பயனர்:P.Palkaman

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூப்பர் என்கிற முத்தரையர்கள் கொண்டாடும் ஏழு ஊர் திருவிழா பல ஆண்டுகளுக்கு முன்னர் , ஒரு முதிர்ந்த பெண்மனி தன் பெண் பிள்ளைகள் ஏழு பேரையும் அழைத்துக் கொண்டு தெற்கு நோக்கி வருகிறாள், அவள் இடம்பெயர்விற்கான காரணம் எதுவென்பது சரிவரத் தெரியாவிட்டாலும் தன் பிள்ளைகள் ஏழு பேரையும் யாரோ சிலரிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே அவள் தெற்கு நோக்கி நகர வேண்டியதாயிற்று...

வளம் கொழிக்கும் மதுரையைக் கடந்து , வறண்டு கிடந்த தெக்கத்தி மண்ணில் அவள் கால் பதிக்கிறாள். அதுவரையில் வேட்டுவ மூப்பர்களின் வேட்டையையும், களவையும் தவிர வேறெதையும் பார்த்தறியாத அந்த தரிசுக் காடு பெண்மனியின் வரவிற்குப் பிறகு மழையில் நனைந்து பசுமை பூக்கிறது, கருங்கல் நிறைந்த கருமணல் தரையில் விவசாயம் செழிப்படைகிறது.

அதன் மூலம்  அங்கிருந்த வேட்டைக் குடிகள் வேளாண் 'குடியானவர்'களாகிறார்கள், தங்களின்  இந்த மாறுதலுக்குக் காரணம் பெண்மனியின் வரவுதான் என்று நம்பிய அந்த மூப்பர்கள் கிழவிக்கு நன்றிக் கடன் செலுத்த  விரும்பி அவளின் ஏழு பிள்ளைகளுக்கும் தகுந்த வரன் பார்த்து ஏழு ஊர்களில் மணம் முடித்துக்  கொடுக்கின்றனர் ( முத்தாலம்மன் கோயில் புராணத்தில் திருமணம்  வேண்டாமென்று சொல்லி அந்தக் கன்னியர் எழுவரும்  தெய்வமாகி விட்டதாகக் கூறப்படுகிறது) . 

அவ்வாறு ஏழு பிள்ளைகளின் வழிவந்தவர்கள்தான்

அம்மாபட்டி,

கல்லுப்பட்டி , வன்னியவலையம் பட்டி என்று அறியப்படுகின்ற வன்னிவேலம்பட்டி,

கிளாங்குளம்,

சத்திரப்பட்டி,

காடனேரி,

தேவங்குறிச்சி எனும் ஈசுவரப்பேரேரி

என்ற ஏழு கிராமங்களில் வாழ்ந்து வருகின்ற 'முத்தரைய மூப்பமார்கள் ' .

கன்னியர் ஏழுபேரையும் அழைத்துக் கொண்டு 'தாய்' முதலில் வந்து சேர்ந்த இடம் அம்மாபட்டி என்பதால் ஏழூர் மக்களின் தாய்க் கிராமமாக அம்மாபட்டி அறியப்படுகின்றது. தாயை மூத்த வலைச்சி என்றும் முத்தாலம்மன் என்றும் தாய்த் தெய்வமாக்கி கன்னிகள் எழுவருக்கும் அம்மாப்பட்டியில் சிலை வடித்து திருவிழாவின்போது ஆறு கிராம முத்தரைய மூப்பர்களும் அம்மாபட்டிக்கு தலையில் சப்பரத்தைச் சுமந்து வந்து தங்கள் குல முன்னவளை தாய்க் கிராமத்திலிருந்து தன் கிராமத்திற்கு அழைத்துக் கொண்டு ஊர் திரும்புகிறார்கள்... பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு தன் பெண்களை அம்மாபட்டிக்காரர்கள் வழியனுப்பி வைக்கிற நிகழ்வுதான் திருவிழாவின் முதன்மையான அம்சமாக சுட்டப்படுகிறது.

மேற்கண்ட ஏழு கிராமத்திலும் பின்னாட்களில் குடியேறிய ஒருசிலரைத் தவிர அனைவருமே முத்தரையர்கள்தான், வன்னிய வலையர் மற்றும் கள்ள வலையர் என்ற இருபெரும் கூட்டிணைவுகளாக ஏழூர் மக்கள் திரள் இருக்கிறது.

ஒரு தாய் வழி வந்த ஏழூர் முத்தரையரும் வீரத்திற்குப் பெயர் போனவர்கள். 'கள்ள வலையர் 'என்று வழங்கப்பட்டாலும் சாப்டூர், பேரையூர் உள்ளிட்ட சமீன்களுக்கு பாளையக் காவலர்களாகவும் , திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு கோயில் காவலர்களாகவும் இவர்கள் முன்னாட்களில் இருந்தவர்கள்.

குறிப்பாக 'வன்னிவேலம்பட்டி' கிராமம் சில தனிச் சிறப்புகளையும் ஏழூர் நாட்டுக்குள் பெற்றுத் திகழ்கிறது. எவராலும் அடக்க முடியாததாகக் கருதப்பட்ட பாண்டிய மன்னனின் முரட்டுக் கிடாயை அடக்கி அதற்கு வெகுமதியாக பாண்டியனை தங்கள் ஊரில் கிணறு வெட்டிக் கொடுக்கச் செய்துள்ளார் முன்பு ஒரு வன்னி வலையர், பாண்டியன் கிணறு எனும் பெயரில் வன்னிவேலம்பட்டியில் இருக்கும் அந்தக் கிணறுதான் சுற்றுப் பத்துக் கிராமங்களுக்கு இன்றைக்கும் தண்ணீர் ஊற்று! மேலும் இன்றைய நிலையில் பல பொதுவுடைமைச் சித்தாந்தப் போராளிகளையும் வன்னிவேலம்பட்டி உருவாக்கி மதுரை மாவட்டத்தில் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.

  1. ஏழூர்_மூப்பர் வரலாறு.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:P.Palkaman&oldid=2438103" இலிருந்து மீள்விக்கப்பட்டது