பயனர்:PAAVENDHANBHARATHI/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[தமிழ்நாடு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறையின்போது உருவாக்கப்பட்டது][தொகு]

புறச்செவி

புறச்செவியில் செவி மடலும் செவிப்பறையை நோக்கிச் செல்லும் செவிக்குழாயும் அமைந்துள்ளன. செவி மடலால் காதுக்கு அழகும் பாதுகாப்பும் தருவதைத் தவிர வேறு பயன் இல்லை. ஆடு மாடு போன்ற பிற உயிரினங்களால், தங்கள் காது மடலைத் திருப்பியும் வளைத்தும் வரும் ஒலியைச் சேகரித்து உள்ளே அனுப்ப இயலும். ஆனால் மனிதனின் காதுகளை தாமே வளைக்கவோ திருப்பவோ முடியாது. இதனால் ஒலி வரும் திக்கை நோக்கிச் செவியைத் திருப்பி ஒலியைப் பெற நேர்கிறது. காது மடலிலிருந்து உள்நோக்கிச் செல்லும் செவிக்குழாய் சுமார் இரண்டு செ. மீ நீளமுள்ளது. இதுவே ஒலியை செவிப்பறை நோக்கிக் கொண்டு செல்கிறது. செவிப்பறை சவ்வு தடித்துப் போனாலோ, நலிவடைந்து போனாலோ கேட்கும் திறன் பாதிக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:PAAVENDHANBHARATHI/மணல்தொட்டி&oldid=1944771" இலிருந்து மீள்விக்கப்பட்டது