தினதும், கிழக்கு மாகாணத்தினதும் சமய, அரசியல், கலாச்சார வரலாறுகளையும் உள்ளடக்கியுள்ளது.

மேற்குறிப்பிட்ட நமது பிரதேசத்தின் சமய, சமூக, அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள் அனைவரும் ஏறத்தாள ஓராண்டு காலமாக மிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு தொகுத்து வெளியிடப்பட்டுள்ள இந்நூலில் ஏதாயினும் தவறுகள் இடம்பெற்றிருக்குமாயின் அது இப்பணியில் சம்பந்தப்பட்ட அனைவருக்குமே அவர்களின் கல்விப் புலமைக்கு வடுவாகவும், இச்சமூகத்திற்கு பிழையான வரலாறைச் சமர்ப்பித்ததாகவும் அமைந்து விடும் என்பதனால் கீழ்வரும் எனது இரு வினாக்களுக்கும் இந்நூலாக்கக் குழுவினர் தமது பொறுப்புவாய்ந்த பதிலை பகிரங்கமாகத் தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

மேற்படி நூலின் 06ம் பக்கத்தில் 'தல்கொடபிட்டிய தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு' எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள 2ம் பந்தியில், 1952ம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் தமிழ்ர்களின் வாக்குகள் சிதறுண்டதால் முஸ்லிம் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து இரு தடவைகளிலும் தமிழர்கள் தமது பிரதிநிதியை இழந்து விட்டதால் அவர்கள் ஆத்திரமுற்றனர். தமிழ் முஸ்லிம் கலவரம் வெடித்தது... எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவல் முற்றிலும் பிழையானதாகும்.

அஷ்ஷஹீத் அகமது லெப்பை ஹாஜியார் அவர்களின் வாழ்க்கைத் தொடர் காத்தான்குடி மண் கண்ட எண் வரலாற்று நூலாசிரியர் மதிப்புக்குரிய ஆசான் அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் எம்.ஏ., ஜே.பி அவர்களால் எழுதப்பட்டு எனது வார உரைகல் பத்திரிகையில் தொடராகப் பிரசுரித்து வந்தபோது, 13.12.2013ல் வெளியான 284வது பதிவில் இடம்பெற்ற 07வது பாகத்தில் தேர்தல் தொகுதி நிர்ணய ஆணைக்குழு முன் சாட்சியம் எனும் தலைப்பில் மட்டக்களப்புத் தொகுதியில் நடைபெற்ற முதலாம், இரண்டாம் பொதுத் தேர்தல்கள் தொடர்பில் பின்வருமாறு சரியான வரலாறை வெளியிட்டிருந்தேன்.

...இந்நிலையில் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்றத் தேர்தலில் 5 தமிழ் வேட்பாளர்களும், ஒரேயொரு முஸ்லிம் வேட்பாளராக முதலியார் ஏ. சின்னலெப்பை (அ.ம.சி. அவர்களின் மகன்) அவர்களும் போட்டியிட்டனர். தமிழ் வாக்காளர்களின் வாக்குகள் ஐந்தாகப் பிரித்தளிக்கப்பட்ட நிலையில் முஸ்லிம் வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தமது சமூகப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரே குறிக்கோளுடன் முதலியர் ஏ. சின்னலெப்பை அவர்களுக்கு தமது வாக்குகளை அளித்ததன் காரணமாக அவர் வெற்றி பெற்றார்.

(இவரே நாடாளுமன்றத்தில் இலங்கையின் தேசியக் கொடியான சிங்கக் கொடியைப் பிரேரித்தவராகும். அதனை பட்டிருப்புத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எதிர்மனசிங்கம் ஆதரித்தார். இவ்விரு சிறுபான்மை இனப் பிரதிநிதிகளுக்கும் சிங்களப் பேரரசு பரிசில்களை வழங்கியது.)

இதன் பின்னர் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் வேட்பாளரைத் தோல்வியடையச் செய்து... என அவ்வரலாறு தொடர்ந்து செல்கின்றது.

எனவே, எனது கேள்வி என்னவென்றால்,

  • '1952ம் ஆண்டில் நடைபெற்ற நாட்டின் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தலிலும் முஸ்லிம் ஒருவரே தெரிவு செய்யப்பட்டார்' என்ற இந்நூலாக்கக் குழுவினரின் - அதனை வெளியிட்டு வைத்த சம்மேளனத்தின் வரலாற்றுத் தகவல்தான் உண்மையானதும், சரியானதுமாயின் 1952ம் ஆண்டில் அவ்வாறு மட்டக்களப்புத் தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதி யார்?
  • 'தொடர்ந்து இரு தடவைகளிலும் தமிழர்கள் தமது பிரதிநிதியை இழந்து விட்டதால் அவர்கள் ஆத்திரமுற்றனர். தமிழ் முஸ்லிம் கலவரம் வெடித்தது..' என்ற இந்நூலாக்கக் குழுவினரின் - அதனை வெளியிட்டு வைத்த சம்மேளனத்தின் வரலாற்றுத் தகவல்தான் உண்மையானதும், சரியானதுமாயின் மட்டக்களப்புத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக திரு. ஆர்.பி.எம். கதிர்காமர் என்பவர் எந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டார்?


இவ்விரு வினாக்களுக்கும் சமூகப் பொறுப்புமிக்க இவ்வூரின் சிவில் சமூகத் தலைமைத்துவ நிறுவனமாகிய சம்மேளன நிர்வாகமும், அஷ்ஷஹீத் அவர்களின் 'வாழ்வும் பணியும்' வரலாற்று நூலைத் தொகுத்தளித்த நமது பிரதேசத்தின் பல பட்டங்களையும், கல்வித் தகைமைகளையும், மார்க்க அறிவையும், அரசியல் வரலாறுகளையும் ஆய்ந்தறிந்த கல்விமான்களும் மிக்க அக்கறையுடன் மிக விரைவாகவும், பகிரங்கமாகவும் பதிலளிக்க வேண்டுமென வினயமுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம், புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் (பிரதம ஆசிரியர் - வார உரைகல்)