பயனர்:PRASATH9909/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவனந்தி முனிவர் வழிபட்ட கோவில் அமைவிடம்[தொகு]

பவனந்தி முனிவர் ஆலயம் சீனாபுரம்
பவனந்தி முனிவர் ஆலயம் சீனாபுரம்
பவனந்தி முனிவர் ஆலயம் சீனாபுரம்

"நன்னூல்" எழுதிய பவனந்தி முனிவர் வழிபட்ட சமணர் ஆலயம் ஒன்று தமிழகத்தில் , ஈரோடு மாவட்டத்தில் , பெருந்துறை வட்டத்தில் , சீனாபுரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சீனாபுரத்தில் அமையப்பட்டுள்ளது.

நூல் குறிப்பு[தொகு]

ஏறத்தாழ, கி.மு.500இல் பிறந்த தொல்காப்பியத்திற்குப் பின்னால் அதிலுள்ள இலக்கண அமைப்புகளை விரிவுபடுத்தும் வகையிலும், வேண்டாதன விடுத்து வேண்டுவனவற்றைச் சிறப்பித்துச் சொல்லும் வகையிலும் பல இலக்கண நூல்கள் வெளிவந்துள்ளன. புறப்பொருளின் விரிவாக ‘புறப்பொருள் வெண்பா மாலை’யும்,அகப்பொருளின் விரிவாக ‘நம்பியகப் பொருளும்’, யாப்பு அணி தொடர்பாக ‘யாப்பருங்கலக் காரிகை’, தண்டியலங்காரம்’ ஆகியவையும் வெளிவந்துள்ளன. எழுத்து,சொல் ஆகியவற்றின் இலக்கணக் கூறுகளை உள்ளடக்கிய நூலாக ‘நன்னூல்’ வெளிவந்துள்ளது. காலமுறைப்படி இது 13ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிவந்ததெனலாம். பவணந்தி முனிவர் ‘தொல்காப்பியம் பிறந்து’ ஏறத்தாழ 1700 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நூலை எழுதியுள்ளார். சொல்லில் நயம், பொருள் வளம், முறையில் ஒழுங்கு, நடையில் எளிமை முதலிய இயல்புகள் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற நூல். அதிகாரம், இயல், சூத்திரம் ஆகியவற்றின் தொகையிலும் நூற்பாக்களின் அடியளவிலும் தொல்காப்பியத்தை விட நன்னூல் மிகவும் சுருங்கியது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PRASATH9909/மணல்தொட்டி&oldid=1945858" இலிருந்து மீள்விக்கப்பட்டது